அறிவியலுடன் கூடிய ஆன்மிகம்

கண்ணுக்குப் புலப்படாத உயிருள்ளவரை மனித வாழ்வு உடல் இயக்கம் உள்ளதாக இருக்கும். மின்சாரம் மின் கம்பிகளில் ஓடுவதை போல உடலில் உயிர் ஓடிக்கொண்டு இருக்கின்றது. மின்னோட்டத்தின் தடையோ மாற்றமும் ஏற்பட்டால் அந்தக் கருவி பழுதாகிவிடும் இதைப்போலவே உயிர் ஓட்டத்தில் மாற்றமோ தடையோ ஏற்பட்டால் உடலில் வலி நோய் என்பன ஏற்படும் உறுப்புக்கள் பாதிக்கப்படும் மின்சாரம் செல்லும் கம்பியை சுற்றி காந்தம் உருவாவதை போலவே மனித உடலை சுற்றி காந்த அடர்த்தி இருக்கும் இந்த ஜீவகாந்த அடர்த்தி ஒருவனின் அறிவாட்சித் திறனோடு தொடர்பு கொண்டது என்பதை தற்கால மருத்துவம் மனோவியல் மற்றும் தத்துவ முறைகள் நிரூபித்துள்ளன.

ஒரு மனிதனின் உடல் மன ஆற்றல்களை மேம்படுத்தி அழகியல் பழக்கம் வாழ்வியல் தத்துவங்களை ஒத்துப் போவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனிற்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளான மற்றவர்களிடம், அன்பாகவும் நன்றியுணர்வுடன் பழகுதல், தனது தவறுகளை திருத்திச் செயல்படும் மனத்திறன், சூழ்நிலைகளைக் கட்டுப்பாடுடனும் சுய ஒழுக்கத்துடனும் கையாளுதல், நல்லெண்ணத்துடன் கூடிய நேர்மை குணம், புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு இவை அனைத்தும் ஆன்மீகம் கற்றுக் கொடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை

“மதங்களும், கலைகளும், விஞ்ஞானமும் ஒரு மரத்தின் பல்வேறு கிளைகள்” என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். பரிமாண வளர்ச்சி தத்துவத்தை மொழிந்த சார்லஸ் டார்வின் “மனித குலமும் இந்த பிரபஞ்சமும் இறைவன் இருப்பதற்கான மிகப்பெரிய அத்தாட்சி” என்கின்றார். இன்றைய தொலை தொடர்பு தொழில் நுட்பத்தின் தந்தையான விஞ்ஞானி மார்க்கோனி “இறை உணர்வுடன் ஜெபத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குண்டு, நான் ஒரு கத்தோலிக்கன் என்பதனால் மட்டுமல்ல நான் ஒரு விஞ்ஞானி என்பதனாலும் இறை நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன்.” என்கிறார் மார்க்கோனி.

ஆன்மீகமும்  இறை நம்பிக்கையும் அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல என்பது போன்ற வாதத்தை சிலர் வைக்கின்றார்கள். அது தவறானது, தன்னம்பிக்கையை ஆன்மீகம் வளர்கின்றது.  தோல்வியை கண்டு துவளாத மன நிலையை ஏற்படுத்துகின்றது.

உடல் உள மன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிமுறைகள் பகவத்கீதையில் காட்டப்பட்டுள்ளது சிறந்ததொரு அறிவியல் நூலாக திருமந்திரம் காணப்படுகின்றது. பல அறிவியல் விடயங்கள் அதில் காட்டப்பட்டுள்ளது. பொதுமறையாம்  திருக்குறளில் வாழ்வியல் அறிவுரைகள் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, ஆராய்ந்து பார்த்தோம் என்றால் ஆன்மீக நூல்கள் என நாம்  விலக்கி வைக்கும் பல நூல்களில் அறிவியல்  மிகுந்து இருப்பதும் நோயைத் தீர்த்து வைப்பதற்கும்,  தணித்து வைப்பதற்கும், உருவாகாமல் இருப்பதற்குமாகவும்  உணவே மருந்து  எனவும்  இங்கே அதிகமாக பொக்கிஷங்கள் அறிவுடன் விளக்கப்பட்டுள்ளன.

இவற்றை மத வேறுபாடின்றி புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.


எழுத்து,
மங்கை அரசி.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *