S.Shivavinoban's Thought
என் சிந்தனைகள்.
தெரியாததைத் தெரிந்துகொள்ள முதலில்,
புரியாததைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நடக்க விரும்பினால் முதலில் பறக்க ஆசைகொள்.
அப்படியாயின் பறக்கவிரும்பினால்?

உயரப் பார்க்கும் உனக்கு, உலகம் பதிவில்த் தெரியும் பார்.
பாதம் வானில் நடக்கும் வா.

மேகம் அழுதால்த் தான் - பூமியின் தாகம் தீரும்.
கண்கள் கலங்க, - மனப் புண்கள் ஆறும்.

அனைத்தையும் தொலைத்துவிடு, சோகமே தீண்டாது.
எங்கு தொலைத்தாய் என்பதை மறந்துவிடு.

ஒளிக்குப் பின்னால்த் தான் இருளும் மறைந்துண்டு.
உனக்கு உள்ளே தான் ஒளியும் ஒளிந்துண்டு.

உன்னைச் சுற்றிக்கொண்டே ஒவ்வொன்றும் உண்டு.
விழித்தால் நீ விபரம் புரிவாய்.