S.Shivavinoban

வீட்டில் இருந்து கொண்டே பணக்காரர் ஆகலாம் வா!

வா நண்பா வசதியான பணக்கார வாழ்க்கை வாழுவோம். கடின உழைப்பு தேவையில்லை, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யலாம். இப்படிப்பட்ட வாக்குறுதிகளை வழங்குவோர் சொல்லுகின்ற வேலைகளில் ஒன்று தான், இந்த டிரேடிங் (Trading). இந்த டிரேடிங்கை (Trading) பற்றி இன்றைய தினம் நாங்கள் விரிவாக பார்க்க இருக்கின்றோம். இது எவ்வாறு உருவாகியது என்கின்ற அடிப்படைக் கதை தெரிந்தால், தான் இந்த டிரேடிங்கை (Trading) புரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். ஏனென்றால் டிரேடிங் மிக மிக கடினமான ஒரு விடயம்.


ஆரம்ப காலகட்டங்களில், மனிதனுடைய பகுத்தறிவு வளரும் பொழுது, மனிதன் ஒரு இடத்தில் இருந்து வாழ தொடங்கினான். அதன் பின் தனக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான். அதன் பின் மற்றய இடங்களில் வாழுகின்ற மனிதர்கள் எதையெல்லாம் உற்பத்தி செய்கிறார்கள் என்பதை, ஆவலாக அறிந்து கொள்ள ஆசை கொண்டான். அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்து, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க, பண்டமாற்று என்கின்ற ஒரு விடயம் ஆரம்பமானது. அதன் வளர்ச்சி தான் கடல் தாண்டி பல நாடுகளை கண்டுபிடித்து அந்த நாடுகளில் இருக்கின்ற வளங்களை வர்த்தகம் மூலமாகவோ அல்லது கொள்ளை அடிப்பதன் மூலமாகவோ எடுத்து வருவதை பலர் தங்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

Ships on a sea illustration vector

இவ்வாறு பல பணக்கார முதலாளிகள், கப்பல்களை கட்டி அதை மற்றய கண்டங்களுக்கு, நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தக் கப்பல் சென்று திரும்பி வந்தால், அதில் பல செல்வங்கள் வரும். அந்த செல்வங்களை வைத்து, தங்கள் பணத்தை இன்னும் பெருக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். இதில் அந்த காலகட்டத்தில் இருந்த மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், சென்ற அனைத்து கப்பல்களும் திரும்பி வந்தது என்று இல்லை. இயற்கை அனர்த்தங்களால் , அல்லது சென்ற இடத்தில் அங்கு வாழ்ந்த மக்கள்களால் அழிக்கப்பட்டதனால், அல்லது இடையிலேயே மற்றைய போட்டி கப்பல்களால் உடைக்கப்பட்டதனால், என்று பல கப்பல்கள் திரும்பி வரவில்லை. சில கப்பல்கள் திரும்பி வந்தன. இங்கு தான் இந்த ட்ரெயினிங் (Trading) என்பதன் அடிப்படை ஆரம்பிக்கின்றது.

அப்போது வாழ்ந்த அந்த பண முதலாளிகள் என்ன செய்தார்கள் என்றால். சிறிய முதலாளிகள் மற்றும் சாதாரண மக்களிடம் சொன்னார்கள், இப்போது செல்கின்ற கப்பல் திரும்பி வந்தால், அதில் இருக்கின்ற செல்வத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம். ஆகவே இந்தக் கப்பல் திரும்பி வரும் என்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எங்களுக்கு கட்ட வேண்டும். நீங்கள் கட்டுகின்ற பணத்தொகையை, வைத்துக்கொண்டு கப்பல் திரும்பி வரும் பொழுது அதன் பல மடங்கான பணத்தொகை உங்களுக்கு அந்தக் கப்பலில் இருக்கும் சொத்துக்களை பிரிப்பதன் மூலமாக தரப்படும். உதாரணத்திற்கு நீங்கள் பத்து வெள்ளி காசுகளை கட்டினால் அந்தக் கப்பல் திரும்பி வரும் பொழுது, அந்தக் கப்பலின் சொத்தில் இருந்து கொண்டு உங்களுக்கு லட்சம் வெள்ளி காசுகளாக திருப்பித் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. என்கின்ற ஒரு முறையை ஆரம்பித்தார்கள் இதுதான் இப்போது நவீன மயப்படுத்தப்பட்டு இருக்கின்ற ட்ரேடிங்கின்(Trading) அடிப்படை ஆக இருக்கின்றது. இப்போது அந்தக் கப்பல் திரும்பி வந்தால் பத்து வெள்ளி கொடுத்தவர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளி கிடைக்கும். அதுவே அந்த கப்பல் திருப்பி வரவில்லை என்றால் அந்த பத்து வள்ளி திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது. அது அந்த பணக்கார முதலாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்படுத்திய அந்த நட்டத்தை ஓரளவு சமாளிக்கக்கூடிய தொகையை திருப்பித் தரக் கூடியதாக இருந்தது. இப்போது ஒரு சிலர் சொன்னார்கள் இல்லை எனக்குத் தெரியும் இந்த காலகட்டத்தில் இந்த கப்பல் வெளியிட்டால், இந்தக் கப்பல் திரும்பி வராது ஆகவே நான் காசு கட்ட மாட்டேன் என்று சொன்னார்கள். அப்போது அந்த பண முதலாளிகள் என்ன செய்தார்கள் என்றால் கப்பல் வரும் என்று சொல்பவர்கள் 10 வழிகாட்டுங்கள் கப்பல் வராது என்று சொல்பவர்கள் 10 வெள்ளி கட்டுங்கள் சென்ற கப்பல் திரும்பி வந்தால், வராது என்று சொன்னவர்களுக்கு கட்டிய பணம் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது. வரும் என்று சொன்னவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் பல மடங்காக திருப்பி கிடைக்கும். இதுவே சென்ற கப்பல் திருப்பி வராது என்று சொன்னவர்கள் சொன்னதைப் போன்று, அந்தக் கப்பல் திருப்பி வரவில்லை, என்றால் அவர்கள் கொடுத்த பணம் பல மடங்காக திருப்பிக் கொடுக்கப்படும். என்கின்ற ஒரு முறை ஆரம்பிக்கப்பட்டு. அதுதான் இன்றுவரையும் இணையதளத்தில் கூட, வாங்குதல் விற்றல் என்கின்ற அடிப்படையில் இந்த டிரேடிங்காக(Trading) நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

