நாட்டின் தலைவர் என்றவகையில் நியாயமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியது அவசியம் என அவர் உணர்ந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளைக் களைய வேண்டும் என்றால் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு சரியான வகையில் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தீர்ப்பணமாக இருந்தார்.
பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை என்பன நாட்டில் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தது. பாடசாலை மாணவிகள், சிறிய பெண்குழந்தைகள் உட்பட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தனர். கொலைகளும் நடந்தேறின.
தங்கு தடையின்றி போதைவஸ்து வியாபாரம் தலை விரித்து ஆடியதனால் தான் மேற்படி குற்றங்கள் மேற்படி குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை உணர்ந்து கொண்ட தலைவர் போதை வாஸ்து குற்றவாளிகளிற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்னும் சட்டத்தை விதித்தார்.
பல தொண்டு நிறுவனர் மற்றும் அயல் நாட்டுகல் மற்றும் உதவி புரியும் பெரிய நாடுகள் எல்லாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், தலைவர் தனது நோக்கத்தில் இருந்து விலகவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல எதிர்ப்புக்களை எதிர் கொண்டார். மூன்று மாத இலுப்படியின் பின் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனைக்கு கைதிகட்கான (தூக்கில் இடும் நிகழ்வு) கையொப்பத்தை தலைவர் இட்டு விட்டார். திகதிகள் குறிக்கப்பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படத் தொடங்கி விட்டது. இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட வண்ணம் இருந்தது.
தலைவர் எதிர் பாராத வண்ணம் போதைவியாபாரத்தின் பெரிய முதலைகள் பிடிபட்டன. அது வேறு யாருமல்ல தலைவரின் அருமை மகளின் கணவரும், அவர்கள் பெற்றேடுத்த சீமந்தப் புத்திரனும் தான். சட்டத்தை வளைத்துவிட தலைவரால் முடியவில்லை. உலகம் முழுவதும் தெரிந்த இரகசியத்தை மூடி மறைக்க முடியுமா?
இதயம் முழுவதும் வலியெடுக்க மகள் வாலிப பேரன் உட்பட மருமகனுக்கும் மரணதண்டனை நிறைவேற்றும் படிவத்தில் கையொப்பமிடும் பொழுது கைகள் நடுங்கின, மறுகணம் தன நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார்.
உங்களுக்கு
மரணிக்க ஆசையா என்று கேட்டால், ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து ஒரே வார்த்தை
ஒலிக்கும், “இல்லை எனக்கு மரணிக்க ஆசை இல்லை இல்லை”. இதோ மரணிக்க ஆசை
இல்லாதோர் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள். மரணம் என்பது ஒருவகையான உடலின்
ஊனம். அல்லது உடலின் பசி என்று சொல்லலாம். உடல் எப்போதும் ஏதோ ஒன்றை
எதிர்பார்த்தவண்ணமே உள்ளது. புரியும் படி சொல்லவேண்டும் என்றால். ஒவ்வொரு
நாளும் உங்களுக்கு தாகம் ஏற்படுகின்றது, பசிக்கின்றது, கழிவகற்ற வேண்டும்
என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதெல்லாம் அத்தியாவசிய செயற்பாடு என்று மனிதன்
வகைப்படுத்தியுள்ளான்.
இப்படி
அத்தியாவசிய செயற்பாடுகளைச் செய்யாமல் விட்டால், இதற்குப் பதில் உடல்
மரணத்தை நாடும். ஆகவே உடல் ஒன்றை எதிர்பார்க்கின்றது அதைக்
கொடுக்காவிட்டால் அதற்குப் பதில் மரணத்தை எதிர்பார்க்கின்றது. இதுதான்
இலகுவான புரிந்துகொள்ளுதல். அப்படி என்றால் உடல் எதிர்பார்க்கும் உணவைக்
கொடுத்தால் எமக்கு மரணம் வராமல் அல்லவா இருக்க வேண்டும்? அப்படி
இருக்கையில் தினமும் மூன்றுவேளை உணவுண்ணும் பக்கத்துவீட்டு அண்ணனும் 35
வயதில் அல்பாயுளில் மரணமடைந்த செய்தி தான் என்னை மீண்டும் சிந்திக்க
வைத்தது.
