About S.Shivavinoban
My story
நான் யார்?
நானென்று யாருமில்லை, நீ என்றும் யாரும் இல்லை. நான் என்றோ நீயாகவும், நீ என்றோ நானாகவும் இருந்திருப்போம்.
வையகத்தின் விளையாட்டில், வந்து வந்து தோற்பதுதான், எம்முடைய நோக்கமென்றால்! பிறந்து இறந்து சுழன்று கொண்டே இருப்போம்.
அச்சுழற்சிக்கும், முடிவுக்கான முயற்சிக்கும் முற்றுப்புள்ளி தான் நாம்.
முற்றுப்புள்ளி கால்வெட்டுப் புள்ளியாக மாற, காலங்கள் கடந்தோடிக்கொண்டிருக்கின்றது.
நான் யார்?
What can I do for you?
உன்னால் எப்படி உன்னை முன்னேற்றலாம் என்பதைக் காண்பிப்பேன்.
நான் ஒரு பேச்சாளராக!
கேட்பதில் உங்களுக்குத் தேவையும், பேசுவதில் எனக்கு தேர்வையும் தந்துள்ள இறைவனின் சித்தத்தில், சிந்தனைப் பேச்சாளன்.
நான் ஒரு எழுத்தாளராக!
அள்ள அள்ள அதிகரிக்கும் தமிழ் அமிர்தத்தில், கிள்ளிக் கிள்ளிக் குடிக்கும் எழுத்துச் சுவை கொண்டவன்.
நான் ஒரு கலைஞனாக!
கலையென்ற வலையுள் கட்டுடாமல், கட்டிட நடிக்கும் கலைஞன்.