மோனையில் வீற்றுள்ள மானே.

கவிதையை கவனமாக வாசியுங்கள்.
இதில் ஒரு மந்திரம் ஒளிந்துள்ளது.
தலைப்பில் விடையுண்டு.

மோனையில் வீற்றுள்ள மானே.

பேரிடர் கொண்ட வாழ்வினில்,
தையலே என்தன் தலை நீயே.

பெரும் பணி புரிந்திடும்,
துரும்பெனத் துவண்டிடும் – உயிரே,
ம்முறை உன் துயர், 
பையவே மறையுமோ?

மணவறை அழகு நீ,
ங்ஙன உயர்வினி, – குழவியைக்
கையேந்தும் இறைவி நீ.

மகப்பேறு கண்டபின் 
ட என்ற எழுத்தைப் போல், 
ந்தக் குழவியைச் சுமந்திடும், 
தைரியத் தாய்மை நீ.

அன்பினில் ஊறிய நடமாடும், 
ரிக் யசுர் சாம அதர்வணம் நீ
வைத்திடும் வாதமே வீட்டினுள் சட்டமே. 

தென்னை போல் தன்னையே தாரைவார்க்கும், 
ரிஷி உன்னை நான் எண்ணியே தலைவணங்கில், 
வையகம் வாழுமோ? உய்வுறுமோ?

பேதமின்றி பெற்றேடுக்கும் தாய்மையே, 
ரிஷப வாகனம் போல் வீற்றிருக்கும அன்னையே, – உன்
இளமையதை எனக்களித்த இறைமையே, 
ம்சைகள் பொறுத்திட்ட என்னினிய பெண்மையே,

வாழ்க வாழ்க 
உன்னால் ஓடிடும் உலகக் கடிகாரம், 
உன்பேர் பாடிடும் ஒவ்வொரு நாளும்.
வாழ்க வாழ்க.

சிந்தனை சிவவினோபன்

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *