vino

AI இன் அர்த்தம் Artificial Intelligence ஆ? அல்லது அம்மணம் இல(கு)வசம் (Ammanam Ila(ku)vasam)

AI என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய தொழில்நுட்பத்தின் விரிவாக்கமாக, நாம் தலைப்பில் பார்த்த அந்த விரிவாக்கத்தையும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது  Artificial intelligent எனப்படும் இதையும் சொல்லாம். இந்த AI இன்று பிறந்த விசித்திர மாருதி. இது மனிதாபிமான குழந்தையாக மாற இன்னும் பல கட்டங்கள் உண்டு. இப்போது கணினிக்குள் இருக்கும் போதே, இது செய்யும் சேட்டைகள் ஏராளம். ஆம் கற்பிக்கும் ஆசிரியை கூட கலங்கப்படுத்தி மாற்றுவதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த இந்த தொழில்நுட்பத்தை வேறு எவ்வாறு சொல்ல முடியும்? இது இன்னும் ஒரு சில வருடங்களில், தானியங்கி ஆசையும் பௌதீகவியல் பொருளாய் மாறினால், அதன் விளைவுகள் எண்ணில் அடங்காதவை. இதுபோல் புதிய தொழில்நுட்பங்களின் வருகை எப்போதும் தலைமுறையை தலைகீழாக திருப்பிப் போட்டு விடும். 

கால்நடைகளாக, கால்நடைகளோடு வாழ்ந்த மனிதனிற்கு, வாகனங்கள் வந்ததும் வேகத்தினை அதிகரிக்க, விபத்தினில் கொண்டு சென்று விட்டது இந்த தொழில்நுட்பம். இந்தக் கண்டுபிடிப்புகளின் மத்தியில் உடலை அசைத்து விபத்தில் நிறுத்தும் பௌதீகவியல் வாகனத்தை தொடர்ந்து, மனதை அசைத்து விபத்தில் நிறுத்தும் இலத்திரனியல் கண்டுபிடிப்புகள் ஆரம்பம் ஆகின. அதுவே கணினி. இன்று உடலையும் அசைக்க விடாமல், மனதையும் அசைக்க விடாமல், புதிய சிந்தனையை மட்டும் அசைக்க வைத்து மற்றைய அனைத்து பகுதிகளையும் ஊனமாக்கும் புதிய முயற்சியே இந்த AI என்று சொன்னால் அதிலும் ஒரு சில குறைபாடுகள் உண்டு.

என்னடா எடுத்தவுடனே குறைகளை மட்டும் சொல்லுகின்றேன் என்றால்! தொழில்நுட்பம் ஒருபோதும் குறைவானது அல்ல. கத்தி ஒவ்வொரு முறையும் தீட்ட தீட்ட கூராகிக் கொண்டே செல்லும். ஆனால் அந்தக் கத்தியை குழந்தையிடமும், மூளை குறைபாடு கொண்டவர்களிடமும் கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால் ஆயுதம் தாங்குபவருக்கு மட்டுமல்ல, தள்ளி நின்று பார்க்கும் உயிரிற்கும் ஆபத்து ஆகிவிடும். அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன் புதிய தொழில்நுட்பங்கள் வர வர விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. AI என்கின்ற இந்த தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அல்கோரிதம் ( Algorithm ) என்கின்ற ஒரு விடயத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதாவது உங்களுக்கு கணிதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது, உங்களுக்கு படம் வரைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது, உங்களுக்கு பாடல் எழுத தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது, உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் இப்படி ஒரு படம் வரைந்தால் வடிவாகா இருக்கும், இப்படி ஒரு கவிதை எழுதினால் அழகாக இருக்கும், இப்படி ஒரு கணிதத்தின் தீர்வை கண்டுபிடித்தால் அறிவு கூர்மையாக இருக்கும், என்கின்ற விடயத்தை கொடுத்தால் மட்டும் போதும் உங்கள் நண்பர் உங்களுக்காக நன்றாக படம் வரைந்து தந்தால், நன்றாக கவிதை எழுதி தந்தால், நன்றாக கணக்குப் புதிர்களின் தீர்வுகள் கண்டுபிடித்து தந்தால், அதை உங்களுடைய கண்டுபிடிப்பாக மற்றவர்களிடம் காட்டி நீங்கள் பெருமைப்பட முடியும் என்றால், அதுதான் இந்த AI. 


இந்த AI, அல்கோரிதம் என்கின்ற ஒரு கணித அமைப்பின் மூலமாக செயற்பட்டு வருகின்றது. அல்கோரிதம் என்றால், ஒரு செயற்பாடு செயல்படுவதற்கு எப்படிப்பட்ட நிகழ்தகவுகள் இருக்கின்றது, உதாரணத்துக்கு சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு சிப்பாய்களையும், ஒவ்வொரு காய்களையும், அரக்கும் பொழுது, எப்படிப்பட்ட விளைவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து வைப்பதைப் போன்று, நீங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளிற்கு ஏற்றால் போல், ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்டிருக்கின்ற நிகழ்தகவுகளை வைத்துக்கொண்டு, நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு, அனுபவங்களை வைத்துக்கொண்டு, பதிவுகளை வைத்துக்கொண்டு, புதிய விடயங்களை உங்களுடைய சிந்தனையில் தோன்றுகின்ற அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றால் போல் மாற்றி, புதிதாக உருவாக்கித் தருவது தான் இந்த AI என்கின்ற தொழில்நுட்பமாகும்.


இது பலருக்கு உதவியான ஒரு விடயம். உதாரணத்திற்கு தொழிலில் முன்னேற வேண்டும் என்கின்ற ஒருவருக்கு, தன்னுடைய சிந்தனையை விரிவாக்கிக் கொடுப்பதற்கு உதவி செய்யும். கை ஊனமான ஒருவருக்கு, அவரின் சிந்தையில் இருக்கின்ற ஓவியத்தை வரைந்து கொடுப்பதற்கு உதவி செய்யும். புதிய சிந்தனை மற்றும் வார்த்தை ஜாலங்கள் தெரிந்த ஒருவருக்கு அதை கவிதைநஜமாக அல்லது கதையாக மாற்றி கொடுக்க உதவி செய்யும். ஆம் இன்னும் ஒரு படி மேலே சென்று ,வடிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால். உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் இருக்கின்ற காய்கறிகளை வெட்டுகின்ற சிறிய கத்தியை போன்று, வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கின்ற விறகுகளை வெட்டுகின்ற பெரிய கோடாலி போன்றும், இந்த AIயும் பல பரிமாணத்தில் பல கூரான ஆயுதங்களாக காணப்படுகின்றது. 


ஆனால் ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த அறைக்குள், குழந்தை பிள்ளையோ, மனநிலை குறைபாடான ஒருவர் சென்றால், அது அவரின் உயிரை மட்டுமல்ல சமுதாயத்தின் உயிரையும் சேர்த்து பாதிக்கும். இந்த AI என்கின்ற தொழில்நுட்பம் சிறந்த, மனிதனுடைய சிந்தனையை வெவ்வேறான பரிமாணத்தில் உயர்த்தக்கூடிய ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பம். ஆனால் இந்த தொழில்நுட்பம் மணித்தியாளத்திற்கு ஒளியின் வேகத்தில் பயணிக்க கூடிய ஒரு வாகனத்தைப் போன்றது. இந்த வாகனத்தை பயணிப்பதற்கு கண்டிப்பாக சரியான ஓட்டுனர் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும், என்கின்ற சட்டதிட்டம் வந்ததன் பின்பாக, அவர்களின் கையில் மட்டும் இந்தத் தொழில்நுட்பம் தவலுமே ஆனால், அடுத்த தலைமுறை நேராக வேகமாக நடக்கும் அல்லா விட்டால், மிக விரைவில் அகிலம் முழுதும் அம்மணம் இலவசம்.


சிந்தனை சிவவினோபன்

பிரிவிற்கு வந்த பிரிவு.

இருட்டு உலகத்தில் இருந்து, ஒளியுலகை எட்டிப் பார்த்த ஈஸ்வரி, மிரள மிரள விளித்தாள். எங்கு போவது என்ன செய்வது என்றே ஈஸ்வரிக்குத் தெரியவில்லை. ஆனால் அவளை அழைத்துச் செல்ல மகளிர் நலன்புரிச் சங்கத்தினர் வந்திருந்தனர். அவர்களுடன் சென்ற ஈஸ்வரிக்கு எப்படி அவளை அடையாளம் கண்டு கொண்டனர், ஏன் அழைத்து செல்கின்றனர், என்னும் வினாக்கள் வந்து முட்டி நின்றன. மகளிர் இல்லத்திற்குள் சென்ற பின்பு, தலைவி அதற்கான விடையை ஈஸ்வரி கேட்காமலே கூறியிருந்தார். சிறையில் ஈஸ்வரியின் நன்னடத்தை காரணமாகவும், போக்கிடம் இல்லாதவளான அவளது நிலைமையையும், சிறை நிர்வாகம் எடுத்துக் கூறியதனால் தான், மகளிர் அமைப்பு அவளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.