அடுத்த தொடரில் இது எவ்வாறு இன்றைய வர்த்தகத்தில் செயல்படுகின்றது என்கின்ற விரிவான விளக்கத்தை வழங்க காத்திருக்கின்றேன். வாசிக்கின்ற உங்களுக்கு அடுத்த தொடர் வேண்டுமென்று ஆசைப்பட்டால், நீங்கள் உங்கள் விருப்பத்தை தெரிவித்தால் மட்டுமே, அடுத்த தொடர் உங்களுக்காக காத்திருக்கின்றது.

ஆக்கம்
சிந்தனை சிவவினோபன்

Stress ஏன் எப்படி எதனால் வருகின்றது? – My Bigg Boss_Solomate – Day 03

வாழ்க்கையில எல்லோருக்கும் இருக்கின்ற பெரிய பிரச்சினை மனா அழுத்தம். அதிலும் இப்போது கொரோன காலத்தில பலரும் வீட்டிலேயே இருப்பதால், அதீத பிரச்சினையாகிவிட்டது. ஏன் இன்று மனா அழுத்தம் பற்றிக் கதைக்கின்றேன் என்றால்? நேற்றைய தினம் ஒரு மோசமான தினமாக அமைந்தது என்னுடைய எல்லா புள்ளிகையும் இழந்துவிட்டேன். மற்றும் என்னுடைய நண்பர் சந்தித்தேன் அவரின், அவரின் மனா அழுத்தத்தைக் கேட்டேன். அதனால்த் தான் இன்று மனா அழுத்ததை பற்றி முழுமையாகப் பார்ப்போம் வாருங்கள் முதில் இருந்து ஆரம்பிப்போம்.

இன்று காலை 6:30 க்கு எழுந்து ஜாகிங் போனேன் இன்று சற்று மெதுவாக உடல் முழுவது நோக ஆரம்பித்தது. இன்றைய நாள் முழுவது இரவு நித்திரைக்குப் போகும் வரை அந்த வலி இருந்தது. ஜாகிங் முடிய சாப்பிட்டு, எழுத்தாளர் சங்க புத்தக வெளியீட்டிற்கான Notice தயார் செய்து 10:30க்கு Dortmund வெளிக்கிட்டேன். 12:30 க்கு Meeting ஒரு மணித்தியாலம் முதல் சென்றால் பார்க்கிங் இடத்தில் வீடியோ செய்யலாம் என்று சென்று எல்லாம் வெற்றி ஆனால் அதன் பின் தான் அந்த தினத்தின் முக்கிய கடினம் ஆரம்பமானது.

வேலை செய்யும் இடத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன், அவர் மிகவும் சோகமாக இருந்தார், காரணம் அவருடைய Team அவரை ஏமாற்றி வேறு கொம்பனியில் சென்று சேர்ந்துவிட்டது. அதனால் மிகுந்த சோகத்தில் இருந்தார் அவரைக்கு கூடிக் கொண்டு கீழே கடைக்குச் சென்றேன் ஒரு சின்ன மாற்றமாக இருக்கும் என்று. ஆனால் தொருவில் நடந்து செல்லும் போது அவரின் பழைய Team உறுப்பினர்கள் இன்னும் 4 புதிய உறுப்பினர்களுடன் எதிரிலேயே கண்டும் காணாததை போல நடந்து செல்ல, அந்த நண்பர் உடைந்து போனார், சோகத்தில் மனா அழுத்தத்தில் இருந்தார். அதனால் நான் மனா அழுத்ததை பற்றி கொஞ்சம் தெடிக் கற்றுக் கொண்டேன். மனம் என்றால் என்ன? மனா அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது வாருங்கள் விரிவாக்கப் பார்ப்போம்.

