vino

எது நியாயமான தண்டனை

வெள்ளை உடையில் புள்ளி மானாகத் துள்ளி ஓடினாள் பள்ளிக்கு செல்லும் இளம் பருவ சிட்டு இளவரசி. பெயருக்கு ஏற்ற இளவரசியாகத்தான் திகழ்ந்தாள் அவள். சிவந்த நிறமும் மெலிந்த தோற்றம் கொண்ட அவள் அழகுதான். தான் என்ற அகங்காரம் அவளுக்குண்டு. அழகு மட்டுமல்ல அறிவாளியும் கூட. கொஞ்சம் திமிரும் கொண்ட அவள் யாருடனும் அதிகம் கதைக்க மாட்டாள். அதனால் தலைக்கனம் பிடித்த பெண் என்னும் பெயரும் அவளுக்குண்டு. பெண்கள் பாடசாலையில் படிக்கும் அவளுக்கு ஆண்களிடம் பழகும் சந்தர்ப்பங்கள் குறைவுதான்.

உயர்தர வகுப்பில் படிக்க ஆரம்பித்த பின் மாலை நேர வகுப்பிற்கு தனியார் பாடசாலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள் படிப்பில் கெட்டிக்காரி. அவள் மருத்துவத் துறையை தெரிவு செய்திருந்தால் அங்கு தான் அவளுக்கு ஆண்களின் தொல்லைகள் ஆரம்பித்தன அவள் யாரையும் கணக்கெடுக்கவில்லை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்

திரும்பத்திரும்ப அவளுக்குத் தொல்லை கொடுத்த ஆண்களிடம் அவள் சாதுர்யமாகப் பேசி விலகிக் கொண்டால் ஆனால் மோகன்ராஜ் என்னும் பையன் அவன் தொடர்ந்தபடி இருந்தான் தான் அவளை காதலிப்பதாகவும் தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தினான்.

அவன் ஒரு பணக்கார வீட்டுப் பையன் எப்பொழுதும் ஒரு நண்பர் வட்டாரம் அவனை சுற்றி இருக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கமும் அந்த நண்பன் கூட்டத்தில் இருந்தது தண்ணியடிக்கும் பழக்கம் கூட அவர்களிடம் இருப்பதாக அவர்களின் ஆசிரியர் கண்டதையும் அவள் அறிவாள்

எவ்வளவுதான் அவள் விலகிச் சென்றாலும் மோகன்ராஜ் விடுவதாயில்லை காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்தான் இளவரசி கடிதத்தை வாசிக்காமல் அவர்கள் முன்னிலையிலேயே கிழித்துப் போட்டு விட்டாள். மோகன்ராஜ் ஆத்திரப் பட்டான் சம்மதம் சொல்லி விடு இல்லாவிட்டால் உயிருடன் இருக்க மாட்டாய் என வெருட்டத் தொடங்கி விட்டான்

என்னடா செய்வாய் என கேள்வி கேட்டு மடக்கினால் இளவரசி கோபம் தலைக்கேற மோகன்ராஜ் மெதுவாக சிரித்தான் பயந்துவிட்டான் என இளவரசி எண்ணினாள். மருத்துவத் துறைக்கான புதுமுக பரிட்சை நெருங்கிவிட்டது இளவரசி மனதை அமைதியாக்கி கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினாள். மோகன்ராஜ் தொல்லையுமற்ற இந்த நிலையில் அவள் நன்றாகப் படித்து பரிட்சை எழுத ஆயத்தமானாள்

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது மாலை ஆறு மணி போல் அவள் துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது யாரோ அழைப்பது கேட்டு திரும்பிப் பார்த்தால் ஐயோ என அலறினாள் முகம் எல்லாம் எரிந்து அவளது நெஞ்சுப் பகுதியும் எரிந்தது, அவள் அலறி துடித்தாள் சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள் உடனடியாக அவளை வைத்தியசாலையில் சேர்த்தனர்

அமில வீச்சுக்கு இலக்காகி அவள் மூன்று மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினாள்

அவளது முகத்தில் தழும்புகள் இல்லாத போதும் கழுத்துப் பகுதியும் நெஞ்சுப் பகுதியும் கூடுதலாக பாதிக்கப்பட்டிருந்தது மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு உடலில் மாற்று பகுதிகளிலிருந்து சதை எடுத்து ஒட்டித்தான் சரிபடுத்த முடிந்தது அப்படியிருந்தும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவருடைய மார்பு பகுதியில் ஏற்பட்ட உட்சேதங்களால் பால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவளுடைய குழந்தைக்குக் கூட பாலூட்ட முடியவில்லை

குற்றம் செய்தவனை உடனடியாக காவல்துறை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டது தான் ஆனால் பாதிக்கப்பட்ட இளவரசி ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்கின்றாலே?

காதலை ஏற்க மறுத்ததற்காக இத் தண்டனையா? இது நியாயமாகுமா?


எழுத்து,
மங்கை அரசி.

காற்றில் ஒரு மாற்று உணவு!

மனிதன் உயிர் வாழ காற்று அவசியமானது, ஆனால் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு மனிதனால் உயிர்வாழ முடியாது. சுவாசத்திற்கு உதவும் காற்றானது உணவையும் தந்து விட்டால் நல்லது தானே அதுமுடியுமா? முடியும் என்கிறார்கள் பின்லாந்தை சேர்ந்த “சோலார் புட்ஸ்”( Solar Foods).

காற்றிலேயே மாசாகவே கணிக்கப்படும் CO2 காபனீரொட்சைட்டு வாயுவை, சூரிய மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு ‘சோலெய்ன்’ என்னும் பெயருடைய சத்துமாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது சோலார் புட்ஸ்.

தானியங்களை சேர்த்து செய்யும் சத்து மாக்களில் இருக்கும் சுவை, புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பும் சேர்ந்த சோலெய்ன் புரதமாவைக், காற்று மாசில் இருந்து சோலார் புட்ஸ் தயாரிக்கின்றது.

ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு, ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை ஆனால் சோலெய்னிற்கு வெறும் 10 லிட்டர் தண்ணீரே போதும். பருவ நிலை மாற்றத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவிற்கும் பஞ்சம் ஏற்படாமல், மனிதனுக்கு சத்துணவு மாவாக சோலெய்ன் மாவை விற்பனை செய்யலாம் என சோலார் புட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்னைய காலங்களில் முனிவர்களும் யோகிகளும் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உணவு இன்றி நிஷ்டையில் இருந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள் காற்றிலிருந்து தமக்கான உணவையும் நீரையும் எடுத்துக் கொள்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. இதுபோன்று இப்போதய விஞ்ஞானிகளும் அதே காற்றில் இருந்து நேரடியாக உணவை தயாரிக்க தொடங்குகின்றார்கள்.