மகளிர் விடுதியில் அவளுக்கான இருப்பிடம் காண்பிக்கப்பட்டது. அங்கிருந்த கண்ணாடியில் தன்னை நோக்கிய ஈஸ்வரி திகைத்து விட்டாள். வயதான ஒரு மூதாட்டியின் உருவத்தை கண்ணாடி காட்டியது. காலத்தை பின்னோக்கிப் பார்த்தாள். ஒரு அழகான இளம் பெண்ணான, ஆடல் பாடலில் சிறந்து விளங்கிய ஈஸ்வரி, தாயாருடன் சேர்ந்து வீதியில் பாட்டு பாடி பிழைப்பு நடத்தி வந்தாள். நன்றாகவே போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட தாயாரின் மரணம், அவளை நிலைகுலைய வைத்து விட்டது. “அம்மா அம்மா” என அழுது புலம்பினாள்.”நீ இல்லாமல் எப்படி வாழ்வேன் அம்மா என கதறி துடித்தாள்.” தனியாக நான் வாழ்வது என்றால் வரும் தொல்லைகளை எப்படி சமாளிப்பேன்? என பயந்தாள். அவள் பயந்தது போலவே காமக் கழுகுகளும் அவளை வட்டமிடத் தொடங்கின.
அந்த நேரத்தில் அவளுக்குத் துணையாக வந்தவன் தான் நடராசன். அவன் வாழ்க்கைத் துணையும் ஆகிவிட்டான். நடராசனும் ஈஸ்வரியும் ஒரு கோவிலில் நடத்தப்பட்ட ஒரு இலவச திருமண நிகழ்வில், திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டனர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திய இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். அவர்களுடைய ஐந்து வருட இல்லற வாழ்வில், இரு முறை கர்ப்பம் தரித்தும், அவளால் முழுமையான ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. ஒருமுறை குழந்தை கருவிலேயே இறந்து பிறந்தது. இன்னொரு முறை கரு கலைந்து விட்டது. இந்த சோகமான நிகழ்வுகளுக்கு இடையிலும், நடராசனிடமிருந்து ஈஸ்வரிக்கு அன்பும் பாசமும் முழுமையான காதலும் நிறைவாகவே கிடைத்தது.


சிறு சிறு சலசலப்புக்கள் இருந்தாலும், வாழ்க்கை ஒரு சுகமான தென்றல் ஆகவே சென்றது. ஆனால் எங்கிருந்தோ வந்த புயல் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டது. ஒரு காமக்கொடூரனின் கண்களில் ஈஸ்வரியின் இளமை அழகு தென்பட்டுவிட்டது. தப்பான எண்ணத்தோடு தனியே இருந்த அவளை அணுகிய அவனிடம், இருந்து தன்னை காப்பாற்ற அவள் போராட வேண்டி இருந்தது. போராட்டத்தின் முடிவில் அவள் தோற்றுப் போகும் நிலையே ஏற்பட்டது. அந்த நேரம் அங்கு வந்த நடராசன் கையில் கிடைத்த இரும்பு கம்பியால், அந்த கயவனின் தலையில் அடிக்க, அவன் சுருண்டு விழுந்தான். ஈஸ்வரி தப்பி விட்டாள் ஆனால் வந்தவன் இறந்து விட்டான்.


பின்பு நடந்ததெல்லாம் அவர்கள் கனவில் கூட எண்ணிப் பார்க்காதவை. போலீஸ் விசாரணை, மரண விசாரணை என அனைத்து விசாரணைகளின் பின்பு, பணம் பறிக்கும் நோக்கத்தில் அந்த மனிதனை நடராசன் கொலை செய்துவிட்டான், என்று வழக்கு தாக்கல் செய்துவிட்டனர். அதிகம் படிக்காத, பயந்த சுபாவம் உள்ள நடராசனும், ஈஸ்வரியும் செய்வதறியாது திகைத்தனர். வழக்கில், விசாரணையின் போது, “இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றது உனது கணவன் தானே?” என ஈஸ்வரியிடம் கேட்டனர். “ஆம்” என ஈஸ்வரி சொன்னபோதும், ஏன் அப்படிச் செய்தான்? என விசாரணை அதிகாரிகள் கேட்கவில்லை. தன்னுடைய மானம் காக்கவே, தன் கணவன் அப்படி நடந்து கொண்டான். என அவள் சொல்ல நினைத்தாள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு வழங்கப்படவில்லை. நடராசனிடமும் “நீ கம்பியால் அடித்ததனால் தானே அந்த மனிதன் இறந்தான்?” எனக் கேட்கப்பட்டதே ஒழிய, ஏன் என்னும் கேள்வி எழவே இல்லை. ஏன் அப்படிச் செய்தான் எனக் கூற, அவனுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.


நடராசனுக்கு கொலைக்கான தண்டனையாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விபரீதத்தை உணர்ந்து கொண்ட ஈஸ்வரி, தன்னுடைய கணவனுக்கு கொலை செய்ய உதவி புரிந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாள். அவளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 25 வயதில் சிறைக்குச் சென்ற ஈஸ்வரி, 55 வயதில் வெளியுலகை பார்க்க வந்துவிட்டாள். ஆனால் அவள் கணவனின் நிலை என்ன என எண்ணி, வேதனைபட்டாள். தன்னுடைய நிலமையை, மகளிர் சங்கத் தலைவியிடம் கூறி, உதவி கூறி அழுதாள். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஒன்பது மாத முடிவில் நடராசனுக்கும் விடுதலை கிடைத்தது.

30 வயதில் சிறைக்குச் சென்றவன், 61 வயதில் வெளியில் வந்தான். நடராசனும், ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உருவம் தான் முதுமை அடைந்திருந்தாலும், உள்ளத்தில் அன்பு ஊற்றெடுத்த வண்ணம் இருந்தது. முதுமை தன் முகவரியை முகம் முழுக்க தெளித்து இருந்தது. தலையில் நரை கூடி இருந்தது. உடல் கிழப் பருவம் அடைந்திருந்தது. உள்ளம் மட்டும் இளமையுடன் விழித்திருந்தது. ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அந்த அன்பு, ஊற்று நீர் என பெருக்கெடுத்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் கனிவுடன் பார்த்த வண்ணம் இருந்தனர். ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மௌன மொழி என்பது இதுதானோ? இரண்டு ஜோடி கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது, அழுதால் கொஞ்சம் நிம்மதி!” என்று கவிஞர் கண்ணதாசனின் வரிகள் அங்கே மயிலிறகாய் விரிந்தது.

எழுத்து,
மங்கை அரசி.

This image has an empty alt attribute; its file name is Mangai-Arasi-1-1024x1024.jpg

மூளையின் வேலை பற்றி மூளையின் ஒரு மூலையில்

மனிதனின் உடல் உறுப்புக்களில், மிகவும் அதிசயமான உறுப்பு மூளை. மூலையைப் பற்றி நாம் ஆய்வு செய்யும் பொது, மூலையைத் தான் பயன்படுத்தவேண்டி உள்ளது, என்பது ருசிகரமான தகவல் ஆகும்.

The young and conceptual image of a large stone in the shape of the human brain

இதயம் அதி முக்கியமான உறுப்பு என்பது வெளிப்படையான உண்மை. அதேபோல் மூளையும் ஒரு முக்கியமான உறுப்பு. மனிதனின் நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல், நடவடிக்கை என எல்லாவற்றையும் முறையாக ஒழுங்கமைப்பது மூளை தான்.

ஆண் மூளையில் மூன்று மையங்கள் உள்ளன. ஆனால் அது வேறு விதமாக செயல்படுகின்றது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதைப் போல ஆணால் விவரித்து கொஞ்சம் இழுத்து இழுத்து வழவழவென கூற முடியாது.

ஆண் பெண் இருவருக்கும் உடலமைப்பில் மட்டுமல்ல மனம், மூளை அமைப்பு வித்தியாசமாகத்தான் உள்ளது. இப்படியாக மூளை வித்தியாசப்படுவதனால் தான் ஆணை பெண்ணாலும், பெண்ணை ஆணாலும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. மின்சாரம் கூட இந்த மூளையில் உற்பத்தியாகுகின்றது, என்னும் உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள்.

மனித மூளையின் நிறையில் 60% கொழுப்பால் ஆனது மூளைக்கு. வலி தெரியாது வலியை உணரும் வலிவாங்கிகள் அங்கு இல்லை மண்டை ஓட்டிற்குள் மூளை நகரும் போது அங்கு வலி உணரப்படுவதில்லை. மனிதன் விழித்திருக்கும் போதே மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஏனெனில் இங்கு வலி வாங்கிகள் இல்லாமல் இருப்பதினால் தான் இது சாத்தியமாக உள்ளது. மனிதனை மயக்க நிலையில் வைத்து மூளையில் அறுவை சிகிச்சை செய்வதில்லை. ஏனெனில் மனிதன் உணர்வுடன் இருக்கும் போது தான் மருத்துவர்களால் மூளையின் செயற்பாடுகளை அறிந்து கொண்டு திறம்பட செயற்பட முடியும். மூளையானது 25 வாட்ஸ் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. ஒரு மின் விளக்கை எரியவைக்கும் அளவிற்கு மின்சாரத்தை மூளையால் உற்பத்தி செய்ய முடியும். எந்த விஷயமானாலும் மூளை சரியாக பார்க்கக் கூடியது. கண்கள் தலைகீழாகப் பதியும் பிம்பத்தை மூளை சீராக்கி எமக்கு தருகின்றது. மூளையின் அறிவிற்கும், அளவிற்கு சம்பந்தமே இல்லை. மூளை பெரிதாக இருந்தால் அறிவு அதிகமாக இருக்கும் என நினைப்பது தவறானது. மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் கிலோ மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நரம்பு இழைகள் உந்து விசைகளை நமது உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவும்.

20 வயது நெருங்கும் பொழுது உடல் உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்ற போதும், மூளையின் வளர்ச்சி 40 வயது வரை வளர்ந்து கொண்டே இருக்கும். புதுப்புது விடயங்களை கற்றுக் கொள்ள முனையும் பொழுது மூளை அதை எந்நேரமும் ஏற்றுக் கொள்ளும்.

மூளையானது வெண்ணை போன்று கொழ கொழப்பான தன்மையுடன் இருக்கும் மனிதன் ஒரு நாளில் 70 ஆயிரத்திற்கு அதிகமான விஷயங்களை சிந்திக்கின்றான். ஒரே நேரத்தில் இரண்டு விடயங்களை மனிதனால் சிந்திக்க முடியும். தகவலானது மூளைக்குள் மணிக்கு 418 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் என கண்டறிந்துள்ளனர். மூளைக்கு ஓய்வில்லாமல் செயல்படும். மனிதன் உறங்கும் போது கூட, விழித்திருக்கும் போது செயல்படுவதை விட கூடுதலாக செயற்படும். மனித உடலின் நிறையில் இரண்டு சதவீத அளவிற்கு மூளை இருக்கும், ஆனால் மொத்த சக்தியின் 25% சக்தியை அது பயன்படுத்துகின்றது.

மூளையின் பாதி அளவு இருந்தாலும் கூட உயிர் வாழ முடியும். மூளையின் ஒரு பகுதி பழுதடைந்து விட்டாலும், செயல்படும் மறு பகுதி பழுதடைந்த பகுதி செய்தவற்றைக் கற்றுக்கொண்டு செயல்பட முடியும். மூளையின் செயல்பாடு வினாடிக்கு ஒரு லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றது. பொருட்களை பற்றி சிந்தித்துக்கொண்டு பொருட்களை நினைவுப்படுத்திக் கொண்டு கம்ப்யூட்டரில் டைப் செய்யவும் முடியும். மூளையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் இருந்த அளவில் முடிவி வரைக்கும் இருக்கும். சிலவேளை குறையலாம் ஆனால் அது கூடாது. கற்ப காலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் பின் தான் இயல்பு நிலைக்கு அடையும். ஒரு மனிதனின் வாழ்நாளில் மூளையானது ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகளை சேமிக்கும் அதாவது. குவாட் ட்ரில்லியன் இது ஒன்றுக்கு பின் 15 சைபர். மூளையின் உருவம் வளர்வதில்லை. குழந்தை பிறக்கும் போது இருந்த அளவு தான் முடிவு வரைக்கும். இதனால் தான் பிறந்த குழந்தையின் தலை உடலைவிட பெரிதாக இருக்கும்.

இந்த மூளையின் தகவலை உங்கள் மூளைக்கு வழங்கிய எந்தன் முயற்சி பிடித்திருந்தால், உங்கள் கருத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள். நன்றி.

Stress ஏன் எப்படி எதனால் வருகின்றது? – My Bigg Boss_Solomate – Day 03

வாழ்க்கையில எல்லோருக்கும் இருக்கின்ற பெரிய பிரச்சினை மனா அழுத்தம். அதிலும் இப்போது கொரோன காலத்தில பலரும் வீட்டிலேயே இருப்பதால், அதீத பிரச்சினையாகிவிட்டது. ஏன் இன்று மனா அழுத்தம் பற்றிக் கதைக்கின்றேன் என்றால்? நேற்றைய தினம் ஒரு மோசமான தினமாக அமைந்தது என்னுடைய எல்லா புள்ளிகையும் இழந்துவிட்டேன். மற்றும் என்னுடைய நண்பர் சந்தித்தேன் அவரின், அவரின் மனா அழுத்தத்தைக் கேட்டேன். அதனால்த் தான் இன்று மனா அழுத்ததை பற்றி முழுமையாகப் பார்ப்போம் வாருங்கள் முதில் இருந்து ஆரம்பிப்போம்.

இன்று காலை 6:30 க்கு எழுந்து ஜாகிங் போனேன் இன்று சற்று மெதுவாக உடல் முழுவது நோக ஆரம்பித்தது. இன்றைய நாள் முழுவது இரவு நித்திரைக்குப் போகும் வரை அந்த வலி இருந்தது. ஜாகிங் முடிய சாப்பிட்டு, எழுத்தாளர் சங்க புத்தக வெளியீட்டிற்கான Notice தயார் செய்து 10:30க்கு Dortmund வெளிக்கிட்டேன். 12:30 க்கு Meeting ஒரு மணித்தியாலம் முதல் சென்றால் பார்க்கிங் இடத்தில் வீடியோ செய்யலாம் என்று சென்று எல்லாம் வெற்றி ஆனால் அதன் பின் தான் அந்த தினத்தின் முக்கிய கடினம் ஆரம்பமானது.

வேலை செய்யும் இடத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன், அவர் மிகவும் சோகமாக இருந்தார், காரணம் அவருடைய Team அவரை ஏமாற்றி வேறு கொம்பனியில் சென்று சேர்ந்துவிட்டது. அதனால் மிகுந்த சோகத்தில் இருந்தார் அவரைக்கு கூடிக் கொண்டு கீழே கடைக்குச் சென்றேன் ஒரு சின்ன மாற்றமாக இருக்கும் என்று. ஆனால் தொருவில் நடந்து செல்லும் போது அவரின் பழைய Team உறுப்பினர்கள் இன்னும் 4 புதிய உறுப்பினர்களுடன் எதிரிலேயே கண்டும் காணாததை போல நடந்து செல்ல, அந்த நண்பர் உடைந்து போனார், சோகத்தில் மனா அழுத்தத்தில் இருந்தார். அதனால் நான் மனா அழுத்ததை பற்றி கொஞ்சம் தெடிக் கற்றுக் கொண்டேன். மனம் என்றால் என்ன? மனா அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது வாருங்கள் விரிவாக்கப் பார்ப்போம்.

மனம் என்பது மிக இலகுவான விடையம் பலருக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை நான் சொல்லுகின்றேன் நீங்கள் ஒருமுறை கவனமாகப் பாருங்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
எம்முடைய உடலில் உறுப்புக்கள் உள்ளன அதை இயக்குவது மூளை. மூளை ஒரு கடடலையை கொடுக்கும் அதன் படி செயல்படும் உறுப்பின் விளைவு என்ன என்பதை மூளை சேமித்து வைக்கும். உதாரணத்திற்கு சிறுவர்களாக இருக்கும் போது நாம எல்லோரும் ஓடி ஓடி நடப்போம் கீழே விழுவோம் எழுந்திக்கொள்வோம் ஆகவே காயம் வரும் வலி வரும் இதெல்லாம் மூளை சேமித்து வைக்கும் இடம் தான் மனது. ஒரு குறிப்பிடட காலத்தின் பின் மூளை சுயமாகச் சிந்திப்பதை குறைத்துக்கொண்டு வரும். மனது தான் வேலைசெய்யும். ஏன் என்றால் மூளை வேலை செய்தால் அது கடடளைகளைக் கொடுக்கும் அதன் பின் அதன் விளைவை சேமிக்கும், சேமித்து வரும் விடையை வைத்து எது நல்லம் எது கூடாது என்று பிரித்துப் பார்க்கும்.இது ஒரு பெரிய கடினமான வேலை ஆகவே அதை இலக்கு படுத்த ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து மனது தான் முடிவுகளை எடுக்கும் சிந்திக்காமல் கட்டளைகளை இடும். உடல் இயங்கும். இதற்க்கு ஆதாரம் நீங்கள் வாகனம் ஓடும் போது ஆரம்பத்தில், எது எங்கே இருக்கு எப்படி ஓடணுமெப்படிப் பார்க்கோணுமென்று ஜோசிச்சு ஜோசிச்சு செய்வீர்கள் ஆனால் ஒரு குறிப்பிடட காலத்தில் எல்லாம் தன்பாட்டில் நடக்கும் எதையும் சிந்திக்க மாடதீர்கள். அதுதான் மனது செய்யும் வேலை. இப்போது மனா அழுத்தம் எப்படி வரும் என்றால். மனதில் பல விடையங்களை சேர்த்துவைத்து ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்யச் சொன்னால். மனது வேகவேகமாக கடடளைகளை உடலிற்கு அனுப்பும். அப்போது மூளை சோம்பலாக உள்ள மூளை மீண்டு சிந்திக்க ஆரம்பிக்கும். அது ஒவ்வுறு செயலையும் செய்யாதே செய்யாதே என்று கட்டுப் படுத்து. காரணம் மூளைக்கு ஒரு செயலின் பயன் கிடைத்தால்த் தான் அடுத்தத்தைச் செய்யும். அந்த வேளை, உடல் அங்கங்கள், நடுக்கத்தை காணும், வாய் குளறும், உடல் முழுமையாக இயங்காமல்க் கூடப் போகலாம்.