மனம் என்பது மிக இலகுவான விடையம் பலருக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை நான் சொல்லுகின்றேன் நீங்கள் ஒருமுறை கவனமாகப் பாருங்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
எம்முடைய உடலில் உறுப்புக்கள் உள்ளன அதை இயக்குவது மூளை. மூளை ஒரு கடடலையை கொடுக்கும் அதன் படி செயல்படும் உறுப்பின் விளைவு என்ன என்பதை மூளை சேமித்து வைக்கும். உதாரணத்திற்கு சிறுவர்களாக இருக்கும் போது நாம எல்லோரும் ஓடி ஓடி நடப்போம் கீழே விழுவோம் எழுந்திக்கொள்வோம் ஆகவே காயம் வரும் வலி வரும் இதெல்லாம் மூளை சேமித்து வைக்கும் இடம் தான் மனது. ஒரு குறிப்பிடட காலத்தின் பின் மூளை சுயமாகச் சிந்திப்பதை குறைத்துக்கொண்டு வரும். மனது தான் வேலைசெய்யும். ஏன் என்றால் மூளை வேலை செய்தால் அது கடடளைகளைக் கொடுக்கும் அதன் பின் அதன் விளைவை சேமிக்கும், சேமித்து வரும் விடையை வைத்து எது நல்லம் எது கூடாது என்று பிரித்துப் பார்க்கும்.இது ஒரு பெரிய கடினமான வேலை ஆகவே அதை இலக்கு படுத்த ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து மனது தான் முடிவுகளை எடுக்கும் சிந்திக்காமல் கட்டளைகளை இடும். உடல் இயங்கும். இதற்க்கு ஆதாரம் நீங்கள் வாகனம் ஓடும் போது ஆரம்பத்தில், எது எங்கே இருக்கு எப்படி ஓடணுமெப்படிப் பார்க்கோணுமென்று ஜோசிச்சு ஜோசிச்சு செய்வீர்கள் ஆனால் ஒரு குறிப்பிடட காலத்தில் எல்லாம் தன்பாட்டில் நடக்கும் எதையும் சிந்திக்க மாடதீர்கள். அதுதான் மனது செய்யும் வேலை. இப்போது மனா அழுத்தம் எப்படி வரும் என்றால். மனதில் பல விடையங்களை சேர்த்துவைத்து ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்யச் சொன்னால். மனது வேகவேகமாக கடடளைகளை உடலிற்கு அனுப்பும். அப்போது மூளை சோம்பலாக உள்ள மூளை மீண்டு சிந்திக்க ஆரம்பிக்கும். அது ஒவ்வுறு செயலையும் செய்யாதே செய்யாதே என்று கட்டுப் படுத்து. காரணம் மூளைக்கு ஒரு செயலின் பயன் கிடைத்தால்த் தான் அடுத்தத்தைச் செய்யும். அந்த வேளை, உடல் அங்கங்கள், நடுக்கத்தை காணும், வாய் குளறும், உடல் முழுமையாக இயங்காமல்க் கூடப் போகலாம்.

இதைத் தான் மனா அழுத்தம் என்று சொல்வார்கள். இப்போது இந்த மனா அழுத்தத்தை எப்படி சரிசெய்யலாம் என்றால், பல வழிகள் உண்டு, இலகுவாங்கத்து விரைவான சில வழிமுறைகளைத் தருகின்றேன், பாருங்கள். முதலில் கதைக்கணும், யாரோடாவது கதைக்கலாம், அல்லது தனியாக உங்களோடு நீங்கள் வாய்விட்டு கதைக்கலாம். என் என்றால் கதைக்கும் பொது மூச்சு சீராகும், வாய் இயங்கும் தோல் இயங்கும் காத்து கேக்கும், கண் தசைகள் இயங்கும், இதனால் உடல் மீண்டும் சமநிலைக்கு திரும்புகின்றது. அல்லது சத்தமாக சிரிக்கலாம், சிரித்தால் இப்பொது அதே செயல் நடைபெரும். இது தான் உடனடியாக மனா அழுத்தத்திக் குறைக்கும் வழிமுறை.

