இளையதளபதி விஜய் அவர்களுடைய 64வது படத்தின் பெயர் நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது இந்த கட்டுரையின் மூலமாக மாஸ்டர் என்றால் யார்? நீங்களும் மாஸ்டராக மாற முடியுமா? இளைய தளபதி விஜய் அவர்கள் உண்மையிலேயே ஒரு மாஸ்டரா! என்ற 3 கண்ணோட்டத்தில் இந்தக் கட்டுரை அமைய இருக்கின்றது வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
மாஸ்டர் என்றால் ஒரு துறையில் அறிவும் திறமையும் கொண்டவர் என்று அர்த்தம். தமிழில் கூற வேண்டுமென்றால் வாத்தியார் என்று கூறலாம். நீங்கள் இருக்கும் துறையில் அல்லது, உங்கள் இலட்சியமாக இருக்கின்ற துறையில் நீங்கள் மாஸ்டர் ஆக வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?

1)முதலில் அந்தத் துறையை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
2)இரண்டாவதாக அந்தத்துறையில் சாதித்த. சாதித்துக் கொண்டிருக்கின்ற ஒருவரை குருவாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
3)மூன்றாவதாக அவரை குருவாக ஏற்றுக் கொண்டதன் பின்பாக அவருடைய கொள்கைகளை வழிகாட்டல்களை சரியோ? தவறோ? என்று ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான்காவதாக நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கென்று கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக உங்கள் கொள்கைகள் சரியாக இருக்கின்றதா? என்று பிறர் கூறுகின்ற கருத்தை வைத்து நீங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆறாவதாக சரி பார்த்து அதன் பின்பாக அந்த கொள்கையிலிருந்து எந்த காலகட்டத்திலும் மாறுபடாமல் இருக்கவேண்டும்.
ஏழாவதாக இப்போது நீங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட அவருடைய கொள்கையும் உங்களுடைய கொள்கையும் ஒத்துப்போகின்றன அல்லது வேறுபடுகின்றது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
எட்டாவதாக இரண்டு கொள்கைகளையும் வைத்துக்கொண்டு அதிலிருந்து திருத்தமான ஒரு முழுமையான இறுதிக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
ஒன்பதாவதாக அந்த இறுதிக் கொள்கையிலிருந்து எவர் கூறினாலும் எந்த கால கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலகாமல் இருப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பத்தாவதாக உங்களுடைய கொள்கைகளை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இப்படி செய்தீர்கள் என்றால் நீங்களும் மாஸ்டர் ஆகலாம். அதாவது வாத்தியார் ஆகலாம். இப்போது இளைய தளபதி விஜய் அவர்கள் ஒரு வாத்தியாரா? என்று பார்ப்போம்.
சினிமாத்துறைக்கு வரும்பொழுது எதுவும் தெரியாமல் வந்தார். அவருடைய தந்தையைக் குருவாக ஏற்றுக்கொண்டு,
தந்தை சொல்லிய அனைத்தையும் சரியா? தவறா? என்று பிரித்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் தனக்கென்று ஒரு கொள்கையை உருவாக்கினார்.
இரண்டு கொள்கைகளையும் வைத்து மூன்றாவதாக அரசியல் வேண்டுமா? வேண்டாமா? என்று இப்போது சிந்தித்து மூன்றாவது கொள்கையை உருவாக்குகின்ற நிலையில் இருக்கின்றார்.
ஆகவே மாஸ்டர் ஆகுவதற்கு தகுதி உடையவராக இளையதளபதி விஜய் அவர்கள் இருக்கின்றார் அதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

நீங்களும் மாஸ்டர் ஆக வேண்டுமென்றால் இந்த படிக்கட்டின் படி ஒவ்வொன்றாக செய்து பயணித்திருந்தால் நீங்களும் மாஸ்டர் ஆக முடியும் நன்றி வணக்கம் .
எழுத்து,
சிந்தனை சிவவினோபன்