காற்றின் கழிவில் உணவு இருக்கின்றது, மனிதனின் கழிவாக கணிக்கப்படும் சிறுநீரில் நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற சரிவான பொருட்கள் உள்ளன, இவற்றை தாவரத்திற்கான உரமாக மாற்ற முடியும் என்கின்றது அறிவியல். ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு(E.O.O.S) சுவிஸ்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (E.A.W.A.S) குளியலறை கலன்களைத் தயாரிக்கும் லாபென் ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன கழிப்பிடங்களிலிருந்து சிறுநீரை பிரித்து எடுத்து, கிருமிகளின்றி சுத்திகரித்து, சுத்தமான உரமாக உருவாக்கினர். இந்த உரத்திற்கு “ஆரின” எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளிற்கும் போடலாம், என சுவிஸ் வேளாண்மை துறை சான்று வழங்கியுள்ளது. பொதுக் கழிப்பிடங்களில் உரத்தொழிற்சாலை உருவாக்கும் இத் திட்டம் நல்லதுதானே!


எழுத்து,
மங்கை அரசி.

அறிவியலுடன் கூடிய ஆன்மிகம்

கண்ணுக்குப் புலப்படாத உயிருள்ளவரை மனித வாழ்வு உடல் இயக்கம் உள்ளதாக இருக்கும். மின்சாரம் மின் கம்பிகளில் ஓடுவதை போல உடலில் உயிர் ஓடிக்கொண்டு இருக்கின்றது. மின்னோட்டத்தின் தடையோ மாற்றமும் ஏற்பட்டால் அந்தக் கருவி பழுதாகிவிடும் இதைப்போலவே உயிர் ஓட்டத்தில் மாற்றமோ தடையோ ஏற்பட்டால் உடலில் வலி நோய் என்பன ஏற்படும் உறுப்புக்கள் பாதிக்கப்படும் மின்சாரம் செல்லும் கம்பியை சுற்றி காந்தம் உருவாவதை போலவே மனித உடலை சுற்றி காந்த அடர்த்தி இருக்கும் இந்த ஜீவகாந்த அடர்த்தி ஒருவனின் அறிவாட்சித் திறனோடு தொடர்பு கொண்டது என்பதை தற்கால மருத்துவம் மனோவியல் மற்றும் தத்துவ முறைகள் நிரூபித்துள்ளன.

ஒரு மனிதனின் உடல் மன ஆற்றல்களை மேம்படுத்தி அழகியல் பழக்கம் வாழ்வியல் தத்துவங்களை ஒத்துப் போவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனிற்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளான மற்றவர்களிடம், அன்பாகவும் நன்றியுணர்வுடன் பழகுதல், தனது தவறுகளை திருத்திச் செயல்படும் மனத்திறன், சூழ்நிலைகளைக் கட்டுப்பாடுடனும் சுய ஒழுக்கத்துடனும் கையாளுதல், நல்லெண்ணத்துடன் கூடிய நேர்மை குணம், புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு இவை அனைத்தும் ஆன்மீகம் கற்றுக் கொடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை

“மதங்களும், கலைகளும், விஞ்ஞானமும் ஒரு மரத்தின் பல்வேறு கிளைகள்” என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். பரிமாண வளர்ச்சி தத்துவத்தை மொழிந்த சார்லஸ் டார்வின் “மனித குலமும் இந்த பிரபஞ்சமும் இறைவன் இருப்பதற்கான மிகப்பெரிய அத்தாட்சி” என்கின்றார். இன்றைய தொலை தொடர்பு தொழில் நுட்பத்தின் தந்தையான விஞ்ஞானி மார்க்கோனி “இறை உணர்வுடன் ஜெபத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குண்டு, நான் ஒரு கத்தோலிக்கன் என்பதனால் மட்டுமல்ல நான் ஒரு விஞ்ஞானி என்பதனாலும் இறை நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன்.” என்கிறார் மார்க்கோனி.

ஆன்மீகமும்  இறை நம்பிக்கையும் அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல என்பது போன்ற வாதத்தை சிலர் வைக்கின்றார்கள். அது தவறானது, தன்னம்பிக்கையை ஆன்மீகம் வளர்கின்றது.  தோல்வியை கண்டு துவளாத மன நிலையை ஏற்படுத்துகின்றது.

உடல் உள மன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிமுறைகள் பகவத்கீதையில் காட்டப்பட்டுள்ளது சிறந்ததொரு அறிவியல் நூலாக திருமந்திரம் காணப்படுகின்றது. பல அறிவியல் விடயங்கள் அதில் காட்டப்பட்டுள்ளது. பொதுமறையாம்  திருக்குறளில் வாழ்வியல் அறிவுரைகள் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, ஆராய்ந்து பார்த்தோம் என்றால் ஆன்மீக நூல்கள் என நாம்  விலக்கி வைக்கும் பல நூல்களில் அறிவியல்  மிகுந்து இருப்பதும் நோயைத் தீர்த்து வைப்பதற்கும்,  தணித்து வைப்பதற்கும், உருவாகாமல் இருப்பதற்குமாகவும்  உணவே மருந்து  எனவும்  இங்கே அதிகமாக பொக்கிஷங்கள் அறிவுடன் விளக்கப்பட்டுள்ளன.

இவற்றை மத வேறுபாடின்றி புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.


எழுத்து,
மங்கை அரசி.

ஊருக்குத் த(தா)ன் உபதேசம்

ஊருக்குத்  த(தா)ன்  உபதேசம்

நாட்டின் தலைவர் என்றவகையில் நியாயமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியது அவசியம் என அவர் உணர்ந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளைக் களைய வேண்டும் என்றால் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு சரியான வகையில் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தீர்ப்பணமாக இருந்தார்.

பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை என்பன நாட்டில் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தது. பாடசாலை மாணவிகள், சிறிய பெண்குழந்தைகள் உட்பட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தனர். கொலைகளும் நடந்தேறின.

தங்கு தடையின்றி போதைவஸ்து வியாபாரம் தலை விரித்து ஆடியதனால் தான் மேற்படி குற்றங்கள் மேற்படி குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை உணர்ந்து கொண்ட தலைவர் போதை வாஸ்து குற்றவாளிகளிற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்னும் சட்டத்தை விதித்தார்.


பல தொண்டு நிறுவனர் மற்றும் அயல் நாட்டுகல் மற்றும் உதவி புரியும் பெரிய நாடுகள் எல்லாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், தலைவர் தனது நோக்கத்தில் இருந்து விலகவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல எதிர்ப்புக்களை எதிர் கொண்டார். மூன்று மாத இலுப்படியின் பின் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனைக்கு கைதிகட்கான (தூக்கில் இடும் நிகழ்வு) கையொப்பத்தை தலைவர் இட்டு விட்டார். திகதிகள் குறிக்கப்பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படத் தொடங்கி விட்டது. இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட வண்ணம் இருந்தது.


தலைவர் எதிர் பாராத வண்ணம் போதைவியாபாரத்தின் பெரிய முதலைகள் பிடிபட்டன. அது வேறு யாருமல்ல தலைவரின் அருமை மகளின் கணவரும், அவர்கள் பெற்றேடுத்த சீமந்தப் புத்திரனும் தான். சட்டத்தை வளைத்துவிட தலைவரால் முடியவில்லை. உலகம் முழுவதும் தெரிந்த இரகசியத்தை மூடி மறைக்க முடியுமா?