அதன் பின் தமிழ் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, வானம் படத்தின் டப்பிங் செய்யச் சென்றான் என்னுடைய மனம் ஒருநிலையிலேயே இல்லை, என்னுடைய வேலை, நேர பற்றாக்குறை, நானும் தனியாகத் தான் வேலை செய்கின்றேன், எனக்கு நல்ல Team வேண்டும் ஆனால் நல்ல மனிதர்களை எப்படி Team இல் இணைப்பது என்று மனது அலை பாய்ந்துகொண்டே இருந்தது. அப்படியே ஒரு 19:35 போல டப்பிங்கை முடித்து வீடிற்கு 20:45 சென்றடைந்தேன். அதன் பின் தான் வீடியோ எடிட்டிங்கே செய்தேன் 23:40 வரை YouTube விடியோவுடன் இருதேன் ஒரு கட்டிடத்தில் வீடியோ செய்வதை விட்டுவிடுவோம் என்று தோணியது, அதனால் இன்று எனக்கு 00 புள்ளிகள். நான் இன்றைய நாளைப் பெரிய தோல்வி நாளாகப் பார்க்கின்றேன். நான் துவண்டு போகவில்லை, மீண்டும் ஆரம்பிப்பேன் என்ற நம்பிக்கையில் நித்திரைக்குச் சென்றேன்.

How My Re Entry? – My Bigg Boss_Solomate – நான் ஏன் மீண்டும் வந்தேன்?

என்னடா தனுஷ் போட்டோ போட்டிருக்கு என்று பார்த்தல்! என்னுடைய இன்றைய Youtuber என்ற இந்த நிலைக்கு இன்னுமொரு காரணம் நடிகர் தனுஷ். ஆகவே அவருக்கு நன்றி சொல்லவில்லை என்றால் எப்படி? அது எப்படி நடந்தது? Yes சொல்லுறன் வாங்கோ முதலில் இருந்து பார்ப்போம்.

இன்று என்னுடைய Task காலை 6:00 மணிக்கு எழுந்து கொள்ளவேண்டும் என்பது. ஏனெறால் நேற்று காலை 6:00 மணிக்கு எழுந்து காத்திருந்து 6:30 அலாரம் அடிக்க எழுந்ததை போலிருக்காமல் 6:00 மணிக்கு எழுந்தால் 6:00 மணிக்கே உடனடியாக கட்டிலை விட்டு இறங்கி, காலையை சிறப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்று நான் 5:00 மணிக்கே முழித்துவிட்டேன். இருந்தாலும் காத்திருந்து 6:00 மணிக்கு எழுந்து ஜாகிங் சென்று வீடு வந்து தாடியை ஒரு சும்மா வித்தியாசமாக வெட்டியதன் பின் சாப்பிட்டிட்டு வேலைக்கு இறங்கிட்டன். இப்ப கார்ல ஒரு மணிநேர ஓட்டம். இதில இரண்டு தனுஷாப் பற்றி சொல்லுறன். அதுக்கு முன் இன்றைய ஜாகிங் பெரிதாக களைப்பு ஒன்று இல்லை. கொஞ்சம் பழகிட்டு என்று என்று நினைக்கின்றேன், ஆறு நிமிடத்தில் நானும் ஓடிவந்துவிட்டேன்.

தனுஷ் தான் என்னுடைய இன்றைய இத்தனை ஆயிரம் லட்சம் Subscribers இருப்பதற்குக் காரணம். ஆரம்பத்தில் நான் Sabscribersக்கு தேடித் தேடி ஒவ்வொருவராக Subscribe வைக்கக் கஸ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருநாள் அம்மா வந்து கேட்டார் தனுஷும் மனைவியும் விவாகரத்தா என்று? நான் கடையில் நிற்பதால் அனைத்து செய்திகளையும் பார்த்துவிடுவேன். நான் சொன்னேன் இல்லை அம்மா அது ரஜனியின் இன்னொரு மகள் என்று சொல்லிவிட்டு, சரி இதை போல மற்றவர்களும் சந்தேகப்படப் போறார்கள் என்று ஒரு வீடியோ செய்து போடுவோம், ரஜனியின் மகள் விவாகரத்து அது தனுஷ் இல்லை ரஜினியி இன்னொரு மகள் என்று ஒரு வீடியோ செய்து போட்டேன். அந்த வீடியோ வீடியோ போடுடா அதே நாள் 10 000 வியூஸ் 300 Subscribers என்று அல்ல அப்போதுதான் எனக்கு இந்த YouTube Market புரிந்தது அதற்க்கு முன் எத்தனையோ நல்ல நல்ல விதேஒஸ் போட்டும் ஓடாத விடீயோஸ் எல்லாம் இப்போது சேர்ந்து நிறைய வியூஸ் வராத தொடங்கியது. இப்படியே சினிமா சுன்னத் திரை என்று நான் கலந்து விதேஒஸ் போடாத தொடங்கினேன். அவருக்கு நன்றி சொல்லி அந்த கதையை இங்கு சொல்லவே இந்த தனுஷின் போட்டொ போட்டேன். நன்றி தனுஷ்.

