மரணத்திற்கு ஒரு மாற்று மருந்து.
உங்களுக்கு மரணிக்க ஆசையா என்று கேட்டால், ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து ஒரே வார்த்தை ஒலிக்கும், “இல்லை எனக்கு மரணிக்க ஆசை இல்லை இல்லை”. இதோ மரணிக்க ஆசை இல்லாதோர் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள். மரணம் என்பது ஒருவகையான உடலின் ஊனம். அல்லது உடலின் பசி என்று சொல்லலாம். உடல் எப்போதும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தவண்ணமே உள்ளது. புரியும் படி சொல்லவேண்டும் என்றால். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு தாகம் ஏற்படுகின்றது, பசிக்கின்றது, கழிவகற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதெல்லாம் அத்தியாவசிய செயற்பாடு என்று மனிதன் வகைப்படுத்தியுள்ளான்.

இப்படி அத்தியாவசிய செயற்பாடுகளைச் செய்யாமல் விட்டால், இதற்குப் பதில் உடல் மரணத்தை நாடும். ஆகவே உடல் ஒன்றை எதிர்பார்க்கின்றது அதைக் கொடுக்காவிட்டால் அதற்குப் பதில் மரணத்தை எதிர்பார்க்கின்றது. இதுதான் இலகுவான புரிந்துகொள்ளுதல். அப்படி என்றால் உடல் எதிர்பார்க்கும் உணவைக் கொடுத்தால் எமக்கு மரணம் வராமல் அல்லவா இருக்க வேண்டும்? அப்படி இருக்கையில் தினமும் மூன்றுவேளை உணவுண்ணும் பக்கத்துவீட்டு அண்ணனும் 35 வயதில் அல்பாயுளில் மரணமடைந்த செய்தி தான் என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.
அது எப்படி மரணம் என்ற ஒன்று நிகழலாம்? உடலிற்குத் தேவையான ஒன்றைக் கொடுக்கும் போதும் உடல் மரணத்தை நாடும் என்றால் அதில் நியாயம் இல்லையே என்ற யோசனையுடன் நடந்து சென்று கொண்டிருந்த நான் தெருவில் கண்ட ஒரு காட்சி என்னை தெளிவுபடுத்தியது. அதிக எடையோடு தெருவில் சென்ற ஒரு வண்டி கவிழ்ந்து விழுந்து கிடந்தது, அதை பார்த்த அங்கே அதிக எடையோடு வந்த இன்னுமோர் வண்டி, அந்த இடத்திலேயே நின்று அதன் எடையை இன்னுமோர் வண்டியில் இறக்கி வைத்துக் கொண்டிருந்தது. இப்போது எனக்குத் தெளிவு பிறந்தது.

உணவு என்பதால் மரணம் தடைப்படுவது கிடையாது, மரணம் தள்ளிப் போடப் படுகின்றது. மரணம் தடைப்பட வேண்டும் என்றால் மருந்து உண்ணவேண்டும். மருந்து என்றால் என்ன? உணவு என்றால் என்ன?
விருந்து சமைத்து உண்டால் அது உணவு. வீரியம் உள்ளதை அறிந்து அரைத்து உண்டால் அது மருந்து. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், உடல் ஏன் கழிவகற்றுகின்றது? போதுமான உணவைக் கொடுத்தால் எதற்காக உடல் மிகுதியென்று கழிவக்கற்ற வேண்டும்? அதற்க்கு ஒரே காரணம் நாம் தேவைக்கு அதிகமாக வயிற்றை நிரப்பி வைக்கின்றோம் அதனால் உடல் உழைத்துக் களைத்து உயிரை இழக்கின்றது. நாம் உண்ணும் உணவு சிகப்பு இரத்தமாகவும் வெள்ளை இரத்தமாகவும் உடல் முழுதும் சென்று எம்மை இயக்கிக் கொண்டு உள்ளது. சிகப்பு இரத்தம் என்னை உற்சாகமாக வைத்திருக்கவும், வெள்ளை இரத்தம் எம் உடலில் உள்ள தீய கிருமிகளை அழிக்கவும் பயன் படுகின்றது. இந்த இரண்டையும் சீர்படுத்தும் அளவு மருந்து உண்டாலே போதும். உடல் மலம் கழிப்பதை நிறுத்திவிடும். இதனால்த் தான் சித்தர்கள், தியானத்தில் அதிக காலம் அப்படியே அமர்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்கள்.

இப்போது ஒரு சந்தேகம் வந்திருக்கும் அது எப்படி மருந்துணவைக் கண்டு பிடிப்பது அதில் எப்படி உட்கொள்ளும் அளவைக் கண்டு பிடிப்பது என்று சந்தேகம் வரும். அதற்கு நீங்கள் முதலில் தமிழ் படிக்க வேண்டும், தமிழில் உள்ள பழைய நூல்களைத் தேடிக் கற்க வேண்டும். இந்த கட்டுரையின் முடிவில் இப்போது உங்களுக்கு ஒரு சில காயகல்ப உணவுகைக் குறிப்பிடுகின்றேன் அதை உட்கொள்ளும் முறையையும் சொல்லுகின்றேன், செய்து பாருங்கள். அறுகம்புல்லு, துளசி, முருங்கையில்லை, நெல்லிக்காய்.

மேலே சொன்ன உணவுப் பொருட்களை தாவரத்தில் இருந்து பறிக்கும் போதே மந்திரங்கள் சொல்லி அல்லது தேவாரங்கள் பாடிப் பறிக்க வேண்டும். அதற்கு காரணம் தாவரத்தில் இருந்து பறிக்கும் போது, தாவரம் அதன் வலியை விஷமாகக் கக்கிவிடாமல் இருக்க மந்திர ஒலிகளை எழுப்பவேண்டும். அதன் பின் பறிக்கப்பட்ட தாவர பகுதிகளை சூரிய நிழலில் காயவைக்கவேண்டும். முக்கிய கவனம் சூரிய ஒளியில் இல்லை, சூரிய நிழலில். அதாவது பகல் வேளையில் ஒரு குடை அல்லது தாள்வாரத்தின் நிழலில் காயவைக்கவேண்டும். காய்ந்து தொட்டால் உதிரும் பக்குவத்தில் அதை எடுத்து நன்றாக சாம்பலாகும் வண்ணம் அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த துகள்களை உள்ளங்கையில் எடுத்து தேன்குளைத்து அருந்தினால் அது வாய் முதல் வயிறுவரை சென்று வேகமாக குருதியில்க் கலந்து, உடலிற்கு மருந்து வழங்கும். இதன் மூலம் உடல் அதிக சக்தியையும், குறைந்த வேலையையும் பெறும். இதோடு உங்கள் ஆத்மாவையும் ஒன்றிக்க வைத்தால், மரணமின்றி மகிழ்ந்து வாழலாம்.