இதயம் முழுவதும் வலியெடுக்க மகள் வாலிப பேரன் உட்பட மருமகனுக்கும் மரணதண்டனை நிறைவேற்றும் படிவத்தில் கையொப்பமிடும் பொழுது கைகள் நடுங்கின, மறுகணம் தன நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார்.

எழுத்து,
மங்கை அரசி.

காயகல்பம்.



மரணத்திற்கு ஒரு மாற்று மருந்து.

உங்களுக்கு மரணிக்க ஆசையா என்று கேட்டால், ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து ஒரே வார்த்தை ஒலிக்கும், “இல்லை எனக்கு மரணிக்க ஆசை இல்லை இல்லை”. இதோ மரணிக்க ஆசை இல்லாதோர் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள். மரணம் என்பது ஒருவகையான உடலின் ஊனம். அல்லது உடலின் பசி என்று சொல்லலாம். உடல் எப்போதும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தவண்ணமே உள்ளது. புரியும் படி சொல்லவேண்டும் என்றால். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு தாகம் ஏற்படுகின்றது, பசிக்கின்றது, கழிவகற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதெல்லாம் அத்தியாவசிய செயற்பாடு என்று மனிதன் வகைப்படுத்தியுள்ளான்.

இப்படி அத்தியாவசிய செயற்பாடுகளைச் செய்யாமல் விட்டால், இதற்குப் பதில் உடல் மரணத்தை நாடும். ஆகவே உடல் ஒன்றை எதிர்பார்க்கின்றது அதைக் கொடுக்காவிட்டால் அதற்குப் பதில் மரணத்தை எதிர்பார்க்கின்றது. இதுதான் இலகுவான புரிந்துகொள்ளுதல். அப்படி என்றால் உடல் எதிர்பார்க்கும் உணவைக் கொடுத்தால் எமக்கு மரணம் வராமல் அல்லவா இருக்க வேண்டும்? அப்படி இருக்கையில் தினமும் மூன்றுவேளை உணவுண்ணும் பக்கத்துவீட்டு அண்ணனும் 35 வயதில் அல்பாயுளில் மரணமடைந்த செய்தி தான் என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.

அது எப்படி மரணம் என்ற ஒன்று நிகழலாம்? உடலிற்குத் தேவையான ஒன்றைக் கொடுக்கும் போதும் உடல் மரணத்தை நாடும் என்றால் அதில் நியாயம் இல்லையே என்ற யோசனையுடன் நடந்து சென்று கொண்டிருந்த நான் தெருவில் கண்ட ஒரு காட்சி என்னை தெளிவுபடுத்தியது. அதிக எடையோடு தெருவில் சென்ற ஒரு வண்டி கவிழ்ந்து விழுந்து கிடந்தது, அதை பார்த்த அங்கே அதிக எடையோடு வந்த இன்னுமோர் வண்டி, அந்த இடத்திலேயே நின்று அதன் எடையை இன்னுமோர் வண்டியில் இறக்கி வைத்துக் கொண்டிருந்தது. இப்போது எனக்குத் தெளிவு பிறந்தது.

உணவு என்பதால் மரணம் தடைப்படுவது கிடையாது, மரணம் தள்ளிப் போடப் படுகின்றது. மரணம் தடைப்பட வேண்டும் என்றால் மருந்து உண்ணவேண்டும். மருந்து என்றால் என்ன? உணவு என்றால் என்ன?

விருந்து சமைத்து உண்டால் அது உணவு. வீரியம் உள்ளதை அறிந்து அரைத்து உண்டால் அது மருந்து. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், உடல் ஏன் கழிவகற்றுகின்றது? போதுமான உணவைக் கொடுத்தால் எதற்காக உடல் மிகுதியென்று கழிவக்கற்ற வேண்டும்? அதற்க்கு ஒரே காரணம் நாம் தேவைக்கு அதிகமாக வயிற்றை நிரப்பி வைக்கின்றோம் அதனால் உடல் உழைத்துக் களைத்து உயிரை இழக்கின்றது. நாம் உண்ணும் உணவு சிகப்பு இரத்தமாகவும் வெள்ளை இரத்தமாகவும் உடல் முழுதும் சென்று எம்மை இயக்கிக் கொண்டு உள்ளது. சிகப்பு இரத்தம் என்னை உற்சாகமாக வைத்திருக்கவும், வெள்ளை இரத்தம் எம் உடலில் உள்ள தீய கிருமிகளை அழிக்கவும் பயன் படுகின்றது. இந்த இரண்டையும் சீர்படுத்தும் அளவு மருந்து உண்டாலே போதும். உடல் மலம் கழிப்பதை நிறுத்திவிடும். இதனால்த் தான் சித்தர்கள், தியானத்தில் அதிக காலம் அப்படியே அமர்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்கள்.

இப்போது ஒரு சந்தேகம் வந்திருக்கும் அது எப்படி மருந்துணவைக் கண்டு பிடிப்பது அதில் எப்படி உட்கொள்ளும் அளவைக் கண்டு பிடிப்பது என்று சந்தேகம் வரும். அதற்கு நீங்கள் முதலில் தமிழ் படிக்க வேண்டும், தமிழில் உள்ள பழைய நூல்களைத் தேடிக்  கற்க வேண்டும். இந்த கட்டுரையின் முடிவில் இப்போது உங்களுக்கு ஒரு சில காயகல்ப உணவுகைக் குறிப்பிடுகின்றேன் அதை உட்கொள்ளும் முறையையும் சொல்லுகின்றேன், செய்து பாருங்கள். அறுகம்புல்லு, துளசி, முருங்கையில்லை, நெல்லிக்காய்.

மேலே சொன்ன உணவுப் பொருட்களை தாவரத்தில் இருந்து பறிக்கும் போதே மந்திரங்கள் சொல்லி அல்லது தேவாரங்கள் பாடிப் பறிக்க வேண்டும். அதற்கு காரணம் தாவரத்தில் இருந்து பறிக்கும் போது, தாவரம் அதன் வலியை விஷமாகக் கக்கிவிடாமல் இருக்க மந்திர ஒலிகளை எழுப்பவேண்டும். அதன் பின் பறிக்கப்பட்ட தாவர பகுதிகளை சூரிய நிழலில் காயவைக்கவேண்டும். முக்கிய கவனம் சூரிய ஒளியில் இல்லை, சூரிய நிழலில். அதாவது பகல் வேளையில் ஒரு குடை அல்லது தாள்வாரத்தின் நிழலில் காயவைக்கவேண்டும். காய்ந்து தொட்டால் உதிரும் பக்குவத்தில் அதை எடுத்து நன்றாக சாம்பலாகும் வண்ணம் அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த துகள்களை உள்ளங்கையில் எடுத்து தேன்குளைத்து அருந்தினால் அது வாய் முதல் வயிறுவரை சென்று வேகமாக குருதியில்க் கலந்து, உடலிற்கு மருந்து வழங்கும். இதன் மூலம் உடல் அதிக சக்தியையும், குறைந்த வேலையையும் பெறும். இதோடு உங்கள் ஆத்மாவையும் ஒன்றிக்க வைத்தால், மரணமின்றி மகிழ்ந்து வாழலாம்.