இப்போது வேலைக்கு வந்துவிட்டேன், இன்று 1500 யூரோ Project ஒன்றை நான் வெறும் ஒன்றரை மணித்தியாலத்தி செய்து முடித்தேன். ரூபாயில் பார்த்தல் கிட்டத தட்ட 3.5 லட்சம் இலாபம். ஒரு வீடு காட்டும் பிளான் கீறவேண்டும் அதை ஏற்கனவே கீறியுள்ளது அதற்குள் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் அதை கீறியெடுக்க 1500 யூரோ செலவாகுமாம். நான் அண்ணாவிடம் சொன்னேன் நானே வரைந்து தாரேன் என்று சொல்லி, ஒன்றரை மணித்தியாலத்தில் வரைந்து முடித்தேன். நானும் ஊர்ல Engineer என்று காடடனும் எல்லா? 🙂

https://www.youtube.com/watch?v=834JTWiPjRY&t=317s

அது முடிய வீடியோ நேற்றையான் வீடியோ செய்து, அதன் பின் வேலைக்கான Termin ஒன்றிக்குச் சென்று எல்லா வேலையும் முடிய வீட்டிற்குத் தாமதமாகத் தான் வந்தேன். காதலர் தினமல்லவா மனைவிக்கு ஒருசில பரிசில்கள் வாழ்த்துமடல் ரோசா பூ மரம் என்று எல்லாம் வாங்கிக் கொண்டு சென்று மனைவிக்குத் தெரியாமல் வீட்டுக்குள் ஒழித்துவைக்க, மனைவிக்கு கொஞ்சம் கவலை ஏனென்றால் நான் வழமையாக ஏதாவது விசேஷம் என்றால் Gifts Surprice என்று செய்வேன் இன்று ஒன்றும் செய்யவில்லையே என்று நினைத்தார் அதன் பின் கொஞ்ச நேரத்தில் அவருக்கேத்த தெரியாமல் Gifts எல்லாம் கொடுக்க மிகுந்த சந்தோசம் அப்படியே நாள் நல்லபடியாக முடிந்துவிடும் என்று பார்க்கும் போது வந்து சேர்ந்தது ஒரு பிரச்சினை. ஜெர்மனி தொலைக்காட்சி ஒன்று என்னை அவர்களின் Whatsapp குழுவில் இணைத்தது எந்த ஒரு கேட்டுக் கேள்வியும் இல்லாமல் இணைக்க சரி என்று நானும் செய்த வீடியோ Link அதை அங்கு இணைத்தேன். உடனடியாக நான் ஒன்றும் Share பண்ணைக் கூடாது என்று சொன்னார்கள் எனக்கு கடுப்பாகிவிட்டது நான் Share பண்ணைக் கூடாது ஆனால் நான் அங்கு இருக்கவேண்டுமா என்று கோபம் வந்தது இந்தக் கோபம் தான் என்னுடைய அதிக புள்ளியை இழக்க வைத்தது. மனைவிக்கும் என் மீது மனா வருத்தம். நான் என் மற்றவர்களோடு சண்டை போடுகின்றேன் என்று. அதனால் நான் அந்த பிரச்சினையை அப்படியே விட்டு விட்டு இரவு 11:10 க்கு நித்திரைக்குப் போய்விடடேன்.

Day One – My Bigg Boss – Victory – வெற்றி பயணத்தின் முதலடி

இது என்னுடைய நேற்றைய தினம். நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை எண்ணி ஒரு பயணத்தை ஆரம்பிக்கின்றேன். அதனுடைய நாட்குறிப்புகளை மற்றும் என் அனுபவத்தை இன்றுமுதல் ஒவ்வொருநாளும் இங்கு உங்களுடன், நான் பகிர போகின்றேன்.

ஆரம்பிக்கலாங்களா? வாங்க ஆரம்பிப்போம்!

என்னுடைய இந்த நாள் , என் எண்ணத்தின் இருவது சதவீதத்தைத்தான் சாதிக்கக் கூடிய நாளாக இருந்தது. ஆகவே இந்த நாள் தோல்வியான நாளா? என்று கேட்டால்! இல்லை இதுதான் பெரிய வெற்றி என்று சொல்லுவேன். ஏன் என்றால், நேற்று வரை பூச்சியம் என்ற இலக்கத்தில் இருந்த என்னுடைய குறிக்கோள், எடுத்த உடனேயே முதலாவது நாளே இருவது விழுக்காட்டை அடைந்தது என்றால் வெற்றி தானே? மிகப் பெரிய வெற்றி அல்லவா?