இதைத் தான் மனா அழுத்தம் என்று சொல்வார்கள். இப்போது இந்த மனா அழுத்தத்தை எப்படி சரிசெய்யலாம் என்றால், பல வழிகள் உண்டு, இலகுவாங்கத்து விரைவான சில வழிமுறைகளைத் தருகின்றேன், பாருங்கள். முதலில் கதைக்கணும், யாரோடாவது கதைக்கலாம், அல்லது தனியாக உங்களோடு நீங்கள் வாய்விட்டு கதைக்கலாம். என் என்றால் கதைக்கும் பொது மூச்சு சீராகும், வாய் இயங்கும் தோல் இயங்கும் காத்து கேக்கும், கண் தசைகள் இயங்கும், இதனால் உடல் மீண்டும் சமநிலைக்கு திரும்புகின்றது. அல்லது சத்தமாக சிரிக்கலாம், சிரித்தால் இப்பொது அதே செயல் நடைபெரும். இது தான் உடனடியாக மனா அழுத்தத்திக் குறைக்கும் வழிமுறை.

அதன் பின் தமிழ் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, வானம் படத்தின் டப்பிங் செய்யச் சென்றான் என்னுடைய மனம் ஒருநிலையிலேயே இல்லை, என்னுடைய வேலை, நேர பற்றாக்குறை, நானும் தனியாகத் தான் வேலை செய்கின்றேன், எனக்கு நல்ல Team வேண்டும் ஆனால் நல்ல மனிதர்களை எப்படி Team இல் இணைப்பது என்று மனது அலை பாய்ந்துகொண்டே இருந்தது. அப்படியே ஒரு 19:35 போல டப்பிங்கை முடித்து வீடிற்கு 20:45 சென்றடைந்தேன். அதன் பின் தான் வீடியோ எடிட்டிங்கே செய்தேன் 23:40 வரை YouTube விடியோவுடன் இருதேன் ஒரு கட்டிடத்தில் வீடியோ செய்வதை விட்டுவிடுவோம் என்று தோணியது, அதனால் இன்று எனக்கு 00 புள்ளிகள். நான் இன்றைய நாளைப் பெரிய தோல்வி நாளாகப் பார்க்கின்றேன். நான் துவண்டு போகவில்லை, மீண்டும் ஆரம்பிப்பேன் என்ற நம்பிக்கையில் நித்திரைக்குச் சென்றேன்.

How My Re Entry? – My Bigg Boss_Solomate – நான் ஏன் மீண்டும் வந்தேன்?

என்னடா தனுஷ் போட்டோ போட்டிருக்கு என்று பார்த்தல்! என்னுடைய இன்றைய Youtuber என்ற இந்த நிலைக்கு இன்னுமொரு காரணம் நடிகர் தனுஷ். ஆகவே அவருக்கு நன்றி சொல்லவில்லை என்றால் எப்படி? அது எப்படி நடந்தது? Yes சொல்லுறன் வாங்கோ முதலில் இருந்து பார்ப்போம்.

இன்று என்னுடைய Task காலை 6:00 மணிக்கு எழுந்து கொள்ளவேண்டும் என்பது. ஏனெறால் நேற்று காலை 6:00 மணிக்கு எழுந்து காத்திருந்து 6:30 அலாரம் அடிக்க எழுந்ததை போலிருக்காமல் 6:00 மணிக்கு எழுந்தால் 6:00 மணிக்கே உடனடியாக கட்டிலை விட்டு இறங்கி, காலையை சிறப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்று நான் 5:00 மணிக்கே முழித்துவிட்டேன். இருந்தாலும் காத்திருந்து 6:00 மணிக்கு எழுந்து ஜாகிங் சென்று வீடு வந்து தாடியை ஒரு சும்மா வித்தியாசமாக வெட்டியதன் பின் சாப்பிட்டிட்டு வேலைக்கு இறங்கிட்டன். இப்ப கார்ல ஒரு மணிநேர ஓட்டம். இதில இரண்டு தனுஷாப் பற்றி சொல்லுறன். அதுக்கு முன் இன்றைய ஜாகிங் பெரிதாக களைப்பு ஒன்று இல்லை. கொஞ்சம் பழகிட்டு என்று என்று நினைக்கின்றேன், ஆறு நிமிடத்தில் நானும் ஓடிவந்துவிட்டேன்.

தனுஷ் தான் என்னுடைய இன்றைய இத்தனை ஆயிரம் லட்சம் Subscribers இருப்பதற்குக் காரணம். ஆரம்பத்தில் நான் Sabscribersக்கு தேடித் தேடி ஒவ்வொருவராக Subscribe வைக்கக் கஸ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருநாள் அம்மா வந்து கேட்டார் தனுஷும் மனைவியும் விவாகரத்தா என்று? நான் கடையில் நிற்பதால் அனைத்து செய்திகளையும் பார்த்துவிடுவேன். நான் சொன்னேன் இல்லை அம்மா அது ரஜனியின் இன்னொரு மகள் என்று சொல்லிவிட்டு, சரி இதை போல மற்றவர்களும் சந்தேகப்படப் போறார்கள் என்று ஒரு வீடியோ செய்து போடுவோம், ரஜனியின் மகள் விவாகரத்து அது தனுஷ் இல்லை ரஜினியி இன்னொரு மகள் என்று ஒரு வீடியோ செய்து போட்டேன். அந்த வீடியோ வீடியோ போடுடா அதே நாள் 10 000 வியூஸ் 300 Subscribers என்று அல்ல அப்போதுதான் எனக்கு இந்த YouTube Market புரிந்தது அதற்க்கு முன் எத்தனையோ நல்ல நல்ல விதேஒஸ் போட்டும் ஓடாத விடீயோஸ் எல்லாம் இப்போது சேர்ந்து நிறைய வியூஸ் வராத தொடங்கியது. இப்படியே சினிமா சுன்னத் திரை என்று நான் கலந்து விதேஒஸ் போடாத தொடங்கினேன். அவருக்கு நன்றி சொல்லி அந்த கதையை இங்கு சொல்லவே இந்த தனுஷின் போட்டொ போட்டேன். நன்றி தனுஷ்.

இப்போது வேலைக்கு வந்துவிட்டேன், இன்று 1500 யூரோ Project ஒன்றை நான் வெறும் ஒன்றரை மணித்தியாலத்தி செய்து முடித்தேன். ரூபாயில் பார்த்தல் கிட்டத தட்ட 3.5 லட்சம் இலாபம். ஒரு வீடு காட்டும் பிளான் கீறவேண்டும் அதை ஏற்கனவே கீறியுள்ளது அதற்குள் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் அதை கீறியெடுக்க 1500 யூரோ செலவாகுமாம். நான் அண்ணாவிடம் சொன்னேன் நானே வரைந்து தாரேன் என்று சொல்லி, ஒன்றரை மணித்தியாலத்தில் வரைந்து முடித்தேன். நானும் ஊர்ல Engineer என்று காடடனும் எல்லா? 🙂

https://www.youtube.com/watch?v=834JTWiPjRY&t=317s

அது முடிய வீடியோ நேற்றையான் வீடியோ செய்து, அதன் பின் வேலைக்கான Termin ஒன்றிக்குச் சென்று எல்லா வேலையும் முடிய வீட்டிற்குத் தாமதமாகத் தான் வந்தேன். காதலர் தினமல்லவா மனைவிக்கு ஒருசில பரிசில்கள் வாழ்த்துமடல் ரோசா பூ மரம் என்று எல்லாம் வாங்கிக் கொண்டு சென்று மனைவிக்குத் தெரியாமல் வீட்டுக்குள் ஒழித்துவைக்க, மனைவிக்கு கொஞ்சம் கவலை ஏனென்றால் நான் வழமையாக ஏதாவது விசேஷம் என்றால் Gifts Surprice என்று செய்வேன் இன்று ஒன்றும் செய்யவில்லையே என்று நினைத்தார் அதன் பின் கொஞ்ச நேரத்தில் அவருக்கேத்த தெரியாமல் Gifts எல்லாம் கொடுக்க மிகுந்த சந்தோசம் அப்படியே நாள் நல்லபடியாக முடிந்துவிடும் என்று பார்க்கும் போது வந்து சேர்ந்தது ஒரு பிரச்சினை. ஜெர்மனி தொலைக்காட்சி ஒன்று என்னை அவர்களின் Whatsapp குழுவில் இணைத்தது எந்த ஒரு கேட்டுக் கேள்வியும் இல்லாமல் இணைக்க சரி என்று நானும் செய்த வீடியோ Link அதை அங்கு இணைத்தேன். உடனடியாக நான் ஒன்றும் Share பண்ணைக் கூடாது என்று சொன்னார்கள் எனக்கு கடுப்பாகிவிட்டது நான் Share பண்ணைக் கூடாது ஆனால் நான் அங்கு இருக்கவேண்டுமா என்று கோபம் வந்தது இந்தக் கோபம் தான் என்னுடைய அதிக புள்ளியை இழக்க வைத்தது. மனைவிக்கும் என் மீது மனா வருத்தம். நான் என் மற்றவர்களோடு சண்டை போடுகின்றேன் என்று. அதனால் நான் அந்த பிரச்சினையை அப்படியே விட்டு விட்டு இரவு 11:10 க்கு நித்திரைக்குப் போய்விடடேன்.

Day One – My Bigg Boss – Victory – வெற்றி பயணத்தின் முதலடி

இது என்னுடைய நேற்றைய தினம். நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை எண்ணி ஒரு பயணத்தை ஆரம்பிக்கின்றேன். அதனுடைய நாட்குறிப்புகளை மற்றும் என் அனுபவத்தை இன்றுமுதல் ஒவ்வொருநாளும் இங்கு உங்களுடன், நான் பகிர போகின்றேன்.

ஆரம்பிக்கலாங்களா? வாங்க ஆரம்பிப்போம்!

என்னுடைய இந்த நாள் , என் எண்ணத்தின் இருவது சதவீதத்தைத்தான் சாதிக்கக் கூடிய நாளாக இருந்தது. ஆகவே இந்த நாள் தோல்வியான நாளா? என்று கேட்டால்! இல்லை இதுதான் பெரிய வெற்றி என்று சொல்லுவேன். ஏன் என்றால், நேற்று வரை பூச்சியம் என்ற இலக்கத்தில் இருந்த என்னுடைய குறிக்கோள், எடுத்த உடனேயே முதலாவது நாளே இருவது விழுக்காட்டை அடைந்தது என்றால் வெற்றி தானே? மிகப் பெரிய வெற்றி அல்லவா?

முதலாவதாக காலை 6.30 மணிக்கு எழுந்து கொள்ள நினைத்தேன், 6:00 மணிக்கே எழுந்து, அலாரம் அடிக்கும் வரை காத்திருந்து, ஜாகிங் சென்றேன். வெறும் 7 நிமிடங்கள் தான் என்னுடைய ஓட்டம் இருந்தது. ஆனால் ஒன்றரை வருடங்கள் ஓடாத என்னுடைய உடல் மிகவும் கழைத்துவிட்டது. எவ்வளவு தூரம் அந்தக் களைப்பு இருந்தது என்றால் மத்தியானம் கொத்து ரொட்டி சாப்பிடும் வரைக்கும் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தது என்றால் பாருங்கோவேன். ஆம் மத்தியானம் கொத்துரொட்டி டோர்ட்முண்டில் Sweet Chilli என்ற கடையில் ஓடர் செய்து எடுத்து சாப்பிட்டேன். அதை பற்றி சொல்ல முன், வாருங்கள் ஒழுங்காக காலையில் இருந்து செல்வோம்.

ஜாகிங் முடித்தபின் குளித்து கும்பிட்டு சாப்பிட்டு காலைக்கு கடனை முடித்து, இன்று என்னுடைய புதிய திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்குக்காக காலை 10:10 க்கு டோர்ட்முண்ட் வெளிக்கிடுகின்றேன். இதுவரை நான் திட்டமிட்ட படி அனைத்தும் திறனே நடை பெற்றது. இனித்த தான் கோளாறு ஆரம்பம். காரில் போன் பாவிக்கக் கூட்டது என்பது என்னுடைய புதிய கொள்கை. அதை பல முறை இன்று நான் மீறிவிட்டேன். அதிலேயே 60 விழுக்காட்டிற்கு மேல் என்னுடைய குறிக்கோளில் இருந்து தழறிவிட்டேன். அதைத் தொடர்ந்து டோர்ட்முண்ட் நகரில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சபேசன் அண்ணே அவரின் வீட்டிற்குச் சென்று சில காட்சிகளை எடுத்து அதைத் தொடர்ந்து டோர்ட்முண்ட் ரையினிச ஸ்ட்றாஸே சென்று அங்கும் U உள்ள இடத்தில் ஒருசில காட்சிகள் எடுத்து முடிக்க மதியம் 2:30 ஆகிவிட்டது. அங்கே புகைப்படக்காரர் கோபி அண்ணே மற்றும் அவரின் நண்பர்களை சந்தித்தேன். அவரின் நண்பரின் ஒருவர் தாயகத்தில் எங்கள் ஊர்காரகராம், என்னுடைய அப்பாவைத் தெரியும் என்று சொல்லியிருந்தார். கேட்க சந்தோசமாக இருந்தது. அதைத் தொடர்ந்து மதிய உணவை இயக்குனர் சபேசன் அண்ணெயின் உதவியாளர்கள் நவீன் மற்றும் அவரின் நண்பர்களோடு சேர்ந்து உண்டோம். நல்ல சுவை நீங்களும் டோர்ட்முண்ட் சென்றால் சாப்பிட்டு உங்கள் கருத்தையும் இங்கு பதிவிடுங்கள்.

நண்பகல் 3 மணிக்கு ZOOM மூலம் ஜெர்மனி எழுத்தாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஆம் ஜெர்மனியில் 21 வருடங்களாக எழுத்தாளர் சங்கம் இயங்கி வருகின்றது அதில் நான் இப்போது செயலாளராக உள்ளேன். புதிய உறுப்பினர்கள் மற்றும் அனுசரணையாளர்களுடன் ஒரு சிறிய கலந்துரையாடலாக இன்று நிகழ்சி நடைபெற நேரம் மாலை 6:30 ஆனது. இதிலும் என்னுடைய கொள்கையில் சிறிய தளர்வு. காரணம் நான் நேரத்தை துல்லியமாக திட்டமிடவேண்டும் என்று நினைக்கும் போது 5:00 மணி வரை தான் திட்டமிட்டிருந்தேன் ஆனால். ஒன்றரை மணி நேரம் தாமதம். அதன் பின் மிகுதிக் காட்சி ஷூட்டிங் சென்று அனைத்தையும் முடித்து, இரவு இயக்குனர் சபேசன் அண்ணே மற்றும் குடும்பத்தினருடன் பிட்ஸா சாப்பிட்டு 21:21 மணிக்கு வீட்டிற்கு வெளிக்கிட்டு 22:22 மணிக்கு வீடு வந்து சேர்த்தேன். அவ்வாறு வரும் பொது என்னுடைய உடுப்பு பையை இயக்குனர் சபேசன் அண்ணே வீட்டில் மறந்து விட்டிவந்துவிட்டேன். இவ்வாறு என்னுடைய புள்ளிகளை நான் இழந்தாலும் இருவது விழுக்காடு நான் வெற்றிகண்டுள்ளேன் என்று சொல்லி நாளை உங்களை சந்திக்கின்றேன் உங்கள் அன்பு நண்பன் சி.சிவவினோபன்

நன்றி வணக்கம்.

நடைத் தெரப்பியும் பூமிச்சிகிச்சையும்.

சிகிச்சை என்பதோ தெரப்பி என்பதோ வைத்தியசாலைகளில் மட்டும் கொடுக்கப்படும் பயிற்சி அல்ல. நாம் நம் அன்றாட வாழ்க்கையில் முயற்சித்தால்,அனைத்து சிகிச்சைகளையும் இந்த இயற்கை எமக்காக வைத்துள்ளது என்பதை உணர முடியும், அத்தோடு அனுபவிக்கவும் முடியும். உதாரணத்திற்கு 

வெறும் காலுடன் நிலத்தில் நாம் நடக்கும் போது பூமியின் இயற்கை ஆற்றலை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாயுள்ளது புற்கள் நிறைந்த நிலம் மணல் தரை சிறு கற்கள் உள்ள நிலம் ஆகியன மனிதன் நடப்பதற்கு சிறந்த இடம். பாதணி அணியாது வெறும் கால்கள் இப்படியான பூமியில் படும்போது தோல்கள் மூலம் எலெக்ட்ரான்கள் ஈர்க்கப்பட்டு ஒக்சிசன் ஏற்றப்பட்டு தோல்களில் ஏற்படும் இறந்த செல்கள் நீக்கப்படும்.
அத்தோடு உயர் இரத்த அழுத்தம் குறைவதோடு குறை இரத்த அழுத்தம் மேம்படும். சுவாசப் பிரச்சனை மற்றும் ஆர்த்தரைடீஸ் நோய்கள் குணமடையும். கடல் ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மணல் பரப்பு நடைத் தெரப்பிக்கு சிறந்த இடமாகும். கடல் பரப்பில் உப்பும் சேர்ந்திருக்கும் உப்பின் மக்னீசியம் அளவு அதிகமாய் இருக்கும். இவை காலில் தோல் பரப்பில் நோய் தாக்காது உறுதுணையாகும் மருந்தாகக் கூட அமையும். உப்பு ஒரு இயற்கையான நோய் நிவாரணி என்பது நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களிற்கே நன்றாகத் தெரியும். கடற்கரை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களிற்காகவும் வீட்டுக்கு வெளியில் செல்ல முடியாத சூழலிலிருப்பவர்களிற்காகவும் சிறப்பு நில விரிப்புகள் காலுறைகள் கையுறைகள் போன்ற தயாரிப்புகள் சந்தைக்கு வந்துவிட்டன. இந்த நில விரிப்புகளை மேசை மேலும் கதிரைக்கு கீழே நிலத்திலும் விரித்து விட்டோமானால், உள்ளங்கைகளையும் பாதங்களையும் அதில் வைத்து அழுத்தம் கொடுக்கலாம். கம்பியூட்டரில் வேலை செய்யும் போது, உடலில் இருந்து வெளிப்படும் காந்த அலைகளின் தாக்கத்தை இதன்மூலம் குறைத்துக்கொள்ளலாம்.