அது எப்படி
மரணம் என்ற ஒன்று நிகழலாம்? உடலிற்குத் தேவையான ஒன்றைக் கொடுக்கும் போதும்
உடல் மரணத்தை நாடும் என்றால் அதில் நியாயம் இல்லையே என்ற யோசனையுடன் நடந்து
சென்று கொண்டிருந்த நான் தெருவில் கண்ட ஒரு காட்சி என்னை
தெளிவுபடுத்தியது. அதிக எடையோடு தெருவில் சென்ற ஒரு வண்டி கவிழ்ந்து
விழுந்து கிடந்தது, அதை பார்த்த அங்கே அதிக எடையோடு வந்த இன்னுமோர் வண்டி,
அந்த இடத்திலேயே நின்று அதன் எடையை இன்னுமோர் வண்டியில் இறக்கி வைத்துக்
கொண்டிருந்தது. இப்போது எனக்குத் தெளிவு பிறந்தது.
உணவு
என்பதால் மரணம் தடைப்படுவது கிடையாது, மரணம் தள்ளிப் போடப் படுகின்றது.
மரணம் தடைப்பட வேண்டும் என்றால் மருந்து உண்ணவேண்டும். மருந்து என்றால்
என்ன? உணவு என்றால் என்ன?
விருந்து
சமைத்து உண்டால் அது உணவு. வீரியம் உள்ளதை அறிந்து அரைத்து உண்டால் அது
மருந்து. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், உடல் ஏன்
கழிவகற்றுகின்றது? போதுமான உணவைக் கொடுத்தால் எதற்காக உடல் மிகுதியென்று
கழிவக்கற்ற வேண்டும்? அதற்க்கு ஒரே காரணம் நாம் தேவைக்கு அதிகமாக வயிற்றை
நிரப்பி வைக்கின்றோம் அதனால் உடல் உழைத்துக் களைத்து உயிரை இழக்கின்றது.
நாம் உண்ணும் உணவு சிகப்பு இரத்தமாகவும் வெள்ளை இரத்தமாகவும் உடல் முழுதும்
சென்று எம்மை இயக்கிக் கொண்டு உள்ளது. சிகப்பு இரத்தம் என்னை உற்சாகமாக
வைத்திருக்கவும், வெள்ளை இரத்தம் எம் உடலில் உள்ள தீய கிருமிகளை அழிக்கவும்
பயன் படுகின்றது. இந்த இரண்டையும் சீர்படுத்தும் அளவு மருந்து உண்டாலே
போதும். உடல் மலம் கழிப்பதை நிறுத்திவிடும். இதனால்த் தான் சித்தர்கள்,
தியானத்தில் அதிக காலம் அப்படியே அமர்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்கள்.
இப்போது
ஒரு சந்தேகம் வந்திருக்கும் அது எப்படி மருந்துணவைக் கண்டு பிடிப்பது
அதில் எப்படி உட்கொள்ளும் அளவைக் கண்டு பிடிப்பது என்று சந்தேகம் வரும்.
அதற்கு நீங்கள் முதலில் தமிழ் படிக்க வேண்டும், தமிழில் உள்ள பழைய
நூல்களைத் தேடிக் கற்க வேண்டும். இந்த கட்டுரையின் முடிவில் இப்போது
உங்களுக்கு ஒரு சில காயகல்ப உணவுகைக் குறிப்பிடுகின்றேன் அதை உட்கொள்ளும்
முறையையும் சொல்லுகின்றேன், செய்து பாருங்கள். அறுகம்புல்லு, துளசி,
முருங்கையில்லை, நெல்லிக்காய்.
