Uncategorized

Day One – My Bigg Boss – Victory – வெற்றி பயணத்தின் முதலடி

இது என்னுடைய நேற்றைய தினம். நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை எண்ணி ஒரு பயணத்தை ஆரம்பிக்கின்றேன். அதனுடைய நாட்குறிப்புகளை மற்றும் என் அனுபவத்தை இன்றுமுதல் ஒவ்வொருநாளும் இங்கு உங்களுடன், நான் பகிர போகின்றேன்.

ஆரம்பிக்கலாங்களா? வாங்க ஆரம்பிப்போம்!

என்னுடைய இந்த நாள் , என் எண்ணத்தின் இருவது சதவீதத்தைத்தான் சாதிக்கக் கூடிய நாளாக இருந்தது. ஆகவே இந்த நாள் தோல்வியான நாளா? என்று கேட்டால்! இல்லை இதுதான் பெரிய வெற்றி என்று சொல்லுவேன். ஏன் என்றால், நேற்று வரை பூச்சியம் என்ற இலக்கத்தில் இருந்த என்னுடைய குறிக்கோள், எடுத்த உடனேயே முதலாவது நாளே இருவது விழுக்காட்டை அடைந்தது என்றால் வெற்றி தானே? மிகப் பெரிய வெற்றி அல்லவா?

முதலாவதாக காலை 6.30 மணிக்கு எழுந்து கொள்ள நினைத்தேன், 6:00 மணிக்கே எழுந்து, அலாரம் அடிக்கும் வரை காத்திருந்து, ஜாகிங் சென்றேன். வெறும் 7 நிமிடங்கள் தான் என்னுடைய ஓட்டம் இருந்தது. ஆனால் ஒன்றரை வருடங்கள் ஓடாத என்னுடைய உடல் மிகவும் கழைத்துவிட்டது. எவ்வளவு தூரம் அந்தக் களைப்பு இருந்தது என்றால் மத்தியானம் கொத்து ரொட்டி சாப்பிடும் வரைக்கும் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தது என்றால் பாருங்கோவேன். ஆம் மத்தியானம் கொத்துரொட்டி டோர்ட்முண்டில் Sweet Chilli என்ற கடையில் ஓடர் செய்து எடுத்து சாப்பிட்டேன். அதை பற்றி சொல்ல முன், வாருங்கள் ஒழுங்காக காலையில் இருந்து செல்வோம்.

ஜாகிங் முடித்தபின் குளித்து கும்பிட்டு சாப்பிட்டு காலைக்கு கடனை முடித்து, இன்று என்னுடைய புதிய திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்குக்காக காலை 10:10 க்கு டோர்ட்முண்ட் வெளிக்கிடுகின்றேன். இதுவரை நான் திட்டமிட்ட படி அனைத்தும் திறனே நடை பெற்றது. இனித்த தான் கோளாறு ஆரம்பம். காரில் போன் பாவிக்கக் கூட்டது என்பது என்னுடைய புதிய கொள்கை. அதை பல முறை இன்று நான் மீறிவிட்டேன். அதிலேயே 60 விழுக்காட்டிற்கு மேல் என்னுடைய குறிக்கோளில் இருந்து தழறிவிட்டேன். அதைத் தொடர்ந்து டோர்ட்முண்ட் நகரில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சபேசன் அண்ணே அவரின் வீட்டிற்குச் சென்று சில காட்சிகளை எடுத்து அதைத் தொடர்ந்து டோர்ட்முண்ட் ரையினிச ஸ்ட்றாஸே சென்று அங்கும் U உள்ள இடத்தில் ஒருசில காட்சிகள் எடுத்து முடிக்க மதியம் 2:30 ஆகிவிட்டது. அங்கே புகைப்படக்காரர் கோபி அண்ணே மற்றும் அவரின் நண்பர்களை சந்தித்தேன். அவரின் நண்பரின் ஒருவர் தாயகத்தில் எங்கள் ஊர்காரகராம், என்னுடைய அப்பாவைத் தெரியும் என்று சொல்லியிருந்தார். கேட்க சந்தோசமாக இருந்தது. அதைத் தொடர்ந்து மதிய உணவை இயக்குனர் சபேசன் அண்ணெயின் உதவியாளர்கள் நவீன் மற்றும் அவரின் நண்பர்களோடு சேர்ந்து உண்டோம். நல்ல சுவை நீங்களும் டோர்ட்முண்ட் சென்றால் சாப்பிட்டு உங்கள் கருத்தையும் இங்கு பதிவிடுங்கள்.

நண்பகல் 3 மணிக்கு ZOOM மூலம் ஜெர்மனி எழுத்தாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஆம் ஜெர்மனியில் 21 வருடங்களாக எழுத்தாளர் சங்கம் இயங்கி வருகின்றது அதில் நான் இப்போது செயலாளராக உள்ளேன். புதிய உறுப்பினர்கள் மற்றும் அனுசரணையாளர்களுடன் ஒரு சிறிய கலந்துரையாடலாக இன்று நிகழ்சி நடைபெற நேரம் மாலை 6:30 ஆனது. இதிலும் என்னுடைய கொள்கையில் சிறிய தளர்வு. காரணம் நான் நேரத்தை துல்லியமாக திட்டமிடவேண்டும் என்று நினைக்கும் போது 5:00 மணி வரை தான் திட்டமிட்டிருந்தேன் ஆனால். ஒன்றரை மணி நேரம் தாமதம். அதன் பின் மிகுதிக் காட்சி ஷூட்டிங் சென்று அனைத்தையும் முடித்து, இரவு இயக்குனர் சபேசன் அண்ணே மற்றும் குடும்பத்தினருடன் பிட்ஸா சாப்பிட்டு 21:21 மணிக்கு வீட்டிற்கு வெளிக்கிட்டு 22:22 மணிக்கு வீடு வந்து சேர்த்தேன். அவ்வாறு வரும் பொது என்னுடைய உடுப்பு பையை இயக்குனர் சபேசன் அண்ணே வீட்டில் மறந்து விட்டிவந்துவிட்டேன். இவ்வாறு என்னுடைய புள்ளிகளை நான் இழந்தாலும் இருவது விழுக்காடு நான் வெற்றிகண்டுள்ளேன் என்று சொல்லி நாளை உங்களை சந்திக்கின்றேன் உங்கள் அன்பு நண்பன் சி.சிவவினோபன்

நன்றி வணக்கம்.