மரணத்தில் இன்பம் மாற்றுண்டு,

மாற்றன்று மரணமே இன்புற்று!


சிந்தனை சிவவினோபன்.

விண்கல்லில் இருந்து விழுந்த மழை.


இன்றும் எம் உலகில் எத்தனையோ விண்கற்கள் விழுந்தவண்ணமே உள்ளது. கண்மூடி உறங்கும் இரவில் சற்று இரவை உற்றுப் பார்த்தால் வானில் ஏதோ ஒன்று உலகை நோக்கி ஒளிர்ந்து கொண்டே வந்து மறைந்து போவதை பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படி உண்டென்றால் நீங்கள் பார்த்தது எரிகல். அவ்வாறு வந்த அந்த எரிகல்தான் விண்கல். விண்ணில் எண்ணற்ற கற்கள் இன்றும் இயக்கப் பாதை இன்றி உலாவிக்கொண்டுள்ளன. அவை பூமியின் இயக்கப்பாதைக்குள் வந்தால், பூமி அதை தன்னைநோக்கி இழுக்க ஆரம்பிக்கும். அப்போது பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியின் வளிமண்டலத் துணிக்கைகளுடன் மோதி எரிய ஆரம்பிக்கும். அவ்வாறு எரியும் கற்களில் பல பூமியை அடையமுன்னமே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அவ்வாறு முழுமையாக எரியாமல் பூமியில் வந்து விழுந்தால் அதுவே விண்கல் என்று சொல்லப்படுகின்றது.

இது பூமியில் வந்து விழுகின்றது என்று சொல்வதை விட பூமியோடு மோதுகின்றது என்றே சொல்லவேண்டும். இவ்வாறு மோதியே பூமியில் டைனோசர் அழிந்தது என்று சொல்வார்கள். ஆனால் நாம் பார்க்க இருக்கும் கதை அதையும்விட பழமைவாய்ந்த கதை. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே பல விண்கற்கள் பூமியைத் தாக்கியதாகச் சொல்லுகின்றனர். பூமிக்கு வந்த இந்த விண்கற்கள் தான் மலையாகவும் அதே நேரம் பெரும் பள்ளத்தாக்கையும் ஏற்படுத்தியுள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதைவிட பெரும் உண்மை என்னவென்றால் நாம் இன்று பாவிக்கும் இரும்பு இந்த உலகைச் சேர்ந்ததே இல்லையாம். விண்ணில் உள்ள விண்கற்களில் அதிகம் உள்ளது இரும்புதானாம். பல விண்கற்கள் வீழ்ந்துதான் மண்ணில் இரும்பு கலந்தது என்றும் விஞ்ஞானிகள் அறிக்கை பதிந்துள்ளனர்.
இரும்பின் கதையை விட ஆச்சரியமான இன்னுமொரு விடயம் உள்ளது. நாம் பருகும் அத்தியாவசிய பொருளாகிய தண்ணீரே விண்ணில் இருந்து வந்த விண்கல் மூலமாகத் தான் பூமிக்கு வந்துள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிய விண்கலமான “ஹயபுச” 2010 ஆம் ஆண்டில் “இடோகர்” என்று பெயர் சூட்டப்பட்ட விண்கல்லின் மாதிரிகளை பூமிக்கு அனுப்ப, அதை ஆராய்ந்த அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அந்த விண்கல்லில் நீர் மூலக்குறுகள் இருந்துள்ளதை பார்த்து ஆச்சர்யப்பட்டு உறுதியும் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளில் மேற்கொண்ட ஆராய்வில் பலகோடி ஆண்டுகளிற்கு முன் ஒரு வால்நட்சத்திரம் பூமியில் மோதியிருப்பதாகவும் அதன் வால்பகுதியில் இருந்த நீர்மூலக்கூறுகள் உலகை சூழ்ந்துகொண்டது என்றும். சூரியனின் வெப்பத்தில் பூமியின் மத்தியில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாக காற்றுருவாக்கியதாகவும், விஞ்ஞானிகள் ஆய்வைப் பூர்த்திசெய்துள்ளனர்.

இன்று பலகோடி ஆண்டுகளின் பின் மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் என்று இந்த உலகம் இப்படி இருக்க ஒரே ஒரு காரணம் அந்த வால்நட்சத்திரத்தின் மோதல் தான். அதனால்த் தான் நாம் இன்றும் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதிக் கொண்டே இருக்கின்றோமோ என்னவோ?

எழுத்து,
மங்கை அரசி.

பொய்மையும் வாய்மையிடத்து…

பொய்மையும் வாய்மையிடத்து…

அருண் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டான். என்ன இது? இப்படியெல்லாம் நடக்குமா! சீ….. மனம் அருவருப்பில் மூழ்கியது. அருண் பின்னோக்கி நினைத்துப் பார்த்தான். அவன் அழகான வாலிபன் தான். வட்டவடிவான முகவெட்டு பெரிய கண்கள் எழும்பிய மூக்கு. சின்ன வாய், வாயிற்கும் மூக்கிற்கும் இடையில் அரும்பு மீசை, நீளமான கைவிரல்கள், நீளமான கால்கள். அருணிற்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.தானே தன்னை வர்ணிப்பதாக இருந்தாலும், இவையெல்லாம் உண்மைதானே! தானே தனக்குச் சமாதானம் செய்துகொண்டான்.



திரும்பவும் எண்ண அலைகள் வட்டமிட்டன, படிப்பில்க் கெட்டிக்காரன், விளையாட்டில்ச் சூரப்புலி அவன் பள்ளிப் படிப்பை முடித்ததும் வேலைக்கும் போகத் தொடங்கிவிட்டான. உத்தியோகம் புருஷலட்சனம் என்பதற்கு இணங்க சிறந்த மனிதனாகத் தான் அவன் விளங்குகின்றான். இப்படி எல்லாத் திறமையும் உள்ள அருண் திடீர் என்று சோர்ந்து போனது ஏன்? எல்லாம் அன்று இரவு நடந்த அந்த நிகழ்வுதான்.


அவ்னது நண்பர்கள் வட்டம் எதோ புதிய படம் பார்ப்பதாக நண்பன் ஒருவரின் அறையில் கூடினர். அருணையும் அழைத்திருந்தனர். படம் பார்க்கத் தொடங்கிய பிறகு தான் அருணிற்கு அது நீலப் படம் என்பது புரிந்தது. அவனிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் அவனின் நண்பர்கள் உற்சாகமாக இருந்து அவதானித்தனர். அருணிற்கு அருவருப்பாக இருந்தது. அவன் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான். ஆனால் அவனின் நண்பர்கள் அவன் வெளியேறியது கூட கவனிக்காது படம் பார்த்தனர்.


அப்போது தான் அவனிற்கு தான் தன் சக நண்பர்களிடம் இருந்துவித்தியாசப் படுவது புரிந்தது. பாலியல் ரீதியான சில புத்தகங்கள் வாங்கி வந்து படித்ததன் பின்புதான் அவனிற்கு அவனது குறை புரிந்தது. அவன் ஒரு திருநங்கை போன்றவன் என்பதை புரிந்துகொண்டான். மிகவும் சோர்ந்து போனான். திரும்பவும் எண்ண அலைகள் வட்டமிட்டன,


அருணின் பெற்றோர்கள் அருணிற்கு திருமண ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர். திருமணத்தில் ஆர்வமில்லாத அருண் தன் சம்மதத்தில் தாமதம் காட்டி வந்தான். உண்மை நிலை தெரிந்த பின் தான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

அருண் மனதை ஒருநிலைப்படுத்த முயன்றான் ஒரு சில நிமிடங்கள் தியானத்தில் இருந்தான்,அமைதியான மனதுடன் ஆண்டவனை வழிபட்டன். இக்கட்டான சூழ்நிலையில் இறைவனை உளமார வழிபட்டால், நல்வழி கிடைக்கும் என்ற தாரக மந்திரத்தை அப்பா வாயால்க் கேட்டிருக்கின்றான். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, மனதில் ஏற்படட எண்ணங்களுடன் கடவுளை மனதார உருகி வழிபட்டான், பெற்றோர் மனம் நோகாதபடி தனக்கு ஒரு வழிகாட்டும் படி மனமுருகி வேண்டினான்.

அருணாநிற்கு ஒரு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அது ஒரு ராயில்ப் பயணம் அன்றைய பயணத்திற்கு கூட்டம் அதிகம் இல்லை. அவனுடைய இருக்கைக்கு முன்னால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள், அந்தப் பெண் மிகவும் சோகமாக இருந்தால், அவளை அறியாமேலேயே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மற்றவர்கள் அறியாத வண்ணம் கண்களைத் துடைத்த வண்ணம் இருந்தால்.

பெண்களைக் கண்டால் விலகியே போகுமா அருணன் அந்தப் பெண்மீது இரக்கம் கொண்டான். தன்னுடைய நிலையித் தான் அந்தப் பெண் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டான். அதனால் அந்தப் பெண்ணிடம் பேச்சுக்கு கொடுக்க ஆரம்பித்தான். தன்னை நண்பனாக ஏற்றுக் கொள்ளும்படி முதலிக் கேட்டுக் கொண்டான். அவளிற்கு என்ன பிரச்சினை என்று சொல்லும் படி கேட்டுக் கொண்டான். அந்தப் பிரச்சினைக்கான தீர்வைத்த தருவதாகக் கூறினான்.

ஆனால் அந்தப் பெண் முடியாது என்று தலையை ஆட்டினாள். என்னுடைய பிரச்சனைகளை உங்களாத் தீர்க்க முடியாது என்று வாய் வீட்டுக் கூறினாள். தீர்க்க முடியாது என்று அருணணிற்குப் புரிந்துவிட்டது. அந்தப் பெண்ணிற்கும் தனக்குரிய பிரச்சினை தான் என முடிவு செய்து கொண்டான். அதனால் அந்தப் பெண்ணிடம் திரும்பவும் அவன் தன்னால் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என உறுதியாகக் கூறினான். இதுவரை எந்தப் பெண்ணிடமும் இப்படி ஒரு நெருக்கத்தை அவன் காட்டியதில்லை. பெண்கள் என்றாலே விலக்கிப் போகும் அருணன், இந்தப் பெண்ணிடம் மட்டும்பிரச்சினையைத் தீர்ப்பதாக உறுதி கூறினான்.

அந்தப் பெண்ணும் வாய் திறந்தாள், அவளின் பதிலைக் கேட்டதும் அருணிற்கு கடவுளின் அருள் கிடைத்துவிட்டது என்னும் ஆறுதல் நிலை ஏற்பட்டது.

அப்படி அந்தப் பெண்  என்ன தான் கூறினாள்?! அவளை ஒருத்தன் காதலிப்பதாக கூறி ஆவளுடன் நெருங்கிப் பழகி அவள் வயிற்றில் கரு உருவாக்கிய பின் அவளின் தொடர்பையே துண்டித்துக் கொண்டான். தற்கொலையைத் தவிர வேறு வழியே இல்லை என்னும் நிலையில் அவள் உள்ளாள் என்று கூறினாள்.

ஆனால் அவளை நம்பி அவளின் தாய், நோயான தந்தை, தம்பி தங்கை என்று நான்கு உயிர்கள் உள்ளன. அதனால் அவளால் சாத்விக கூட ஏற்படுத்த முடியாது என்ன செய்வது என்பது தான்  புரியவில்லை, அவளின் அழுகை தொடர்ந்தது.

அருணன் முன் பின் யோசிக்கவே இல்லை உடனே அவளிற்குப் பதில் கூறினான். நீ கவலையை விடு, உன்னை நான் திருமணம் செய்து கொள்கின்றேன். உன்னுடைய குழந்தைக்கு நான் தந்தையாக இருக்கின்றேன், என்னை நம்பு என்று கூறினான்.

அழுகையை நிப்பாட்டிய அப் பெண் அவனை கண் வேட்டாமல்ப் பார்த்தல். அது முடியாது என்று அந்தப் பெண் கூறினாள். ஏன் என அருண் கேட்க, நான் யாருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள தயார் இல்லை என்று அந்தப் பெண் கூறினாள்.

பால் நழுவி பாலில் விழுந்தது, வாய்விட்டு அருண் கூறவில்லை.ஆண்டவன் வழிகாட்டி விட்டான்.தந்தை சொன்ன வழியே கடவுளை வழிபட்ட பலன் இப்படி ஒரு வழி கிடைத்துள்ளது என எண்ணினான். அந்தப் பெண்ணிடம் தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டான். ஆனால் தன் குறையைப் பற்றி ஏதும் கூறவில்லை. தனது பெற்றோரிடம் சென்று தன் காதலி என்று அறிமுகம் செய்து வைத்தான். பிறந்த குழந்தை தன்னுடையதாகவே பெற்றோறிற்குத் தெரிய படுத்தினான். பெற்றோறிற்கும் அவன் உண்மையைக் கூறவில்லை. அவன் தனது மனதைத் தேற்றிகொண்டான். உண்மையை மறைப்பது கூடப் பொய்யாகும் ஆனால் “பொய்மையும் வாய்மையிடத்து” நன்மை பயக்குமெனின். என்னும் குரளின் படி தனது செய்கை சரியென முடிவாகத் தீர்மானித்தான்.

கதைக்கரு & எழுத்து,
மங்கை அரசி

தாய்த் தமிழின் குழவி சமஸ்கிருதம்

புதிய கோணத்தில் புதிரின் விடை.

தமிழில் ஆங்கிலம் கலந்தால் உடனடியாகத் தெரிகின்றது. ஆனால் தமிழனுக்கே தெரியாமல் தமிழில் பல மொழிகள் கலந்துள்ளன. இதையெல்லாம் யார் தட்டிக் கேட்ப்பார்கள்? இன்று நாம் தமிழ் என்ற கோணத்தில் பாவிக்கும் பாதிக்கு மேற்பட்ட வார்த்தைகள் தமிழே அல்ல, என்று சொன்னால் நம்பமுடிகின்றதா? நம்பா விட்டாலும் நறுக்கென்று குத்தும் உண்மை இது தான்.

பாளி மொழி, சமஸ்கிருதம், லத்தின், அரபு என்று மட்டும் இல்லாது போர்த்துக்கேய, ஒல்லாந்த, டச்சுமொழிகள் கூட கலந்து கிடைக்கும் எம் மொழியின் தற்கால நிலை, கவலைக்குரிய கலிகால நிலையாகும். ஒரு மொழியானது காலத்தின் அடிப்படையில் பல்வேறு இணைப்புக்களிலும் பணிப்புக்களிலும் கலந்து புதிய மொழியாகத் திரிவடையும் ஆபத்து நிலையில், தமிழ் மொழி மட்டுமே 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கூட இன்றும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடிய அதிசய மொழியாக காணப்படுகின்றது. அதற்கு கண்கூடு உதாரணமே எங்கள் திருக்குறள்.

திருக்குறளின் வார்த்தைகளையும் வசன நடையையும் வாசிக்கும் தூய தமிழனுக்கு கண்டிப்பாக அதன் கருத்துக்கள் மனக்கண்ணில் விழுந்துவிடும்.  “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” இது மூவாயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட வார்த்தைகள் ஆனால் இவ்வார்த்தைகள் இன்றும் பாவனையில் உண்டு. இப்படிப்பட்ட சிறப்பு பல மொழிகளில் இல்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் தமிழனின் புத்திசாலித்தனம் என்று சொன்னால் நம்ப முடியுமா? இதோ ஆதாரங்களுடன் அடுத்த எடுத்துக்காட்டலைக் கவனியுங்கள். 

தமிழ் மொழி பலமுறை அழிவு வரை சென்று மீண்டும் உயிர்த்து வந்த மொழியாகக் காணப்படுகின்றது. அதற்கு நாயன்மார்களின் கதை முதல் நாடோடிக் கதைகள் வரை பல ஆதாரங்கள் உண்டு. உலகில் பல இனத்தவர்களால் தமிழ் இனத்தவர்கள் மீது பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இறுதியில் இயற்கையே அழித்த ஒரு இனமாக, இன்றும் தெற்கே இந்துசமுத்திரத்துள் உறங்கி கிடைக்கும் தமிழனின் சரித்திரமும் ஒரு சாட்சி.

இப்படி தலைசிறந்த மொழியாக இருந்த தமிழ் மொழி ஒரு காலத்திலும் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஏன் என்றால் அனைத்து மொழி மக்களும் தமிழ் மொழி கற்க ஆசைப்பட்டனர். தமிழ் கற்று தமிழனானால், தலைசிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்று அனைவரும் தேடித் தேடி தமிழ் கற்றனர் எப்படி இன்று அனைவரும் ஆங்கிலம் கற்கின்றோமோ அதே போல அன்று அனைவரும் தமிழ் கற்றனர். இதற்கு உதாரணம் வேற்று மொழிக்காரர்கள் தமிழ் கற்று, தமிழ் அரச சபையில் மந்திரியாகவும் அமைச்சராகவும் வீற்றிருந்தனர். என்பதற்கு அன்று முதல் இன்று திரு.கருணாநிதி வரை பல சாட்சிகள் உள்ளனர். அப்படிபட்ட எவரையும் எதிர்க்காத தனிக்காட்டு ராஜாவாக இருந்த தமிழர்கள் இன்று பிறமொழிகளை எதிர்க்கும் நிலை ஏற்பட்டு விட்டதா! என்ற ஆச்சரியத்தில் ஆரம்பித்த என் தேடல் ஒரு அற்புதத்தைக் கண்டு பிடித்தது. இதோ அந்த அற்புதம் உங்களுக்காக.

ஆரியரின் படையெடுப்பின் பின் அவர்கள் முதலாவதாகக் கைவைத்த இடம் கோவில்கள். கோவில்களில் உட்செல்ல மறுப்பு விடுத்து சாதி பிரிவு ஆரம்பமானது. அரச சபையைக் கூட ஆக்கிரமிக்காத ஆரியர்கள் ஏன் கோவில்களை ஆட்கொண்டனர் என்ற பெரும் கேள்வி எனக்குள் எழுந்த போது தான் ஒரு பொறி தட்டியது. ஆரிய மொழிகளில் அதிக சமஸ்கிருதக் கலப்புக்கள் உண்டு. அதே நேரம் அவர்களின் பொருளாதாரமும் அறிவாற்றலும் அதிகரித்தும் உள்ளது. ஆனால் சமஸ்கிருதமோ தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழிச் சொல்லப்பட்ட கலைகளின் சிறப்பையும் பறைசாற்றிக்கொண்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று உற்றுப் பார்க்கும் பொது ஒரு பெரும் உண்மை என்னை விழிக்கச் செய்தது.

தமிழனின் பாதுகாப்பு உணர்வு எப்படிப்பட்டது என்ற ஆச்சரியத்தை இப்போது உங்களுக்கு விளக்கவுள்ளேன். பிறமொழிக்காரர்கள் தமிழைக் கற்று, தமக்குள் புகுந்து கொள்வதை உணர்ந்த தமிழர்கள் தமெக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழியைப் பாதுகாக்க அதன் ஓசை வடிவங்களை செதுக்கினார்கள். அம்மொழியை பேசுவோர் அனைவரும் ஒரே சந்தத்தில் பேசும்வண்ணம் மந்திரக் கட்டுக்களாக செதுக்கினார்கள். அந்த மொழிக்குள் தமிழனின் மருத்துவம் விஞ்ஞானம் பொருளாதாரம் என்று அனைத்து ரகசியங்களையும் ஓசைக்கு கட்டாக மாற்றி மறைத்து வைத்தார்கள். 