மேலே
சொன்ன உணவுப் பொருட்களை தாவரத்தில் இருந்து பறிக்கும் போதே மந்திரங்கள்
சொல்லி அல்லது தேவாரங்கள் பாடிப் பறிக்க வேண்டும். அதற்கு காரணம்
தாவரத்தில் இருந்து பறிக்கும் போது, தாவரம் அதன் வலியை விஷமாகக்
கக்கிவிடாமல் இருக்க மந்திர ஒலிகளை எழுப்பவேண்டும். அதன் பின் பறிக்கப்பட்ட
தாவர பகுதிகளை சூரிய நிழலில் காயவைக்கவேண்டும். முக்கிய கவனம் சூரிய
ஒளியில் இல்லை, சூரிய நிழலில். அதாவது பகல் வேளையில் ஒரு குடை அல்லது
தாள்வாரத்தின் நிழலில் காயவைக்கவேண்டும். காய்ந்து தொட்டால் உதிரும்
பக்குவத்தில் அதை எடுத்து நன்றாக சாம்பலாகும் வண்ணம் அரைத்துக்
கொள்ளவேண்டும். அரைத்த துகள்களை உள்ளங்கையில் எடுத்து தேன்குளைத்து
அருந்தினால் அது வாய் முதல் வயிறுவரை சென்று வேகமாக குருதியில்க் கலந்து,
உடலிற்கு மருந்து வழங்கும். இதன் மூலம் உடல் அதிக சக்தியையும், குறைந்த
வேலையையும் பெறும். இதோடு உங்கள் ஆத்மாவையும் ஒன்றிக்க வைத்தால், மரணமின்றி
மகிழ்ந்து வாழலாம்.
இன்றும் எம் உலகில் எத்தனையோ விண்கற்கள் விழுந்தவண்ணமே உள்ளது. கண்மூடி உறங்கும் இரவில் சற்று இரவை உற்றுப் பார்த்தால் வானில் ஏதோ ஒன்று உலகை நோக்கி ஒளிர்ந்து கொண்டே வந்து மறைந்து போவதை பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படி உண்டென்றால் நீங்கள் பார்த்தது எரிகல். அவ்வாறு வந்த அந்த எரிகல்தான் விண்கல். விண்ணில் எண்ணற்ற கற்கள் இன்றும் இயக்கப் பாதை இன்றி உலாவிக்கொண்டுள்ளன. அவை பூமியின் இயக்கப்பாதைக்குள் வந்தால், பூமி அதை தன்னைநோக்கி இழுக்க ஆரம்பிக்கும். அப்போது பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியின் வளிமண்டலத் துணிக்கைகளுடன் மோதி எரிய ஆரம்பிக்கும். அவ்வாறு எரியும் கற்களில் பல பூமியை அடையமுன்னமே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அவ்வாறு முழுமையாக எரியாமல் பூமியில் வந்து விழுந்தால் அதுவே விண்கல் என்று சொல்லப்படுகின்றது.