முதலாவதாக காலை 6.30 மணிக்கு எழுந்து கொள்ள நினைத்தேன், 6:00 மணிக்கே எழுந்து, அலாரம் அடிக்கும் வரை காத்திருந்து, ஜாகிங் சென்றேன். வெறும் 7 நிமிடங்கள் தான் என்னுடைய ஓட்டம் இருந்தது. ஆனால் ஒன்றரை வருடங்கள் ஓடாத என்னுடைய உடல் மிகவும் கழைத்துவிட்டது. எவ்வளவு தூரம் அந்தக் களைப்பு இருந்தது என்றால் மத்தியானம் கொத்து ரொட்டி சாப்பிடும் வரைக்கும் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தது என்றால் பாருங்கோவேன். ஆம் மத்தியானம் கொத்துரொட்டி டோர்ட்முண்டில் Sweet Chilli என்ற கடையில் ஓடர் செய்து எடுத்து சாப்பிட்டேன். அதை பற்றி சொல்ல முன், வாருங்கள் ஒழுங்காக காலையில் இருந்து செல்வோம்.

ஜாகிங் முடித்தபின் குளித்து கும்பிட்டு சாப்பிட்டு காலைக்கு கடனை முடித்து, இன்று என்னுடைய புதிய திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்குக்காக காலை 10:10 க்கு டோர்ட்முண்ட் வெளிக்கிடுகின்றேன். இதுவரை நான் திட்டமிட்ட படி அனைத்தும் திறனே நடை பெற்றது. இனித்த தான் கோளாறு ஆரம்பம். காரில் போன் பாவிக்கக் கூட்டது என்பது என்னுடைய புதிய கொள்கை. அதை பல முறை இன்று நான் மீறிவிட்டேன். அதிலேயே 60 விழுக்காட்டிற்கு மேல் என்னுடைய குறிக்கோளில் இருந்து தழறிவிட்டேன். அதைத் தொடர்ந்து டோர்ட்முண்ட் நகரில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சபேசன் அண்ணே அவரின் வீட்டிற்குச் சென்று சில காட்சிகளை எடுத்து அதைத் தொடர்ந்து டோர்ட்முண்ட் ரையினிச ஸ்ட்றாஸே சென்று அங்கும் U உள்ள இடத்தில் ஒருசில காட்சிகள் எடுத்து முடிக்க மதியம் 2:30 ஆகிவிட்டது. அங்கே புகைப்படக்காரர் கோபி அண்ணே மற்றும் அவரின் நண்பர்களை சந்தித்தேன். அவரின் நண்பரின் ஒருவர் தாயகத்தில் எங்கள் ஊர்காரகராம், என்னுடைய அப்பாவைத் தெரியும் என்று சொல்லியிருந்தார். கேட்க சந்தோசமாக இருந்தது. அதைத் தொடர்ந்து மதிய உணவை இயக்குனர் சபேசன் அண்ணெயின் உதவியாளர்கள் நவீன் மற்றும் அவரின் நண்பர்களோடு சேர்ந்து உண்டோம். நல்ல சுவை நீங்களும் டோர்ட்முண்ட் சென்றால் சாப்பிட்டு உங்கள் கருத்தையும் இங்கு பதிவிடுங்கள்.

நண்பகல் 3 மணிக்கு ZOOM மூலம் ஜெர்மனி எழுத்தாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஆம் ஜெர்மனியில் 21 வருடங்களாக எழுத்தாளர் சங்கம் இயங்கி வருகின்றது அதில் நான் இப்போது செயலாளராக உள்ளேன். புதிய உறுப்பினர்கள் மற்றும் அனுசரணையாளர்களுடன் ஒரு சிறிய கலந்துரையாடலாக இன்று நிகழ்சி நடைபெற நேரம் மாலை 6:30 ஆனது. இதிலும் என்னுடைய கொள்கையில் சிறிய தளர்வு. காரணம் நான் நேரத்தை துல்லியமாக திட்டமிடவேண்டும் என்று நினைக்கும் போது 5:00 மணி வரை தான் திட்டமிட்டிருந்தேன் ஆனால். ஒன்றரை மணி நேரம் தாமதம். அதன் பின் மிகுதிக் காட்சி ஷூட்டிங் சென்று அனைத்தையும் முடித்து, இரவு இயக்குனர் சபேசன் அண்ணே மற்றும் குடும்பத்தினருடன் பிட்ஸா சாப்பிட்டு 21:21 மணிக்கு வீட்டிற்கு வெளிக்கிட்டு 22:22 மணிக்கு வீடு வந்து சேர்த்தேன். அவ்வாறு வரும் பொது என்னுடைய உடுப்பு பையை இயக்குனர் சபேசன் அண்ணே வீட்டில் மறந்து விட்டிவந்துவிட்டேன். இவ்வாறு என்னுடைய புள்ளிகளை நான் இழந்தாலும் இருவது விழுக்காடு நான் வெற்றிகண்டுள்ளேன் என்று சொல்லி நாளை உங்களை சந்திக்கின்றேன் உங்கள் அன்பு நண்பன் சி.சிவவினோபன்

நன்றி வணக்கம்.

5 நொடி ஒழுக்கம்.