அதனால்த் தான் கோவில்களில் பல இடங்களில் ரகசிய அறைகளும் அந்த அறைகளுள் பொன் பொருள் என்பதோடு சேர்த்து ஒரு சில ஓலைச் சுவடிகளும் காணப்பட்டன. ஒற்றர்கள் மூலம் இவற்றை அறிந்த ஆரியர்கள், தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை கோவில்களுக்குள் புகுந்து கற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவற்றை நம்பக்  கஷ்டமாக உள்ளது என்றால் சமஸ்கிரதம் எப்படி எழுதப் படுகின்றது என்று மட்டும் எடுத்துக் பாருங்கள். சமஸ்கிரத எழுத்துக்களையும் தமிழ் அகர வரிசையையும் சேர்த்து வைத்துப் பாருங்கள், அதன் பின் நீங்களே முடிவெடுக்கலாம், சமஸ்கிரதம் எப்படி உருவாகி உள்ளது என்று. அது மட்டுமின்றி இதோ வந்து சென்றதே பொங்கல் சிறப்புத் தினம் அதற்கு ஒரு நாள் முதல் இந்தியர்கள் அனைவரும் போஹி என்று ஒன்று கொண்டாடுகின்றார்கள், இந்தப் பண்டிகை இலங்கையில் கொண்டாடுவது இல்லை, ஏன்? அது எதற்காகத் தெரியுமா? எங்கள் வீடுகளிலும் ஏதேனும் சமஸ்கிருத புத்தங்களையோ, ஓலைச் சுவடிளையோ வைத்திருந்தால், அதை அழித்துவிட வேண்டும் என்பதற்க்காக ஆரியர்கள் மேற்கொண்ட சூட்சி தான் இந்த போஹி. 

இனிமேல் நாம் செய்யவேண்டிய ஒரே ஒரு வேலை எம் முன்னோர்கள் எமக்கென்று சேர்த்து வைத்த அறிவுப் பொக்கிஷத்தை தெடிக் கற்றுக் கொள்வோம். எம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் மூட நம்பிக்கை செய்ததெல்லாம் முட்டாள்த் தானம் என்று யாரோ ஒருவர் சொல்வதை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளாமல், சற்று நீங்களும் யோசித்துப் பாருங்கள் வான்மீகி ராமாயணத்திற்கும் கம்ப ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம் என்று? சிந்தியுங்கள். சமஸ்கிருதம் எழுதிய தமிழனிற்கும் தமிழ் எழுதிய ஆரியருக்கும் என்ன வித்தியாசம் என்பதை அதில் புரிந்துகொள்வீர்கள்.

வா புதிதாய்ச் சிந்திப்போம்,
ஓர் புதிரைச் சந்திப்போம்.
ஏன் பிறரை நிந்திப்போம்?
நாம் உயர விண்விற்போம்.

சிந்தனை சிவவினோபன்.

மோனையில் வீற்றுள்ள மானே.

கவிதையை கவனமாக வாசியுங்கள்.
இதில் ஒரு மந்திரம் ஒளிந்துள்ளது.
தலைப்பில் விடையுண்டு.

மோனையில் வீற்றுள்ள மானே.

பேரிடர் கொண்ட வாழ்வினில்,
தையலே என்தன் தலை நீயே.

பெரும் பணி புரிந்திடும்,
துரும்பெனத் துவண்டிடும் – உயிரே,
ம்முறை உன் துயர், 
பையவே மறையுமோ?

மணவறை அழகு நீ,
ங்ஙன உயர்வினி, – குழவியைக்
கையேந்தும் இறைவி நீ.

மகப்பேறு கண்டபின் 
ட என்ற எழுத்தைப் போல், 
ந்தக் குழவியைச் சுமந்திடும், 
தைரியத் தாய்மை நீ.

அன்பினில் ஊறிய நடமாடும், 
ரிக் யசுர் சாம அதர்வணம் நீ
வைத்திடும் வாதமே வீட்டினுள் சட்டமே. 

தென்னை போல் தன்னையே தாரைவார்க்கும், 
ரிஷி உன்னை நான் எண்ணியே தலைவணங்கில், 
வையகம் வாழுமோ? உய்வுறுமோ?

பேதமின்றி பெற்றேடுக்கும் தாய்மையே, 
ரிஷப வாகனம் போல் வீற்றிருக்கும அன்னையே, – உன்
இளமையதை எனக்களித்த இறைமையே, 
ம்சைகள் பொறுத்திட்ட என்னினிய பெண்மையே,

வாழ்க வாழ்க 
உன்னால் ஓடிடும் உலகக் கடிகாரம், 
உன்பேர் பாடிடும் ஒவ்வொரு நாளும்.
வாழ்க வாழ்க.

சிந்தனை சிவவினோபன்

பாதம் தேடும் சோகப்பந்து.

பாதம் தேடும் சோகப்பந்து.

பாதங்கள் இல்லாமல் நான் பறப்பேன், குதிப்பேன், உருண்டு உருண்டு உலகையே அளப்பேன். அத்தனை வல்லமையுள்ள நான் தான் உங்கள் பழைய நண்பன் பந்து. என்னை ஒரு முறை பாருங்கள், என் கதையை சிறு கணம் கேளுங்கள். பாவம் நான் இப்போது படுத்துள்ள இடம் பாழடைந்த பயங்கர பேய் வீடு போலுண்டு. தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.

புதிதாய் பிறந்த குழந்தை நான். என் வயது இரண்டே மாதம் தான். இருப்பினும் இப்போது பராமரிப்பின்றி, பழைய பொருட்களுடன் எறியப்பட்டுள்ளேன். இதற்கெல்லாம் ஒரே ஒருவன் தான் காரணம், அவன் தான் என் எதிரி. அந்த கொடிய அரக்கன் என் வாழ்வில் எப்படி விளையாடினான் தெரியுமா? விளையாடப் பிறந்தவன் நான் என் வாழ்க்கையிலேயே விளையாடிவிட்டனர். கண்டியில் வசிக்கும் என் தந்தை இறப்பர் மரத்திற்கும், சீனாவில் உள்ள என் தாய் கூமா நிறுவனத்திற்கும் மகனாகப் பிறந்தேன் நான். என் பிறப்பின் பாதையே அத்தனை கொடுமையாய் இருந்தது. என் தந்தையில் இருந்து நான் உருவாகுவதற்காக கண்டிப் பிரதேசத்தில் வசிக்கும் முருகையாவும் அவரின் குடும்பமும் இரவு பகலாய்ப் பாடுபட்டனர். என் தந்தை இறப்பர் மரத்தை அழகாகப் பாதுகாத்து, மழை நீர் உட்செல்லாமல் அடைத்து, மறைப்புப் போட்டு என்னைப் பாதுகாப்பாக பிரசவம் பார்த்து இறப்பர்ப் பாலாக வெளியெடுத்தனர். அதன் பின் என்னை வடிகட்டி குளிப்பாட்டி நொதியம் எல்லாம் சேர்த்து கொதிக்க வைத்து என்னை உறுதியான இறப்பர்ப் பட்டையாக மாற்ற, நானும் அனைத்திற்கும் இணங்கி நல்ல பிள்ளையாக சொன்னபடி நடக்க சிறந்த விலையுயர்ந்த தரமான இறப்பர் படிவமாக மாறினேன். இருப்பினும் சீனாவில் இருந்து வந்த வர்த்தக வியாபாரிகள், முருகையாவின் குடும்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, அவரின் ஒரெ ஒரு பெண்குழந்தை மாலினியின் உயர்படிப்பிற்குத் தேவையான பணத்தை மட்டும் கொடுத்து, என்னை அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர். மகள் மாலினி படித்தால், அவளாவது நல்ல வாழ்க்கை வாழ்வாள் என்று எண்ணி, வந்த வரை இலாபம் என்று பெற்றுக் கொண்டு என்னைக் கொடுத்து அனுப்பினார் முருகையா. தந்தையில் இருந்து பிரசவித்த நான் இப்போது தாய் வயிற்றுக்குள் செல்கின்றேன். சீனா நிறுவனம் என்னைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று என் தாய் நிறுவனத்தின் இயந்திரம் என்ற வயிற்றிற்குள் செலுத்த, அங்கு நான் உருளையாக உருவம் பெற்று புதிய பிறவி எடுக்கின்றேன். அப்போது இயந்திரத்தின் கண்ணாடி வழியே எட்டி வெளியே பார்க்கின்றேன் அங்கு சீனா மக்கள் ஒரு பிள்ளை பெற மட்டுமே அனுமதி உண்டு. அதே நேரம் பத்து மணிநேரம் உழைத்தாலும் மூன்று தலையின் வாழ்வாதரத்தைக் காப்பாற்றக் கூட போதிய ஊதியம் கிடைக்காது என்பதே அவர்களின் சோகம். இவ்வாறு மனிதர்களின் சோகக் கண்ணீர் கலந்தே நான் உருவாகின்றேன். என்னடா வாழ்க்கை இது என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் அந்த இயந்திர வயிறு என்னைத் தூக்கி வெளியே எறிந்தது, நானும் பாய்ந்து சென்று ஒரு சுவரில் மோதி தெறித்து வந்து ஒரு கூடையில் வீழ்ந்தேன். நான் வீழ்கின்ற கூடையின் தூரத்தைப் பொறுத்தே என் தராதரம் நிர்ணயிக்கப்படுமாம். நான் தரம் கூடிய முதலாம் இடத்தில் வீழ்ந்ததால் 95$ என்ற விலை முத்திரை குத்தப்பட்டு அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றேன். அங்கு ஒரு தந்தை ஊரில் உள்ள தன் மகனைப் பார்ப்பதற்காக, ஆசையாய் என்னை வாங்கிக்கொண்டு 22 மணித்தியாலப் பயணத்தில் கண்டிக்குச் செல்கின்றார்.

வீட்டிற்கு முன் சென்றவுடன் என்னை எடுத்து தனக்குப் பின் ஒழித்த அத் தந்தை, மகனுக்காகக் காத்து நின்றார். அங்கு வந்த மகனிற்கு தன் தந்தையை அடையாளமே தெரியவில்லை. மகன் பிறந்து மூன்று வருடத்தில் இப்போது தான் முதன் முறையாக நேரில்ச் சந்திக்கின்றனர். இதுவரையும் அனைத்து அன்பையும் கணனித் திரை முன் காட்டிய மகனிற்கு, கண் முன் நிற்கும் தந்தையை கட்டிக்கொள்ளத் தெரியவில்லை. வெட்கத்தில் ஓடிவராத மகனை நோக்கி என்னை உதைத்தனுப்பினார் தந்தை. என்னைப் பார்த்த மகன் துரத்திப் பிடித்து விளையாட, தந்தைக்கும் மகனிற்குமிடையில் அழகான உறவுப் பாலமானேன் நான். ஆனால் அந்த அழகான தருணங்கள் அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை என்பது எனக்கு அப்போது தெரியாமல்ப் போனது. இவ்வாறே ஒரு வாரம் உருண்டோடியது. அன்றொரு நாள் என்னோடு விளையாடிக்கொண்டு இருந்த மகனிற்கு அன்புத் தந்தை இன்னுமோர் பரிசையும் வாங்கி வந்தார். நாளைமறுநாள் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ள தந்தை, தன் மகனின் முகத்தில் சோகம் வரக்கூடாது என்பதற்காகவும் அதே தருணம் தினமும் தன் மகனைப் பார்த்துக் கதைக்க மிடுக்குத் தொலைபேசி ஒன்றை வாங்கிப் பரிசளிக்க, என் வில்லனின் வரவு அங்கே ஆரம்பம் ஆகின்றது. அவன் எனக்கு மட்டும் வில்லன் அல்ல, மொத்தக் குடும்பத்திற்கும் எமனானான். வாங்கிக் கொடுத்த தந்தை மறுநாள் மகனை விட்டுப் பிரிந்து அமெரிக்கா செல்ல அவர் எதிர்பார்த்தாற் போல் மகனும் புது தொலைபேசி கிடைத்த புதினத்தில் அழவே மறந்து ஆனந்தமாய் அனுப்பிவைத்தான். அமெரிக்கா சென்ற தந்தை உடனடியாக முகம் பார்த்துக் கதைக்கும் அழைப்பை எடுத்தார். மகன் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் அழைப்பு வரவே, அதை எடுத்து தந்தையைப் பார்த்துப் பேசிக்கொண்டே வீதியில் நடை போட்டான் மகன். வேகமாக வந்த பாரவூர்தி விரைந்து நிறுத்தமுடியாத காரணத்தால், நெருங்கி வந்து இடித்தது. மகன் பறந்து சென்று தரையில் விழ, தலை தார்த் தெருவில்ப் பட்டதும் உயிர் பிரியும் மகனை தான் வாங்கிக் கொடுத்த தொலைபேசியில் பார்த்த தந்தை சித்த சுகவீனம் உற்றவராகின்றார். பயனில்லா தொழிலாளி இனி இங்கு வேண்டாம் என்று அவரை நாட்டிற்குத் திருப்ப, குடும்பமே உருக்குலைந்து போனது. இரண்டு மாதம் கழிந்த பின் மகனில்லாத் தாய், மனநிலை சரியில்லாக் கணவன் என்று ஏற்க முடியாத் துயர் இருப்பினும், குடும்பம் நடத்த வேண்டுமே என்று திருமணத்திற்கு முன் தன் தந்தை தந்த நல்ல கல்வி அறிவில் பள்ளிபடிப்பை முடித்து, காதல்த் திருமணத்தில் பெற்றோரை எதிர்த்து வெளியெ வந்து குடும்பத்தைத் தொடங்கிய மாலினி, அன்று தந்தை தந்த அந்த அறிவை வைத்து சிறுவர் பள்ளியில் ஆசிரியர் வேலை செய்து, பிள்ளை இல்லாக் குறையையும், குடும்பதிற்கு காசு இல்லாக் குறையையும் நிவர்த்தி செய்து வருகின்றாள். அவர்கள் இருக்கும் வாடகை வீட்டில் பழைய பொருட்கள் போடும் அறையில் என்னை எறிய மனமில்லாமல் போட்டு வைத்துள்ளாள் மாளினி.

என் கதை கேட்கும் நீங்களேனும் உங்கள் வாழ்க்கையில் என்னைப் போன்று இன்னுமோர் பாதம் தேடும் சோகப் பந்தை உருவாக்கி விடாதீர்கள், என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.இப்படிக்குசிந்தனை சிவவினோபன்.