எது நியாயமான தண்டனை
வெள்ளை உடையில் புள்ளி மானாகத் துள்ளி ஓடினாள் பள்ளிக்கு செல்லும் இளம் பருவ சிட்டு இளவரசி. பெயருக்கு ஏற்ற இளவரசியாகத்தான் திகழ்ந்தாள் அவள். சிவந்த நிறமும் மெலிந்த தோற்றம் கொண்ட அவள் அழகுதான். தான் என்ற அகங்காரம் அவளுக்குண்டு. அழகு மட்டுமல்ல அறிவாளியும் கூட. கொஞ்சம் திமிரும் கொண்ட அவள் யாருடனும் அதிகம் கதைக்க மாட்டாள். அதனால் தலைக்கனம் பிடித்த பெண் என்னும் பெயரும் அவளுக்குண்டு. பெண்கள் பாடசாலையில் படிக்கும் அவளுக்கு ஆண்களிடம் பழகும் சந்தர்ப்பங்கள் குறைவுதான்.
உயர்தர வகுப்பில் படிக்க ஆரம்பித்த பின் மாலை நேர வகுப்பிற்கு தனியார் பாடசாலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள் படிப்பில் கெட்டிக்காரி. அவள் மருத்துவத் துறையை தெரிவு செய்திருந்தால் அங்கு தான் அவளுக்கு ஆண்களின் தொல்லைகள் ஆரம்பித்தன அவள் யாரையும் கணக்கெடுக்கவில்லை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்
திரும்பத்திரும்ப அவளுக்குத் தொல்லை கொடுத்த ஆண்களிடம் அவள் சாதுர்யமாகப் பேசி விலகிக் கொண்டால் ஆனால் மோகன்ராஜ் என்னும் பையன் அவன் தொடர்ந்தபடி இருந்தான் தான் அவளை காதலிப்பதாகவும் தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தினான்.
அவன் ஒரு பணக்கார வீட்டுப் பையன் எப்பொழுதும் ஒரு நண்பர் வட்டாரம் அவனை சுற்றி இருக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கமும் அந்த நண்பன் கூட்டத்தில் இருந்தது தண்ணியடிக்கும் பழக்கம் கூட அவர்களிடம் இருப்பதாக அவர்களின் ஆசிரியர் கண்டதையும் அவள் அறிவாள்
எவ்வளவுதான் அவள் விலகிச் சென்றாலும் மோகன்ராஜ் விடுவதாயில்லை காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்தான் இளவரசி கடிதத்தை வாசிக்காமல் அவர்கள் முன்னிலையிலேயே கிழித்துப் போட்டு விட்டாள். மோகன்ராஜ் ஆத்திரப் பட்டான் சம்மதம் சொல்லி விடு இல்லாவிட்டால் உயிருடன் இருக்க மாட்டாய் என வெருட்டத் தொடங்கி விட்டான்
என்னடா செய்வாய் என கேள்வி கேட்டு மடக்கினால் இளவரசி கோபம் தலைக்கேற மோகன்ராஜ் மெதுவாக சிரித்தான் பயந்துவிட்டான் என இளவரசி எண்ணினாள். மருத்துவத் துறைக்கான புதுமுக பரிட்சை நெருங்கிவிட்டது இளவரசி மனதை அமைதியாக்கி கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினாள். மோகன்ராஜ் தொல்லையுமற்ற இந்த நிலையில் அவள் நன்றாகப் படித்து பரிட்சை எழுத ஆயத்தமானாள்
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது மாலை ஆறு மணி போல் அவள் துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது யாரோ அழைப்பது கேட்டு திரும்பிப் பார்த்தால் ஐயோ என அலறினாள் முகம் எல்லாம் எரிந்து அவளது நெஞ்சுப் பகுதியும் எரிந்தது, அவள் அலறி துடித்தாள் சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள் உடனடியாக அவளை வைத்தியசாலையில் சேர்த்தனர்
அமில வீச்சுக்கு இலக்காகி அவள் மூன்று மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினாள்
அவளது முகத்தில் தழும்புகள் இல்லாத போதும் கழுத்துப் பகுதியும் நெஞ்சுப் பகுதியும் கூடுதலாக பாதிக்கப்பட்டிருந்தது மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு உடலில் மாற்று பகுதிகளிலிருந்து சதை எடுத்து ஒட்டித்தான் சரிபடுத்த முடிந்தது அப்படியிருந்தும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவருடைய மார்பு பகுதியில் ஏற்பட்ட உட்சேதங்களால் பால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவளுடைய குழந்தைக்குக் கூட பாலூட்ட முடியவில்லை
குற்றம் செய்தவனை உடனடியாக காவல்துறை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டது தான் ஆனால் பாதிக்கப்பட்ட இளவரசி ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்கின்றாலே?
காதலை ஏற்க மறுத்ததற்காக இத் தண்டனையா? இது நியாயமாகுமா?
எழுத்து,
மங்கை அரசி.