நாம் அனைவருமே ஹாலிவுட் படங்களை பார்ப்பது உண்டு. அதில் சூப்பர் பவர் கொண்ட கதாநாயகர்கள் நடிக்கிறார்கள். ஒரு முறை யோசித்து பாருங்கள்! எங்களிற்கு ஒரு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்த ஐந்து நொடி ஒழுக்கம் என்பது உங்களுக்கு ஒரு மிக பெரிய சூப்பர் பவரை தருவதற்கான ஒரு வழிமுறையாக அமைந்திருக்கப் போகின்றது. இதை கண்டுபிடித்தவர் யார்? அதை எவ்வாறு கண்டுபிடித்தார்? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த சூப்பர் பவரை நாம் எங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை முதலில் பார்ப்போம் வாருங்கள்.

இந்த சூப்பர் பவரை உங்களுக்குத் தரப் போவதும் ஒரு மிகப் பெரிய ஞானி .அவர் யார் தெரியுமா? பக்கத்தில் இருக்கின்ற தொலைபேசியை எடுத்துக்கொள்ளுங்கள்! அதில் கேமராவை ஓப்பன் பண்ணுங்கள்! Front Cameraவை ஓப்பன் பண்ணுங்கள் இப்போது யார் தெரிகின்றார் அதில்? ஆம் நீங்கள் தான் உங்களுடைய ஞானி. உங்களிற்கு இந்த சூப்பர் பவரை கொடுக்கப் போவது நீங்கள் தான். ஆச்சரியமாக இருக்கின்றதா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்

அதைப் பார்ப்பதற்கு முன்பாக உங்களிடம் ஒரு கேள்வி. 5,4,3,2,1…

கேள்வி என்னவென்றால் உங்களுடைய வாகனத்தில், காராக இருக்கட்டும் பைக்காக இருக்கட்டும் சைக்கிள்ளாக இருக்கட்டும் அதற்குள் ஒரு பிரேக் இருக்கின்றது! இந்த பிரேக் என்ன தொழிற்பாட்டை செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிக்கூடத்தின் அதிபர் வகுப்பறையில் கேட்கின்றார். அவ்வாறு அவர் கேட்கும் பொழுது அங்கு இருக்கின்ற ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் அனைவருமே சொல்லுகின்றார்கள் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொல்லுகின்றான் வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்லுகின்றார். அதிபர் சொல்லுகின்றார் மிகச் சரியான விடை இதுதான். மிகச் சரியான விடை. வாகனத்தில் பிரேக் இருக்கின்றது என்ற தைரியத்தில்தான் வாகனத்தை மிக வேகமாக ஓட்ட முடிகிறது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வாகனத்தை நிறுத்த முடியும் என்கின்ற நம்பிக்கைதான், எமக்கு வாகனத்தை ஓட்டுவதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது. அதேபோன்றுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பயணத்தை வேகமாக செய்ய வேண்டும் என்றால், உங்களுடைய வாழ்க்கையை தேவையான இடத்தில் நிப்பாட்டுவதற்கான பிரேக் உங்களுடைய கையில் இருக்க வேண்டும். உங்களுடைய கையில் அந்த பிரேக் இருக்கின்றதா? அந்த பிரேக்காக தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் அமைந்து இருக்கப்போகின்றது.

மிக இலகுவான செயல்பாடுதான். எப்படி செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு காரியத்தை செய்யப் போகிறீர்கள் என்று நினைத்தீர்கள் என்றால்,

5,4,3,2,1… என்று மிக வேகமாக சொல்லிவிட்டு அந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த காரியத்தை மிகத் தெளிவாக செய்து முடிப்பீர்கள். ஏன் இந்த இலக்கத்தைச் சொல்ல வேண்டுமென்றால், சில நாட்களில் உங்களுக்கு மிக அலுப்பாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் கடினமாக ஒரு வேலையை செய்து விட்டு வந்து கதிரையில் அமரும் போது, தண்ணீர்த் தாகம் எடுக்கின்றது. எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதற்கு சோம்பலாக இருக்கின்றது. உங்களுடைய மனது சொல்லுகின்றது, “நீ கடினமாக உழைத்து இருக்கின்றாய். எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதை விட, படுத்து நித்திரை கொள்ளு!” என்று சொல்கின்றது.

உங்களுடைய உள்ளுணர்வு சொல்லுகின்றது, உடலுக்கு தாகம் ஏற்படுகின்றது தண்ணீர் குடி! என்று சொல்கின்றது. இப்போது மனம் சொல்வதைக் கேட்பதா? உள்ளுணர்வு சொல்வதை கேட்பதா? இரண்டுமே சரியானதுதான். ஆனால் எது மிகச் சரியானது என்பதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது என்பது, உடல் ஆரோக்கியத்திற்கானது, ஆகவே அதைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், மனதுக்கு ஒரு ஐந்து நொடி பிரேக் போட முடிந்தால், அந்த ஐந்து நொடியில் நீங்கள் உங்களுடைய தாகத்தை தீர்த்து விடுவீர்கள். அந்த ஐந்து நொடி பிரேக் போடுவதற்கு தான், இந்த ஐந்து நொடி ஒழுக்கம் பயன்படுகின்றது. எவ்வாறு செய்யலாம்?
5,4,3,2,1… என்று இலக்கத்தை எண்ணி

உடனடியாக ஒன்று என்று சொல்லி முடிக்கும் பொழுது நீங்கள் கதிரையில் இருந்து எழுந்தீர்கள் என்றால், அதே வேகத்தில் நீங்கள் சென்று தண்ணீரை குடித்துவிட்டு வந்து அமர முடியும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும் நான் சாதாரணமாக எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் என்னால் எழுந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு 5 லிருந்து 1 வரை எண்ணினால் மட்டும் என்னால் எழுந்து கொள்ள முடியுமா என்று ஒரு சந்தேகம் ஏற்படும்? இதற்குத்தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கத்தை உருவாக்கிய Mel Robbins சொல்லுகின்றார்.

தான் 41 வயது வரை மிகவும் கடினமான ஒரு வாழ்க்கையிலிருந்தேன், போதைக்கு அடிமையாகி, உடல் பருமன் அடைந்தது, என் வியாபாரத்தில் நட்டங்கள் ஏற்பட்டது. வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த அந்த வேளையில், தான் ஒரு றாக்கட் ஏவுகணை எழுகின்ற செயல்பாட்டை பார்த்தேன். அதில் 5,4,3,2,1… என்று சொன்னவுடன் அந்த றாக்கட் மிக வேகமாக பறந்தது.

என் மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது நானும் இந்த றாக்கட்டை போன்று மிக வேகமாக செயல் பட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் ஒரு சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி ஏற்பட்டது. நான் மறுநாள் காலை எழுந்து கொள்வதற்கு முன்பாக 5,4,3,2,1… என்று சொல்லி என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்துக்கொண்டு மிக வேகமாக எழுந்தேன், அதுவரையும் விடியற்காலையில் எழுந்து கொள்ள முடியாத எனக்கு அது ஒரு மிகப் பெரிய சக்தியைக் கொடுத்தது. நான் விடியற்காலையில் எழுந்து விட்டு, அதற்குப் பின்பாக ஒவ்வொரு செயல்பாடுகளை செய்யும் பொழுது ம் இவ்வாறு என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்து 5 லிருந்து 1 வரை எண்ணி நான் செயல்பட்டேன்.

என் செயல்கள் அனைத்தும் வெற்றி அளித்தது. ஒரு சில மாதங்களிலேயே என் போதைப்பழக்கம் விட்டுப் போனது. உடல் பருமன் குறைந்து. வியாபாரத்திலும் நல்ல வெற்றி கிடைத்தது. நான் இன்று நல்ல ஒரு வாழ்க்கை நிலையில் இருக்கின்றேன், என்று சொல்கின்றார். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்றால் 5 லிருந்து 1 வரை எண்ணும்பொழுது, அதற்குப் பின்பு எண்ணுவதற்கு எந்த இலக்கமும் கிடையாது.

0 உடன் இலக்கங்கள் மனதில் முடிந்துவிடுகின்றன. ஆகவே இதற்குப் பின்பு இயங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எழுந்து கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் உங்கள் மனதில் ஏற்படுகின்றது. அந்த இடத்தில் நீங்கள் உடனடியாக எழுந்து கொள்கின்றீர்கள். அதுமட்டுமில்லாமல், 5,4,3,2,1… என்று சொல்லும் பொழுதே, ஒரு சிறிய அழுத்தத்தைச் சேர்த்து நீங்கள் சொல்லிக் கொண்டு வரும் பொழுது, அந்த வேகம், உங்களை இலக்கம் ஒன்று சொல்லும் பொழுதே இயங்க வைக்கின்றது. அதனால் நீங்கள் மிக வேகமாக உடலில் ஒரு அசைவு ஏற்படுத்துகின்றீர்கள். உடனடியாக உங்களுக்கு ஒரு Motivation கிடைக்கின்றது. அந்த சக்திதான் உங்களை அடுத்த காரியத்தை செய்ய வைக்கின்றது. படிக்க விரும்பினால் படிக்கலாம், வேலை செய்ய விரும்பினால் வேலை செய்யலாம், எதை செய்ய விரும்புகின்றீர்களோ அதை செய்வதற்கான தைரியத்தையும் சக்தியையும் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் உங்களுக்கு கொடுக்கின்றது. இது உலகத்தில் இருக்கின்ற பலரால் கையாளப்பட்டு, தங்கள் வாழ்க்கையில் வெற்றி அளித்த ஒரு முறையாக பலரும் தங்கள் வெற்றிப் பயணத்தில் பதிவேற்றி வருகின்றார்கள். நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி பயணத்தில் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது?


சிந்தனை & எழுத்து,
சி.சிவவினோபன்