இது பூமியில் வந்து விழுகின்றது என்று சொல்வதை விட பூமியோடு மோதுகின்றது என்றே சொல்லவேண்டும். இவ்வாறு மோதியே பூமியில் டைனோசர் அழிந்தது என்று சொல்வார்கள். ஆனால் நாம் பார்க்க இருக்கும் கதை அதையும்விட பழமைவாய்ந்த கதை. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே பல விண்கற்கள் பூமியைத் தாக்கியதாகச் சொல்லுகின்றனர். பூமிக்கு வந்த இந்த விண்கற்கள் தான் மலையாகவும் அதே நேரம் பெரும் பள்ளத்தாக்கையும் ஏற்படுத்தியுள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதைவிட பெரும் உண்மை என்னவென்றால் நாம் இன்று பாவிக்கும் இரும்பு இந்த உலகைச் சேர்ந்ததே இல்லையாம். விண்ணில் உள்ள விண்கற்களில் அதிகம் உள்ளது இரும்புதானாம். பல விண்கற்கள் வீழ்ந்துதான் மண்ணில் இரும்பு கலந்தது என்றும் விஞ்ஞானிகள் அறிக்கை பதிந்துள்ளனர். இரும்பின் கதையை விட ஆச்சரியமான இன்னுமொரு விடயம் உள்ளது. நாம் பருகும் அத்தியாவசிய பொருளாகிய தண்ணீரே விண்ணில் இருந்து வந்த விண்கல் மூலமாகத் தான் பூமிக்கு வந்துள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிய விண்கலமான “ஹயபுச” 2010 ஆம் ஆண்டில் “இடோகர்” என்று பெயர் சூட்டப்பட்ட விண்கல்லின் மாதிரிகளை பூமிக்கு அனுப்ப, அதை ஆராய்ந்த அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அந்த விண்கல்லில் நீர் மூலக்குறுகள் இருந்துள்ளதை பார்த்து ஆச்சர்யப்பட்டு உறுதியும் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளில் மேற்கொண்ட ஆராய்வில் பலகோடி ஆண்டுகளிற்கு முன் ஒரு வால்நட்சத்திரம் பூமியில் மோதியிருப்பதாகவும் அதன் வால்பகுதியில் இருந்த நீர்மூலக்கூறுகள் உலகை சூழ்ந்துகொண்டது என்றும். சூரியனின் வெப்பத்தில் பூமியின் மத்தியில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாக காற்றுருவாக்கியதாகவும், விஞ்ஞானிகள் ஆய்வைப் பூர்த்திசெய்துள்ளனர்.
இன்று பலகோடி ஆண்டுகளின் பின் மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் என்று இந்த உலகம் இப்படி இருக்க ஒரே ஒரு காரணம் அந்த வால்நட்சத்திரத்தின் மோதல் தான். அதனால்த் தான் நாம் இன்றும் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதிக் கொண்டே இருக்கின்றோமோ என்னவோ?
அருண் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டான். என்ன இது? இப்படியெல்லாம் நடக்குமா! சீ….. மனம் அருவருப்பில் மூழ்கியது.
அருண் பின்னோக்கி நினைத்துப் பார்த்தான். அவன் அழகான வாலிபன் தான்.
வட்டவடிவான முகவெட்டு பெரிய கண்கள் எழும்பிய மூக்கு. சின்ன வாய்,
வாயிற்கும் மூக்கிற்கும் இடையில் அரும்பு மீசை, நீளமான கைவிரல்கள், நீளமான
கால்கள். அருணிற்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.தானே தன்னை வர்ணிப்பதாக
இருந்தாலும், இவையெல்லாம் உண்மைதானே! தானே தனக்குச் சமாதானம்
செய்துகொண்டான்.
திரும்பவும் எண்ண அலைகள் வட்டமிட்டன, படிப்பில்க் கெட்டிக்காரன், விளையாட்டில்ச் சூரப்புலி அவன் பள்ளிப் படிப்பை முடித்ததும் வேலைக்கும் போகத் தொடங்கிவிட்டான.
உத்தியோகம் புருஷலட்சனம் என்பதற்கு இணங்க சிறந்த மனிதனாகத் தான் அவன்
விளங்குகின்றான். இப்படி எல்லாத் திறமையும் உள்ள அருண் திடீர் என்று
சோர்ந்து போனது ஏன்? எல்லாம் அன்று இரவு நடந்த அந்த நிகழ்வுதான்.
அவ்னது நண்பர்கள் வட்டம் எதோ புதிய படம் பார்ப்பதாக நண்பன் ஒருவரின்
அறையில் கூடினர். அருணையும் அழைத்திருந்தனர். படம் பார்க்கத் தொடங்கிய
பிறகு தான் அருணிற்கு அது நீலப் படம் என்பது புரிந்தது. அவனிற்கு கொஞ்சம்
கூட பிடிக்கவில்லை. ஆனால் அவனின் நண்பர்கள் உற்சாகமாக இருந்து
அவதானித்தனர். அருணிற்கு அருவருப்பாக இருந்தது. அவன் அந்த அறையை விட்டு
வெளியேறிவிட்டான். ஆனால் அவனின் நண்பர்கள் அவன் வெளியேறியது கூட கவனிக்காது
படம் பார்த்தனர்.
அப்போது தான் அவனிற்கு தான் தன் சக நண்பர்களிடம் இருந்துவித்தியாசப் படுவது
புரிந்தது. பாலியல் ரீதியான சில புத்தகங்கள் வாங்கி வந்து படித்ததன்
பின்புதான் அவனிற்கு அவனது குறை புரிந்தது. அவன் ஒரு திருநங்கை போன்றவன்
என்பதை புரிந்துகொண்டான். மிகவும் சோர்ந்து போனான். திரும்பவும் எண்ண
அலைகள் வட்டமிட்டன,
அருணின் பெற்றோர்கள் அருணிற்கு திருமண ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்து
விட்டனர். திருமணத்தில் ஆர்வமில்லாத அருண் தன் சம்மதத்தில் தாமதம் காட்டி
வந்தான். உண்மை நிலை தெரிந்த பின் தான் நிலைமையின் தீவிரம் புரிய
ஆரம்பித்தது.
அருண்
மனதை ஒருநிலைப்படுத்த முயன்றான் ஒரு சில நிமிடங்கள் தியானத்தில்
இருந்தான்,அமைதியான மனதுடன் ஆண்டவனை வழிபட்டன். இக்கட்டான சூழ்நிலையில்
இறைவனை உளமார வழிபட்டால், நல்வழி கிடைக்கும் என்ற தாரக மந்திரத்தை அப்பா
வாயால்க் கேட்டிருக்கின்றான். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, மனதில் ஏற்படட
எண்ணங்களுடன் கடவுளை மனதார உருகி வழிபட்டான், பெற்றோர் மனம் நோகாதபடி
தனக்கு ஒரு வழிகாட்டும் படி மனமுருகி வேண்டினான்.
அருணாநிற்கு
ஒரு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அது ஒரு ராயில்ப் பயணம்
அன்றைய பயணத்திற்கு கூட்டம் அதிகம் இல்லை. அவனுடைய இருக்கைக்கு முன்னால்
ஒரு பெண் அமர்ந்திருந்தாள், அந்தப் பெண் மிகவும் சோகமாக இருந்தால், அவளை
அறியாமேலேயே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மற்றவர்கள் அறியாத
வண்ணம் கண்களைத் துடைத்த வண்ணம் இருந்தால்.
பெண்களைக் கண்டால் விலகியே போகுமா அருணன் அந்தப் பெண்மீது இரக்கம்
கொண்டான். தன்னுடைய நிலையித் தான் அந்தப் பெண் இருப்பதாகக் கற்பனை
செய்துகொண்டான். அதனால் அந்தப் பெண்ணிடம் பேச்சுக்கு கொடுக்க ஆரம்பித்தான்.
தன்னை நண்பனாக ஏற்றுக் கொள்ளும்படி முதலிக் கேட்டுக் கொண்டான். அவளிற்கு
என்ன பிரச்சினை என்று சொல்லும் படி கேட்டுக் கொண்டான். அந்தப்
பிரச்சினைக்கான தீர்வைத்த தருவதாகக் கூறினான்.
ஆனால் அந்தப் பெண்
முடியாது என்று தலையை ஆட்டினாள். என்னுடைய பிரச்சனைகளை உங்களாத் தீர்க்க
முடியாது என்று வாய் வீட்டுக் கூறினாள். தீர்க்க முடியாது என்று
அருணணிற்குப் புரிந்துவிட்டது. அந்தப் பெண்ணிற்கும் தனக்குரிய பிரச்சினை
தான் என முடிவு செய்து கொண்டான். அதனால் அந்தப் பெண்ணிடம் திரும்பவும் அவன்
தன்னால் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என உறுதியாகக் கூறினான். இதுவரை
எந்தப் பெண்ணிடமும் இப்படி ஒரு நெருக்கத்தை அவன் காட்டியதில்லை. பெண்கள்
என்றாலே விலக்கிப் போகும் அருணன், இந்தப் பெண்ணிடம் மட்டும்பிரச்சினையைத்
தீர்ப்பதாக உறுதி கூறினான்.
அந்தப் பெண்ணும் வாய் திறந்தாள், அவளின்
பதிலைக் கேட்டதும் அருணிற்கு கடவுளின் அருள் கிடைத்துவிட்டது என்னும்
ஆறுதல் நிலை ஏற்பட்டது.
அப்படி
அந்தப் பெண் என்ன தான் கூறினாள்?! அவளை ஒருத்தன் காதலிப்பதாக கூறி
ஆவளுடன் நெருங்கிப் பழகி அவள் வயிற்றில் கரு உருவாக்கிய பின் அவளின்
தொடர்பையே துண்டித்துக் கொண்டான். தற்கொலையைத் தவிர வேறு வழியே இல்லை
என்னும் நிலையில் அவள் உள்ளாள் என்று கூறினாள்.
ஆனால் அவளை நம்பி
அவளின் தாய், நோயான தந்தை, தம்பி தங்கை என்று நான்கு உயிர்கள் உள்ளன.
அதனால் அவளால் சாத்விக கூட ஏற்படுத்த முடியாது என்ன செய்வது என்பது தான்
புரியவில்லை, அவளின் அழுகை தொடர்ந்தது.
அருணன் முன் பின் யோசிக்கவே இல்லை உடனே அவளிற்குப் பதில் கூறினான். நீ
கவலையை விடு, உன்னை நான் திருமணம் செய்து கொள்கின்றேன். உன்னுடைய
குழந்தைக்கு நான் தந்தையாக இருக்கின்றேன், என்னை நம்பு என்று கூறினான்.
அழுகையை நிப்பாட்டிய அப் பெண் அவனை கண் வேட்டாமல்ப் பார்த்தல். அது
முடியாது என்று அந்தப் பெண் கூறினாள். ஏன் என அருண் கேட்க, நான் யாருடனும்
படுக்கையைப் பகிர்ந்து கொள்ள தயார் இல்லை என்று அந்தப் பெண் கூறினாள்.
பால் நழுவி பாலில் விழுந்தது, வாய்விட்டு அருண் கூறவில்லை.ஆண்டவன்
வழிகாட்டி விட்டான்.தந்தை சொன்ன வழியே கடவுளை வழிபட்ட பலன் இப்படி ஒரு வழி
கிடைத்துள்ளது என எண்ணினான். அந்தப் பெண்ணிடம் தன் சம்மதத்தைச்
சொல்லிவிட்டான். ஆனால் தன் குறையைப் பற்றி ஏதும் கூறவில்லை. தனது
பெற்றோரிடம் சென்று தன் காதலி என்று அறிமுகம் செய்து வைத்தான். பிறந்த
குழந்தை தன்னுடையதாகவே பெற்றோறிற்குத் தெரிய படுத்தினான். பெற்றோறிற்கும்
அவன் உண்மையைக் கூறவில்லை. அவன் தனது மனதைத் தேற்றிகொண்டான். உண்மையை
மறைப்பது கூடப் பொய்யாகும் ஆனால் “பொய்மையும் வாய்மையிடத்து” நன்மை
பயக்குமெனின். என்னும் குரளின் படி தனது செய்கை சரியென முடிவாகத்
தீர்மானித்தான்.