Month: August 2021

நடைத் தெரப்பியும் பூமிச்சிகிச்சையும்.

சிகிச்சை என்பதோ தெரப்பி என்பதோ வைத்தியசாலைகளில் மட்டும் கொடுக்கப்படும் பயிற்சி அல்ல. நாம் நம் அன்றாட வாழ்க்கையில் முயற்சித்தால்,அனைத்து சிகிச்சைகளையும் இந்த இயற்கை எமக்காக வைத்துள்ளது என்பதை உணர முடியும், அத்தோடு அனுபவிக்கவும் முடியும். உதாரணத்திற்கு 

வெறும் காலுடன் நிலத்தில் நாம் நடக்கும் போது பூமியின் இயற்கை ஆற்றலை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாயுள்ளது புற்கள் நிறைந்த நிலம் மணல் தரை சிறு கற்கள் உள்ள நிலம் ஆகியன மனிதன் நடப்பதற்கு சிறந்த இடம். பாதணி அணியாது வெறும் கால்கள் இப்படியான பூமியில் படும்போது தோல்கள் மூலம் எலெக்ட்ரான்கள் ஈர்க்கப்பட்டு ஒக்சிசன் ஏற்றப்பட்டு தோல்களில் ஏற்படும் இறந்த செல்கள் நீக்கப்படும்.
அத்தோடு உயர் இரத்த அழுத்தம் குறைவதோடு குறை இரத்த அழுத்தம் மேம்படும். சுவாசப் பிரச்சனை மற்றும் ஆர்த்தரைடீஸ் நோய்கள் குணமடையும். கடல் ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மணல் பரப்பு நடைத் தெரப்பிக்கு சிறந்த இடமாகும். கடல் பரப்பில் உப்பும் சேர்ந்திருக்கும் உப்பின் மக்னீசியம் அளவு அதிகமாய் இருக்கும். இவை காலில் தோல் பரப்பில் நோய் தாக்காது உறுதுணையாகும் மருந்தாகக் கூட அமையும். உப்பு ஒரு இயற்கையான நோய் நிவாரணி என்பது நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களிற்கே நன்றாகத் தெரியும். கடற்கரை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களிற்காகவும் வீட்டுக்கு வெளியில் செல்ல முடியாத சூழலிலிருப்பவர்களிற்காகவும் சிறப்பு நில விரிப்புகள் காலுறைகள் கையுறைகள் போன்ற தயாரிப்புகள் சந்தைக்கு வந்துவிட்டன. இந்த நில விரிப்புகளை மேசை மேலும் கதிரைக்கு கீழே நிலத்திலும் விரித்து விட்டோமானால், உள்ளங்கைகளையும் பாதங்களையும் அதில் வைத்து அழுத்தம் கொடுக்கலாம். கம்பியூட்டரில் வேலை செய்யும் போது, உடலில் இருந்து வெளிப்படும் காந்த அலைகளின் தாக்கத்தை இதன்மூலம் குறைத்துக்கொள்ளலாம்.


எமக்கு இந்த நடை தெரப்பி மூலம் மன அழுத்தம் குறைவதனால் மன அமைதி கிடைக்கின்றது நாம் நல்ல மனநிலையுடன் எமது அன்றாட வேலைகளை விருப்புடன் செய்து சந்தோசமக வாழ முடியும்.
மணல் மண்ணில் வீடு கட்டி விளையாடுவது, களிமண் பொம்மைகள் செய்வது, மண்ணில் குழி தோண்டி செடி நடுவது ஆகியன எல்லாம் சிறந்த பூமிச்சிகிச்சை ஆகும். எப்போதும் காலணிகள் உடனே இருப்பது குளிரூட்டப்பட்ட அறையில் நாள் முழுவதும் இருப்பது சிறிய தூரம் பயணிக்க கூட வாகனங்களை உபயோகிப்பது போன்ற இன்றைய காலகட்டத்தில், நாம் நாகரிகம் என்ற பெயரில் பூமிக்கும் எமக்கும் ஆன தொடர்பை தவிர்த்துக் கொள்வதனால் நாட்பட்ட நோய்களை வரவழைத்துக் கொள்கின்றோம் இந்த நடைதெரப்பி மற்றும் பூமிச்சிகிச்சை என்பன உடலில் உள்ள மற்றும் மனதில் உள்ள பல நோய்களுக்கு நல்ல மருந்தாக அமையும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!