உங்கள் ஏழாவது தலைமுறையின் தலையெழுத்து.
அறிவியல் வளர்ந்து வரும் இந்த அகிலத்தில் இலகுவாக எதிர்காலத்தைக் கணித்துவிட முடிகின்றது. ஆனால் கணிப்புக்கள், கணித்தபடி நடக்குமா என்றால், இதோ வாருங்கள் பார்ப்போம் எங்கள் ஏழாவது தலைமுறை எப்படி இருக்கும் என்று.
2000ஆம் ஆண்டில் இணையத்தளம் பிரபல்யமடையும் போது எவரும் எதிர்பார்த்திகருக்கமாட்டார்கள், காசை விடப் பெறுமதியானது கணனியில் சேமிக்கப்படும் எம் தகவல்கள் என்று. ஆம் இந்த இலத்திரனியல் உலகில் எமக்கு எத்தனையோ ஆடம்பர பொருட்கள் மலிவாகவோ அல்லது இலவசமாகவோ கிடைத்துவிடுகின்றது. ஆனால் இலவசமாகக் கொடுப்பவர்கள் எப்படி சம்பாதிக்கின்றார்கள் என்று தெரிந்துகொண்டீர்கள் என்றால் எந்த இலவசத்தையும் இனிமேல் பயன்படுத்தவே மாட்டிர்கள். இலவசமாகக் ஒரு பொருள் கிடைக்கின்றது என்றால் அந்தப் பொருளை பெற்றுக்கொள்ளும் நீங்கள் அங்கே உங்களை விற்கிறீர்கள் என்பது தான் உண்மை.
இலவசத்திற்கும் இந்தத் தலைப்பிற்கும் ஏழாவது தலைமுறைகும் என்ன தொடர்புண்டு என்று ஆச்சரியமாகப் பார்க்கும் உங்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் காத்துள்ளது. ஏழாவது தலைமுறையில் செலவு செய்ய காசே இருக்காது என்பது தான் அந்த அதிர்ச்சி. அதை புரிந்து கொள்ள 2000ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள மாற்றத்தை கோர்வையாக கோர்த்துக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஒரு சில அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தோன்றும் சிந்தனை எதுவெனில் ஏழாவது தலைமுறையில் நாமே இருக்க மாட்டோமே பின்பெதற்கு இதை எல்லாம் பற்றி நாம் சிந்தித்து சலித்துக் கொள்ளவேண்டும், என்று சிந்திக்கும் நபரில் நீங்களும் ஒருவரா? இல்லை இந்தச் சிந்தனை உள்ள நபர் உங்கள் அருகில் உள்ளாரா? இருந்தால் அவரின் காதில் திருகி அருகில் அமர்த்தி மேற்கொண்டு வாசிக்க ஆரம்பிக்கவும்.
பணம் எவ்வாறு உருவானது என்று தெரிந்து கொண்டால் பணம் எவ்வாறு அழியப் போகின்றது என்று புரிந்துகொள்ள முடியும். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்பிருந்தது. ஒரு நாட்டில் உணவு, இன்னொரு நாட்டில் உடை, ஒரு நாட்டில் அணிகலன் இன்னொரு நாட்டில் ஆயுதம் என்று இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிறப்புகள் இருந்தன. ஆதிகால மனிதனுக்கு அடுத்தவர் பொருள் மீது ஆசை வந்தால் உடனடியாக போர்புரிந்து ஆசைப் பட்டதை அடைந்து மகிழ்ந்தான். அதன் பின் அறிவு வளர, இருந்த சிறப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்து வாழ்ந்துவந்தனர் அதனால் பொருட்களின் பெறுமதி என்று ஏதும் கிடையாது, யாருக்கு எது தேவையோ அதை பெறுவதற்கு தன்னிடம் உள்ளதைக் கொடுத்து பரிமாற்றிக் கொண்டனர் அதுவே பண்டமாற்று என்று பேர்பெற்றது. இந்தப் பாண்டமாற்றுத் தான் உலகின் முதல் வர்த்தகத்திற்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து உலோகத்தில் மோகம் கொண்ட மனிதன் உலோகத்தை உருக்கி அதை ஒரு அடிப்படை பொருளாக்கி நாணயப் பரிமாற்றை கண்டுபிடித்தான். இப்படித்தான் காசு என்ற காலன் உருவானான். காலனுக்கு காலனாக வந்த புதிய பொருள் தான், கணனி என்பதை அறிந்திடாத எம் பாட்டன் செய்த அதே தவறை நீங்களும் செய்யாதிருக்கவே இந்த எச்சரிக்கைக் கட்டுரை உருவாக்கியுள்ளேன்.
ஒரு காலத்தில் உணவை மட்டும் எதிர்பார்த்து ஓடிய மனிதன் இன்று உலகில் எதை நோக்கி ஓடுகின்றான் என்று தெரியாமலேயே ஓடும் நிலை உருவாகியுள்ளது. எமக்குத் தேவையானதை நாமே உருவாக்குவோம் என்று உலகிற்கு முறையான விவசாயத்தை அறிமுகம் செய்தான் தமிழன். உலகின் மற்றைய பகுதியின் உணவுமுறையையும் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள உணவுமுறையையும் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருக்கும்.
தமிழரும் மனிதர்கள் தானே!, மனிதர்களின் குணம் மாற்றத்தை எதிர்பார்ப்பதும், அதற்கேற்றால்ப் போல் தன்னை மாற்றிக் கொள்வதும். அதனால் தான் இன்று விவசாயிகளின் நிலை தற்கொலையில் வந்து நிற்கின்றது. ஆனால் இந்த நிலையும் இப்படியே நின்றுவிடாது, மாறிக்கொண்டே வரும் உலகில், இன்றிலிருந்து ஏழாவது தலைமுறையில் இந்த உலகில் எவர் கைகளிலும் காசிருக்காது. ஆகவே உங்கள் கொள்ளுப் பேரனுக்கோ அல்லது பேத்திக்கோ உதவ விரும்புகிண்றீர்களா? பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள், படிப்பைச் சேர்த்து வையுங்கள். அதாவது ஒருவனின் கல்வி காலங்கள் தாண்டிப் பேசும் என்று தமிழர்கள் சொன்னதை இன்று விஞ்ஞானி ஆராய்ந்து கண்டு பிடித்துச் சொல்கின்றான் DNA என்று ஒன்று உண்டு அதன் மூலம் 7 தலை முறை தகவல்கள் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உண்டு என்று கூறப்படுகின்றது.
அது எப்படி சாத்தியம் என்றால், இதிகாசக் கதைகளை எடுத்துக் பாருங்கள் புயபலம் பொருந்திய ஒரு ஆண்மகன் சுமார் ஆறடி உயரம் கொண்டவனாக இருப்பான் என்று கூறப் படுகின்றது. ஆனால் ஒரு மகன் தந்தையை விட உயர்வாக இருப்பான். இப்படி இருக்கையில் நீங்கள் இப்போதும் எப்படி அதே ஆறடி உயரத்திலேயே இருப்பீர்கள். குறைந்தது 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைகளில் உள்ளவர் 6 அடி உயரம் இருந்திருந்தால் இப்போது இருக்கும் மனிதர்கள் குறைந்தது 9 அடி உயரமாவது வளர்ந்திருக்க வேண்டாமா? ஆனால் இப்போதும் அதே உயரத்தில் இருப்பதற்கு இந்த DNA தான் காரணமாக உள்ளது. ஆகவே ஏழாவது தலைமுறையில் பிறக்கவுள்ள உங்க 6 வது தலைமுறைக்கு உதவ நினைக்கும் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். அதை மனதில் தெளிவாகப் பதிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்க எதிர்கால சந்ததியிற்கு உதவியாக இருக்கும். இப்போது புரிகின்றதா நீங்கள் பள்ளியில்ப் படிக்கும் போது, உங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு சில மாணவர்கள் மட்டும் ஆசிரியர் சொன்னவுடனடியாக அதை புரிந்து சரியான பதிலை கூறுவார்கள் அதற்கு ஒரே காரணம் அவரின் DNA இல் உள்ள மூதாதயரின் அறிவு ஞானம்.
ஏழாவது தலைமுறையில் ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் உணவு சேர்ப்பதாக மட்டுமே இருக்கும். இப்போது கணனி மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் மனிதர்களையும் வீட்டினுள் அடைத்து வைத்து ஆட்சி செய்வதற்கு ஒரே காரணம், பணம் ஒன்று மட்டும் தான். அது எப்படி என்றால், பெரிய நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க உங்களிடம் தங்கள் பொருட்களை விற்கின்றது, ஆகவே விற்கும் நிறுவங்களிற்கு உங்களின் விருப்பு வெறுப்பு எது வென்று தெரிய வேண்டும் அதைத் தெரிந்துகொள்ளவே செயல்திறன் கூடிய இலத்திரனியல் சாதனங்களை உங்கள் வீடிற்கு அனுப்பியது, இப்போது உங்கள் உடலிலேயே பொருத்திவிட்டது. Smartwatch, Smartphone, Smartback, Smartcard எல்லாப் பொருட்களின் பெயரையும் பார்த்தீர்கள் என்றால் Smart என்று இருக்கும் அதாவது பொருட்கள் எல்லாம் Smart ஆகிவிட்டன மனிதர்கள் நாம் முட்டாள் ஆகிவிட்டோம். பணம் என்ற ஒன்றின் அழிவில் இந்த அகிலமே மீண்டும் ஆரம்ப காலத்தை நோக்கிச் செல்லப்போகிறது.
கச்சாய் எண்ணெய் தீர்ந்தவுடன் தொழிற்ச்சாலையும் வாகனங்களும் அழிந்துவிடும். தாவரங்களை அழித்து வீடு கட்டும் போது வெப்பநிலை அதிகரித்து உணவும் உயிர்களும் அழிந்துபோகும், இவை அனைத்தைம் பார்த்து வேதனைப்பட்டு, மகாபாரதத்தில் தர்மருக்கு சொர்க்கத்தில் கிடைத்த தண்டனை போல இறுதியாக மனித இனம் அழியத் தொடங்கும். மனிதர்களின் எண்ணிக்கை குறைவடைய புதிதாய் பிறக்கும் மனிதர்களுக்கு விமானம் தொழிற்சாலை போன்றவை எல்லாம் DNA களின் உதவியால் மட்டுமே தெரியவரும். அப்படி உணரும் மனிதர்கள் வான்மீகி இராமாயணம் எழுதியதுபோல, அகத்தியர் ஏட்டுச் சுவடிகள் எழுதியது போல கற்பனையில் அனைத்தையும் எழுதிவைத்து விட்டுச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து அதிக தாவரங்கள் வளர, புழு பூச்சி தொடங்கி விலங்குகளும் உருவாக மீண்டும் பிறப்போம் 5000 ஆம் ஆண்டில் மனிதர்களாக.