எமக்கு இந்த நடை தெரப்பி மூலம் மன அழுத்தம் குறைவதனால் மன அமைதி கிடைக்கின்றது நாம் நல்ல மனநிலையுடன் எமது அன்றாட வேலைகளை விருப்புடன் செய்து சந்தோசமக வாழ முடியும்.
மணல் மண்ணில் வீடு கட்டி விளையாடுவது, களிமண் பொம்மைகள் செய்வது, மண்ணில் குழி தோண்டி செடி நடுவது ஆகியன எல்லாம் சிறந்த பூமிச்சிகிச்சை ஆகும். எப்போதும் காலணிகள் உடனே இருப்பது குளிரூட்டப்பட்ட அறையில் நாள் முழுவதும் இருப்பது சிறிய தூரம் பயணிக்க கூட வாகனங்களை உபயோகிப்பது போன்ற இன்றைய காலகட்டத்தில், நாம் நாகரிகம் என்ற பெயரில் பூமிக்கும் எமக்கும் ஆன தொடர்பை தவிர்த்துக் கொள்வதனால் நாட்பட்ட நோய்களை வரவழைத்துக் கொள்கின்றோம் இந்த நடைதெரப்பி மற்றும் பூமிச்சிகிச்சை என்பன உடலில் உள்ள மற்றும் மனதில் உள்ள பல நோய்களுக்கு நல்ல மருந்தாக அமையும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!

5 நொடி ஒழுக்கம்.

நாம் அனைவருமே ஹாலிவுட் படங்களை பார்ப்பது உண்டு. அதில் சூப்பர் பவர் கொண்ட கதாநாயகர்கள் நடிக்கிறார்கள். ஒரு முறை யோசித்து பாருங்கள்! எங்களிற்கு ஒரு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்த ஐந்து நொடி ஒழுக்கம் என்பது உங்களுக்கு ஒரு மிக பெரிய சூப்பர் பவரை தருவதற்கான ஒரு வழிமுறையாக அமைந்திருக்கப் போகின்றது. இதை கண்டுபிடித்தவர் யார்? அதை எவ்வாறு கண்டுபிடித்தார்? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த சூப்பர் பவரை நாம் எங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை முதலில் பார்ப்போம் வாருங்கள்.

இந்த சூப்பர் பவரை உங்களுக்குத் தரப் போவதும் ஒரு மிகப் பெரிய ஞானி .அவர் யார் தெரியுமா? பக்கத்தில் இருக்கின்ற தொலைபேசியை எடுத்துக்கொள்ளுங்கள்! அதில் கேமராவை ஓப்பன் பண்ணுங்கள்! Front Cameraவை ஓப்பன் பண்ணுங்கள் இப்போது யார் தெரிகின்றார் அதில்? ஆம் நீங்கள் தான் உங்களுடைய ஞானி. உங்களிற்கு இந்த சூப்பர் பவரை கொடுக்கப் போவது நீங்கள் தான். ஆச்சரியமாக இருக்கின்றதா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்

அதைப் பார்ப்பதற்கு முன்பாக உங்களிடம் ஒரு கேள்வி. 5,4,3,2,1…

கேள்வி என்னவென்றால் உங்களுடைய வாகனத்தில், காராக இருக்கட்டும் பைக்காக இருக்கட்டும் சைக்கிள்ளாக இருக்கட்டும் அதற்குள் ஒரு பிரேக் இருக்கின்றது! இந்த பிரேக் என்ன தொழிற்பாட்டை செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிக்கூடத்தின் அதிபர் வகுப்பறையில் கேட்கின்றார். அவ்வாறு அவர் கேட்கும் பொழுது அங்கு இருக்கின்ற ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் அனைவருமே சொல்லுகின்றார்கள் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொல்லுகின்றான் வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்லுகின்றார். அதிபர் சொல்லுகின்றார் மிகச் சரியான விடை இதுதான். மிகச் சரியான விடை. வாகனத்தில் பிரேக் இருக்கின்றது என்ற தைரியத்தில்தான் வாகனத்தை மிக வேகமாக ஓட்ட முடிகிறது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வாகனத்தை நிறுத்த முடியும் என்கின்ற நம்பிக்கைதான், எமக்கு வாகனத்தை ஓட்டுவதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது. அதேபோன்றுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பயணத்தை வேகமாக செய்ய வேண்டும் என்றால், உங்களுடைய வாழ்க்கையை தேவையான இடத்தில் நிப்பாட்டுவதற்கான பிரேக் உங்களுடைய கையில் இருக்க வேண்டும். உங்களுடைய கையில் அந்த பிரேக் இருக்கின்றதா? அந்த பிரேக்காக தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் அமைந்து இருக்கப்போகின்றது.

மிக இலகுவான செயல்பாடுதான். எப்படி செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு காரியத்தை செய்யப் போகிறீர்கள் என்று நினைத்தீர்கள் என்றால்,

5,4,3,2,1… என்று மிக வேகமாக சொல்லிவிட்டு அந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த காரியத்தை மிகத் தெளிவாக செய்து முடிப்பீர்கள். ஏன் இந்த இலக்கத்தைச் சொல்ல வேண்டுமென்றால், சில நாட்களில் உங்களுக்கு மிக அலுப்பாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் கடினமாக ஒரு வேலையை செய்து விட்டு வந்து கதிரையில் அமரும் போது, தண்ணீர்த் தாகம் எடுக்கின்றது. எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதற்கு சோம்பலாக இருக்கின்றது. உங்களுடைய மனது சொல்லுகின்றது, “நீ கடினமாக உழைத்து இருக்கின்றாய். எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதை விட, படுத்து நித்திரை கொள்ளு!” என்று சொல்கின்றது.

உங்களுடைய உள்ளுணர்வு சொல்லுகின்றது, உடலுக்கு தாகம் ஏற்படுகின்றது தண்ணீர் குடி! என்று சொல்கின்றது. இப்போது மனம் சொல்வதைக் கேட்பதா? உள்ளுணர்வு சொல்வதை கேட்பதா? இரண்டுமே சரியானதுதான். ஆனால் எது மிகச் சரியானது என்பதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது என்பது, உடல் ஆரோக்கியத்திற்கானது, ஆகவே அதைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், மனதுக்கு ஒரு ஐந்து நொடி பிரேக் போட முடிந்தால், அந்த ஐந்து நொடியில் நீங்கள் உங்களுடைய தாகத்தை தீர்த்து விடுவீர்கள். அந்த ஐந்து நொடி பிரேக் போடுவதற்கு தான், இந்த ஐந்து நொடி ஒழுக்கம் பயன்படுகின்றது. எவ்வாறு செய்யலாம்?
5,4,3,2,1… என்று இலக்கத்தை எண்ணி

உடனடியாக ஒன்று என்று சொல்லி முடிக்கும் பொழுது நீங்கள் கதிரையில் இருந்து எழுந்தீர்கள் என்றால், அதே வேகத்தில் நீங்கள் சென்று தண்ணீரை குடித்துவிட்டு வந்து அமர முடியும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும் நான் சாதாரணமாக எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் என்னால் எழுந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு 5 லிருந்து 1 வரை எண்ணினால் மட்டும் என்னால் எழுந்து கொள்ள முடியுமா என்று ஒரு சந்தேகம் ஏற்படும்? இதற்குத்தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கத்தை உருவாக்கிய Mel Robbins சொல்லுகின்றார்.

தான் 41 வயது வரை மிகவும் கடினமான ஒரு வாழ்க்கையிலிருந்தேன், போதைக்கு அடிமையாகி, உடல் பருமன் அடைந்தது, என் வியாபாரத்தில் நட்டங்கள் ஏற்பட்டது. வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த அந்த வேளையில், தான் ஒரு றாக்கட் ஏவுகணை எழுகின்ற செயல்பாட்டை பார்த்தேன். அதில் 5,4,3,2,1… என்று சொன்னவுடன் அந்த றாக்கட் மிக வேகமாக பறந்தது.

என் மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது நானும் இந்த றாக்கட்டை போன்று மிக வேகமாக செயல் பட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் ஒரு சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி ஏற்பட்டது. நான் மறுநாள் காலை எழுந்து கொள்வதற்கு முன்பாக 5,4,3,2,1… என்று சொல்லி என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்துக்கொண்டு மிக வேகமாக எழுந்தேன், அதுவரையும் விடியற்காலையில் எழுந்து கொள்ள முடியாத எனக்கு அது ஒரு மிகப் பெரிய சக்தியைக் கொடுத்தது. நான் விடியற்காலையில் எழுந்து விட்டு, அதற்குப் பின்பாக ஒவ்வொரு செயல்பாடுகளை செய்யும் பொழுது ம் இவ்வாறு என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்து 5 லிருந்து 1 வரை எண்ணி நான் செயல்பட்டேன்.

என் செயல்கள் அனைத்தும் வெற்றி அளித்தது. ஒரு சில மாதங்களிலேயே என் போதைப்பழக்கம் விட்டுப் போனது. உடல் பருமன் குறைந்து. வியாபாரத்திலும் நல்ல வெற்றி கிடைத்தது. நான் இன்று நல்ல ஒரு வாழ்க்கை நிலையில் இருக்கின்றேன், என்று சொல்கின்றார். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்றால் 5 லிருந்து 1 வரை எண்ணும்பொழுது, அதற்குப் பின்பு எண்ணுவதற்கு எந்த இலக்கமும் கிடையாது.

0 உடன் இலக்கங்கள் மனதில் முடிந்துவிடுகின்றன. ஆகவே இதற்குப் பின்பு இயங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எழுந்து கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் உங்கள் மனதில் ஏற்படுகின்றது. அந்த இடத்தில் நீங்கள் உடனடியாக எழுந்து கொள்கின்றீர்கள். அதுமட்டுமில்லாமல், 5,4,3,2,1… என்று சொல்லும் பொழுதே, ஒரு சிறிய அழுத்தத்தைச் சேர்த்து நீங்கள் சொல்லிக் கொண்டு வரும் பொழுது, அந்த வேகம், உங்களை இலக்கம் ஒன்று சொல்லும் பொழுதே இயங்க வைக்கின்றது. அதனால் நீங்கள் மிக வேகமாக உடலில் ஒரு அசைவு ஏற்படுத்துகின்றீர்கள். உடனடியாக உங்களுக்கு ஒரு Motivation கிடைக்கின்றது. அந்த சக்திதான் உங்களை அடுத்த காரியத்தை செய்ய வைக்கின்றது. படிக்க விரும்பினால் படிக்கலாம், வேலை செய்ய விரும்பினால் வேலை செய்யலாம், எதை செய்ய விரும்புகின்றீர்களோ அதை செய்வதற்கான தைரியத்தையும் சக்தியையும் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் உங்களுக்கு கொடுக்கின்றது. இது உலகத்தில் இருக்கின்ற பலரால் கையாளப்பட்டு, தங்கள் வாழ்க்கையில் வெற்றி அளித்த ஒரு முறையாக பலரும் தங்கள் வெற்றிப் பயணத்தில் பதிவேற்றி வருகின்றார்கள். நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி பயணத்தில் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது?


சிந்தனை & எழுத்து,
சி.சிவவினோபன்

கையாலாகாத கணவனுக்காக சத்தியத்தை மீறிய தாதி

சன நடமாட்டமற்ற நிலையில் வீதி வெறிச்சோடி கிடந்தது. மதிவதனியை அணைத்தபடி மணிவண்ணன் கார் பின் சீட்டில் அமர்ந்திருந்தான். மணியண்ணன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். எதிரில் போலீஸ் வண்டி இவர்களை மறித்தது. “ஊரடங்கு வேளையில் எங்கே போகின்றீர்கள்? கீழே இறங்குங்கள்.” அதிகாரமாக கட்டளையிட்டார் போலீஸ்காரர். மணி அண்ணன் கீழே இறங்கி “ஐயா பிள்ளைத்தாச்சி பொண்ணு வலியில் துடிக்குது, அவசரமா ஆஸ்பத்திரிக்கு போறம்.” மணியண்ணன் சொல்லி முடிக்க முதலே “சரி சரி போங்க போங்க” என்று போக அனுமதித்தார் அந்த போலீஸ்காரர்

அவர்கள் வேகமாக ஆஸ்பத்திரியினுள் நுழைந்த போது ஆஸ்பத்திரியே ஆள் அரவமற்று இருந்தது. யார் என்னவென்று கேட்க ஆளில்லாததால், மணிவண்ணன் மதிவதனியை நேரே பிரசவ வார்டுக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டான். மனைவி படும் வேதனையைப் பார்த்து தாங்க முடியாது மணிவண்ணன், குதிரை வேகத்தில் தன் வேகத்தை கூட்டி மனைவியை அழைத்து வந்து விட்டான். வந்துதான் என்னபலன் அவனுடைய மனைவியை கவனிக்க அங்கு யாரும் இல்லையே! என்ன செய்வது என தெரியாமல் புழுவாகத் துடித்தான்.

அங்கும் இங்கும் ஓடி ஓடி, யாராவது மருத்துவர்களோ தாதிமார்களோ தென்படுகின்றனரா என பார்த்தான். மணி அண்ணன் இவ்விடத்திலே அனுபவசாலி. அடிக்கடி நோயாளிகளை வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்ப்பவராதலால், வைத்தியசாலையில் வேலை செய்பவர்களை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார். ஆதலால் மணி அண்ணன் சிவில் உடையில் ஒரு தாதியை தேடி கூட்டி வந்தார். “அண்ணா இவ இந்த ஆஸ்பத்திரியில் தான் தாதியா வேலை செய்கின்றார், வதனி அக்காவுக்கு உதவி செய்ய கூட்டி வந்து இருக்கின்றேன்” மணி அண்ணன் கூறி முடிக்க முதலிலேயே “ஐயையோ அதெல்லாம் முடியாது வேலைநிறுத்த போராட்டம் நடக்குது ,ஊழியர்கள் யாரும் வேலை செய்வதில்லை என சத்தியம் செய்யாத குறையாக சபதம் எடுத்துள்ளோம். அது தெரியும் தானே உங்களுக்கு?” என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டகல முயன்றாள். தயவுசெய்து மிஸ் எப்படியும் இந்த உதவி செய்யுங்கோ. என்று கையெடுத்து கும்பிட்டான் மணிவண்ணன்.

முடியாது எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வேலை செய்ய மாட்டோம். உறுதியாக தாதி கூறிய போது அவளின் காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டு கெஞ்சி கேட்டான், அந்த பாசமிகு கணவன். “ஆ ஐயோ அம்மா” மனைவியின் அலறல் சத்தம் அவனை வதைத்தது மனைவிக்கு எந்த உதவியும் செய்ய முடியாத கையாலாகாத கணவனாக அவன் நின்று கொண்டிருந்தான். நீந்தத் தெரியாத ஒருவன் நட்டாற்றில் தத்தளிக்கும் போது கையில் கிடைத்த மரக்கிளையை பற்றி பிடிப்பது போன்ற நிலையில் தாதியின் காலை பிடித்து கெஞ்சிக்கொண்டே இருந்தான்.

அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் அந்த தாதியின் மனத்தை இழக வைத்தாலும், அந்தக் கணவனின் கெஞ்சல் தாதியின் மனதை உருக வைத்து விட்டது. அவள் உடனடியாக செயல்படத் தொடங்கிவிட்டாள். மருத்துவத் தாதி செய்யும் வேலையை, சாதாரணமான தாதி அவள் செய்யும் போது மிகவும் சிரமப்பட்டாள். பிரசவமும் மிகவும் சிக்கலாக இருந்தது. குழந்தை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம், அழுவதை நிறுத்திவிட்டு குழந்தை வெளியே வருவதற்கு ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டாள் அந்தத் தாதி, அந்தப் பெண் அலறுவதை நிப்பாட்டியது மட்டுமல்லாமல், மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.

செய்வதறியாது திகைத்த தாதி, போதிய அனுபவம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டாள். ஆண்டவனை நினைத்து மன்றாடிய வண்ணம் தனது முழு முயற்சியையும் கொடுத்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படடாள். வெளியிலே மனைவியின் கதறல் சத்தம் கேட்க கேட்க தீயில் விழுந்த புழுவாக மணிவண்ணன் துடித்துக் கொண்டிருந்தான். திடீரென அலறல் சத்தம் நின்றது.

அவனது இதயம் ஒரு நிமிடம் துடிப்பை நிறுத்தியது போல் உணர்ந்தான். என் மனைவிக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்று கைகளை பிசைந்து கொண்டான். தன்னையே நம்பிய தன் மனைவிக்கு உதவ முடியாத தனது கையாலாகாத தனத்தை எண்ணி கடவுளே கடவுளே என அலறினான். மனிதன் இயலாமையின் போது கடவுளிடம் சரணடைவது சகஜம்தானே மணிவண்ணனும் கைகுவித்து கும்பிட்டு கடவுளிடம் கேட்டு மன்றாடிக்கொண்டிருக்கும் போது தான், பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்டது.

கடவுளே நன்றி! என்று திரும்பவும் கைகுவித்தான். பெரும் சிரமத்தின் பின் குழந்தையை வெளியில் எடுத்தாள். குழந்தையை குளிக்க வைத்து, உரிய இடத்தில் படுக்க வைத்த பின், தாய்க்கான மருந்தை ஊசி மூலம் ஏற்றி தாய்க்கான சிகிச்சையையும் சரிவரச் செய்து முடித்தாள். வெளியே வந்த தாதி உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றாள். நான் பார்க்கலாமா? என மணிவண்ணன் கேட்ட போது சிறிது நேரம் பொறுங்கோ என திரும்பவும் உள்ளே சென்றுவிட்டாள்.

தாதியின் மனதில் இனம் தெரியாத உணர்வுகள் போதிய அனுபவம் இல்லாமல், பிரசவம் பார்த்தது, குழந்தை வெளிவரும் சமயத்தில் தாய் மயங்கியது, பெருத்த சிரமத்துடன் குழந்தையை வெளியில் எடுத்தது தாய்க்கான மருந்தைக் கொடுத்து தாயையும் சேயையும் சுகமாக வைத்திருப்பது எல்லாம் தன்னுடைய வெற்றி தான், ஆனாலும் சுகாதார ஊழியர்களின் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை மீறியது அவர்களுக்கு கொடுத்த சத்திய வாக்கை மீறி நோயாளியை காப்பாற்றியது அத்தோடு அவளிற்குரிய வேலை இடம் இல்லாத இடத்தில் அனுமதி இன்றி நுழைந்து வேலை செய்தது, என அவள் செய்த பிழைகள் அதிகம் உள்ளது. இருந்தாலும் இரண்டு உயிர்களை காப்பாற்றி விட்டேன், இன்னும் ஐந்து நிமிடங்கள் பிந்தி இருந்தால், ஒரு உயிர் அல்ல இரண்டு உயிர்களும் போயிருக்கும். அந்தக் கணவனும் வேதனையில் துடித்து இருப்பான். மனசாட்சிப்படி நான் செய்ததுதான் சரி என நிம்மதியான தாதி, தாயையும் சேயையும் சாதாரண வார்ட்டுக்கு இடம் மாற்றி, கணவனிடம் ஒப்படைத்தபின், அவள் தன இருப்பிடம் நோக்கிச் சென்றால்.

காலத்தினால் செய்த “உதவி சிறிதெனினும்” “நன்றி சிறிதெனினும்” ஞாலத்தின் மாணப் பெரிது.


எழுத்து,
மங்கை அரசி.

தனஞ்சயன் மனதில்

தனஞ்சயன் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓடின. பாதை ஓரத்தில் அனாதரவாக கிடந்தவனின் எண்ணங்கள் பின் நோக்கி நகருகின்றன. கால்கள் முறிவடைந்த நிலையில், உடம்பில் ஏற்பட்ட காயங்களில் இருந்து வடிந்து உறைந்திருந்த இரத்தத்தின் மேல் எறும்புக் கூட்டம் மொய்த்தபடி இருந்தது. அப்படியே எறும்புகள் அவன் உடம்பிலும், காயத்திலுமிருந்து கடித்துக்கொண்டிருந்தன. வலி தாங்க முடியாமல் குரல் விட்டு அளவே முடியாத பலவீனத்துடன் அனுங்கிக்கொண்டிருந்தான். இந்த நேரத்தில்தான் பழைய நினைவுகள் பாய்ந்து வந்து அவன் மூளையை குடைந்தது.

தனஞ்சயன் அழகான வாலிபன் இன்னும் திருமணம் ஆகவில்லை ஆனால் அவனது நண்பன் மனோகரனிற்கு திருமணம் ஆகிவிட்டது. காதல் திருமணம்தான். இரு பக்கத்திற்கும் பெற்றோரின் அனுமதியற்ற நிலையில் தனிமையில் மோதிரம் மாற்றி நண்பர்களின் உதவியுடன் பதிவுத் திருமணமும் நடத்தி கொண்டான். தனஞ்சயனும் முழு உதவியுடன் இருந்தான். மனோகரனின் மனைவி கௌரி, அண்ணா அண்ணா என்று தனஞ்சயன்மேல் அன்பு மழை பொழிந்தாள் தனஞ்சயனும் அவளை உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக் கொண்டான்

ஒரு வருடம் கடந்த நிலையில் கௌரி ஒரு அழகான ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். சந்தோசமாக தான் காலங்கள் ஓடியது. ஆனால் அது நிலைக்கவில்லை ஒரு விபத்தில் மனோகரன் இறந்துவிட்டான். துடித்துப்போனாள் கௌரி தானும் இறந்து விடலாம் என கௌரி நினைத்தாலும், குழந்தை பிரபுவின் எதிர்காலத்தை நினைத்து வாளாவிருந்தால்
தனஞ்சயனின் உதவி அவளுக்கு மலைபோல உதவியாக இருந்தது. அயலவர்களின் சந்தேகப் பார்வையும் பேச்சுக்களையும் அவதானித்த கெளரி, தனஞ்சயனிடம் வீட்டிற்கு அடிக்கடி வர வேண்டாம் எனவும் தானே தனிமையிலேயே தன் மகனை வளர்த்து கொள்கின்றேன் எனவும் சொல்லிவிட்டாள்


தனஞ்சயனும் அடிக்கடி கௌரி வீட்டுக்கு போகாவிட்டாலும் மாதம் ஒருமுறை கௌரி வீட்டுக்கு வந்து தேவையான உதவிகளை செய்து வந்தான். தனஞ்சயன் மனதில் சஞ்சலம் ஏற்பட ஆரம்பித்தது. கௌரி இளம்பெண்ணாக தானே இருக்கின்றாள். மனோகரன் தான் இறந்து விட்டானே. நானும் திருமணம் ஆகாதவன், என மனதில் ஏதோ கணக்குப் போட்டான். இதமாகத் தான் இருந்தது. மனது கிளுகிளுப்பாக இருந்தது. இந்த எண்ணங்கள் ஓடிய போது அவனை அறியாமலே கால்கள் கௌரி வீட்டை நோக்கி நடந்தன. மாலை நேரம் சூரியன் மேற்கே மறைய தொடங்கி விட்டான். தனஞ்சயன் கௌரி வீட்டு அழைப்பு மணியை அழுத்திய போது கதவு திறந்துகொண்டது. எதிரிலே கௌரி ஈரத்தலையை துவட்டியபடி நெற்றியில் விபூதி சந்தனம் பூசிய படி அழகுச் சிலையென நின்றாள். “ஓ இன்று பிரதோஷம், விரதத்திற்கான பூசையை முடித்து விட்டு வருகின்றாள் போலும்”. தனஞ்சயன் மனதிலே எண்ணிக்கொண்டான். தன் கட்டுப்பாட்டை மீறிய அவன் கெளரியை அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

கௌரி இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை பெரிய போராட்டத்தின் பின் தனஞ்சனிடமிருந்து விடுபட்ட அவள், மிகுந்த வெறுப்புடன் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். “வெளியே போ நாயே! நம்பிக்கை துரோகி, இனிமேல் என் கண்ணில் முழிக்காதே! இருந்துபார் உன்னுடைய கடைசி காலத்தில் நீ அனாதைப் பிணமாக தான் சாவாய். உனக்கு எந்த மனித உதவியும் கிடையாது. உன்னை சுற்றி எறும்புக்கு கூட்டம், மொய்த்த படி, உன்னுயிரை படிப் படியாகச் சாகடிக்கட்டும். நான் சொன்னது நடக்கும்” என்று சொன்னபடி அவனை வெளியே தள்ளி கதவைப் பூட்டிக் கொண்டாள்.

நான் ஏன் அனாதைப் பிணமாக சாகப்போகிறேன்? எனக்கென்ன உறவுகளா இல்லை? என்று எண்ணிய வண்ணம், தன்னூருக்குப் புறப்பட்டான். புகையிரதத்தில் ஏறியமர்ந்தவன், அமரமுடியா ஆத்திரத்தில் வாசல்கம்பியைப் பிடித்தவண்ணம் கோபமாக எழுந்து நின்றான். “அம்மாவிடம் சொல்லி பெண் பார்க்கச் சொல்லி உடனடியாக திருமணம் செய்து நான் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அவளுக்கு அப்பத்தான் புத்தி வரும், நல்ல வாழ்க்கையை தவறவிட்டேன் என கவலை வரும்”. என எண்ணியபடி நின்று கொண்டே ஒரு காலைத் தூக்கிய போது, மறு கால் சறுக்கிவிட புட் போர்டில் இருந்து கீழே விழுந்து விட்டான். அவன் விழுந்ததை புகைவண்டியில் இருந்து யாரும் பார்க்கவில்லை. இரவு பத்து மணி போல விழுந்தவன் காலை 5 மணிக்கு ஆலய மணி ஓசை அடித்துக்கொண்டிருந்தது. 7 மணி நேரமாக அவன் உடலை எறும்புகள் தின்று கொண்டிருந்தன பழைய எண்ணங்கள் அவனை புரட்டிப் போட பத்தினி சாபம் பலித்து விட்டது என்று வாய் முணுமுணுக்க மெதுவாக கண்ணை மூடினால் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. “விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல், தீமை புரிந்தொழுகு வார்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க.

“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்,
தீமை புரிந்தொழுகு வார்”
பொருள் :-
நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

எழுத்து,
மங்கை அரசி.