ஊருக்குத் த(தா)ன் உபதேசம்
நாட்டின் தலைவர் என்றவகையில் நியாயமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியது அவசியம் என அவர் உணர்ந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளைக் களைய வேண்டும் என்றால் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு சரியான வகையில் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தீர்ப்பணமாக இருந்தார்.

பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை என்பன நாட்டில் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தது. பாடசாலை மாணவிகள், சிறிய பெண்குழந்தைகள் உட்பட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தனர். கொலைகளும் நடந்தேறின.

தங்கு தடையின்றி போதைவஸ்து வியாபாரம் தலை விரித்து ஆடியதனால் தான் மேற்படி குற்றங்கள் மேற்படி குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை உணர்ந்து கொண்ட தலைவர் போதை வாஸ்து குற்றவாளிகளிற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்னும் சட்டத்தை விதித்தார்.

பல தொண்டு நிறுவனர் மற்றும் அயல் நாட்டுகல் மற்றும் உதவி புரியும் பெரிய நாடுகள் எல்லாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், தலைவர் தனது நோக்கத்தில் இருந்து விலகவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல எதிர்ப்புக்களை எதிர் கொண்டார். மூன்று மாத இலுப்படியின் பின் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனைக்கு கைதிகட்கான (தூக்கில் இடும் நிகழ்வு) கையொப்பத்தை தலைவர் இட்டு விட்டார். திகதிகள் குறிக்கப்பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படத் தொடங்கி விட்டது. இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட வண்ணம் இருந்தது.

தலைவர் எதிர் பாராத வண்ணம் போதைவியாபாரத்தின் பெரிய முதலைகள் பிடிபட்டன. அது வேறு யாருமல்ல தலைவரின் அருமை மகளின் கணவரும், அவர்கள் பெற்றேடுத்த சீமந்தப் புத்திரனும் தான். சட்டத்தை வளைத்துவிட தலைவரால் முடியவில்லை. உலகம் முழுவதும் தெரிந்த இரகசியத்தை மூடி மறைக்க முடியுமா?
இதயம் முழுவதும் வலியெடுக்க மகள் வாலிப பேரன் உட்பட மருமகனுக்கும் மரணதண்டனை நிறைவேற்றும் படிவத்தில் கையொப்பமிடும் பொழுது கைகள் நடுங்கின, மறுகணம் தன நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார்.

எழுத்து,
மங்கை அரசி.