காற்றில் ஒரு மாற்று உணவு!

மனிதன் உயிர் வாழ காற்று அவசியமானது, ஆனால் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு மனிதனால் உயிர்வாழ முடியாது. சுவாசத்திற்கு உதவும் காற்றானது உணவையும் தந்து விட்டால் நல்லது தானே அதுமுடியுமா? முடியும் என்கிறார்கள் பின்லாந்தை சேர்ந்த “சோலார் புட்ஸ்”( Solar Foods).

காற்றிலேயே மாசாகவே கணிக்கப்படும் CO2 காபனீரொட்சைட்டு வாயுவை, சூரிய மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு ‘சோலெய்ன்’ என்னும் பெயருடைய சத்துமாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது சோலார் புட்ஸ்.

தானியங்களை சேர்த்து செய்யும் சத்து மாக்களில் இருக்கும் சுவை, புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பும் சேர்ந்த சோலெய்ன் புரதமாவைக், காற்று மாசில் இருந்து சோலார் புட்ஸ் தயாரிக்கின்றது.

ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு, ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை ஆனால் சோலெய்னிற்கு வெறும் 10 லிட்டர் தண்ணீரே போதும். பருவ நிலை மாற்றத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவிற்கும் பஞ்சம் ஏற்படாமல், மனிதனுக்கு சத்துணவு மாவாக சோலெய்ன் மாவை விற்பனை செய்யலாம் என சோலார் புட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்னைய காலங்களில் முனிவர்களும் யோகிகளும் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உணவு இன்றி நிஷ்டையில் இருந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள் காற்றிலிருந்து தமக்கான உணவையும் நீரையும் எடுத்துக் கொள்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. இதுபோன்று இப்போதய விஞ்ஞானிகளும் அதே காற்றில் இருந்து நேரடியாக உணவை தயாரிக்க தொடங்குகின்றார்கள்.

காற்றின் கழிவில் உணவு இருக்கின்றது, மனிதனின் கழிவாக கணிக்கப்படும் சிறுநீரில் நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற சரிவான பொருட்கள் உள்ளன, இவற்றை தாவரத்திற்கான உரமாக மாற்ற முடியும் என்கின்றது அறிவியல். ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு(E.O.O.S) சுவிஸ்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (E.A.W.A.S) குளியலறை கலன்களைத் தயாரிக்கும் லாபென் ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன கழிப்பிடங்களிலிருந்து சிறுநீரை பிரித்து எடுத்து, கிருமிகளின்றி சுத்திகரித்து, சுத்தமான உரமாக உருவாக்கினர். இந்த உரத்திற்கு “ஆரின” எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளிற்கும் போடலாம், என சுவிஸ் வேளாண்மை துறை சான்று வழங்கியுள்ளது. பொதுக் கழிப்பிடங்களில் உரத்தொழிற்சாலை உருவாக்கும் இத் திட்டம் நல்லதுதானே!


எழுத்து,
மங்கை அரசி.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *