பெண்கல்வியின் ஆரம்பப் புள்ளி.

பெண்களின் சுயமரியாதைக்கு கல்வி இன்றியமையாதது. செல்வியாகினும் திருமதியாகினும் மதியோடு இல்லாவிடின் வெறும் மலராக வாழ்ந்து வாடுவர். ஆகவே கல்வியென்ற அணை இன்றியமையாத துணை.

பெண்கள், ஆண்களுக்குச் சமமாக பல துறைகளில் ஈடுபடுகின்றனர். அண்டத்தையும் கடந்து விண்வெளியில் ஆராய்ச்சி செய்கின்றனர் இன்று 2k காலத்தில். ஆனால் 16ஆம் நூற்றாண்டில் பலியாகிக்கொண்டிருந்த பெண் சமுதாயத்தில், பின்தங்கிய நிலையில் இருந்த இவ்வுலகம் கண்ட பெண் தலைமை பற்றியே இவ்வுரை ஆரம்பம். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பூண்ட முதல் பெண்மணி இவர்.

ஷ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த ஜுலியானா மோரல் என்ற பெண், இவர் தாயை இழந்து தந்தையால் வளர்க்கப்பட்டாலும், இவரிற்கு தகுந்த கல்வியறிவை கரைத்துக் குடிக்கும் வளம் வாய்த்திருந்தது. நான்கு வயதிலேயே லத்தின், கிரேக்கம், ஹிப்ரு மொழிகளைக் கற்றார்.  வீட்டிலிருந்தே வேண்டிய கல்வியறிவைக் கற்றுப் பெற்றுக்கொண்டார். தந்தை செல்லுமிடமெல்லாம் மகளாய் கூடவே சென்றாலும் தன் சொந்தவாழ்க்கையில் கல்வியை விட்டுவிடாமல் கொண்டே சென்றார். மற்றைய குழந்தைகள் போல் மறைந்து முடங்காமல், தினசரி பேச்சு, ஆராய்ச்சி, நெறிமுறைகள் மற்றும் இசை என்று பயனுள்ள பல பணிகளில் நேரம் கழித்ததால், வாழ்வைக் கணித்தால், அதன் பயன் 12 வயதிலேயே ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி வெளியிட, தொடர்ந்தது அவள் பயணம் இயற்பியலோடு மேட்டா பெளதீகம் மற்றும் சட்டம் என்று பட்டம் பயின்றாள்.

1608 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சிக் கட்டுரையை பொது மக்கள் முன்பும் அங்கு, இளவரசி முன்பும் வெளியிட சிவில் சட்டத்தில் முனைவர்ப் பட்டம் இவரைத் தேடி வந்தது. அதைத் தொடந்து 30 வருடங்கள் கான்வெண்டில் பெரிய பதவியில் இருந்து, மாணவர்களுக்கு கல்வியும் புகட்டி வந்தார். பொதுமக்களிற்கு அறிவியலைப் புகட்டிய தேவதை என்று எல்லோராலும் புகழப்பட்ட ஆசிரியையாக விளங்கிய ஜுலியானா மோரல் மகளிர் தினத்தில் நினைத்துப் பார்க்க வேண்டிய பெண் சிகரமாவார். 1653 இல் இவர் நோயால் மரணிக்க உலகமே ஒருகணம் குலுங்கி அழுததாம். இன்றும் என் எழுத்தில் வாழும் இவரைப் போல வாழவேண்டும் பெண்களே வாரீர்.

எழுத்து,
மங்கை அரசி.

2 thoughts on “பெண்கல்வியின் ஆரம்பப் புள்ளி.”

  1. உண்மைதான். மற்றைய மொழிகளைக் கற்கும் வாய்ப்பு ஔவையாருக்குக் கிடைத்திருந்தால் மன்னனிடம் நெல்லிக்கனி மட்டுமா கிடைத்திருந்திருக்கும். அன்றே மன்னரிடம் பெரும் புகழ் பெற்றவரல்லவா? இருந்தாலும் மொழி தாண்டி தேடல் செய்திருக்கின்றீர்கள். தொடருங்கள்

    1. தமிழில் உதாரணம் கூறப் பலருண்டு, நீங்கள் சொன்ன ஔவையே அதுபோல்
      அணுவைப் பற்றிப் பேசிய அறிவியல்த் தாய் தான்.
      நன்றி கௌசி ஆன்ரி. உங்கள் பேரிலும் ஔவையும் அறிவும் புகுந்து விளையாடுகின்றன.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *