பறக்கும் தட்டில் இருக்கும் விஞ்ஞானம்
வாருங்கள் நண்பர்களே இன்று நாம் பறக்கும் தட்டில் ஏறி ஒரு பயணம் செய்வோம். உங்களுக்கு மறக்க முடியாத ஒரு விசித்திர அனுபவத்தைக் கொடுக்கவுள்ள இந்தப் பயணத்திற்கு, விண்வெளியின் விந்தை என்று பெயர்வைப்போம். விண்வெளியின் விந்தைகளில் ஒன்று தான் இந்த பறக்கும் தட்டு. உலகில் விசித்திரமான பல தருணங்கள் உண்டு, வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் விதிமுறைகள் உண்டு ஆங்காங்கே விதிவிலக்காய் உள்ள ஒரு சில பொருட்களில் ஒன்று தான் இந்த பறக்கும் தட்டு.
பொருட்கள் எல்லாம் ஏன் மேலிருந்து கீழே வீழ்கின்றது என்று கேள்வி எழுந்த போது பூமிக்கு புவியீர்ப்பு விசையுண்டு என்று கற்றுக் கொண்டான் மனிதன். அந்தப் புயீர்ப்பை எதிர்த்து விசை கொடுத்தால் பறக்கலாம் என்று மனிதன் கண்டுபிடித்தான். ஆனால் இந்தக் கண்டு பிடிப்பிற்க்கெல்லாம் ஒரு முன்னோடி தான் இந்த பறக்கும் தட்டு. மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டுபிடித்தான் என்று நாம் அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால், மனிதன் பறவையைய் பார்த்து பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுடன், அதற்காக கைகளில் இறக்கையை இணைத்து மலைகளில் இருந்து குதித்து முயன்று மடிந்தான். அப்படி இருக்கும் போதுதான் அவன் கண்களுக்கு பறக்கும் தட்டுக்கள் தெரிந்துள்ளது. இதற்கான ஆதாரங்களாக பல குகை ஓவியங்கள் உண்டு.
இன்று விமானம் உருவாக்குவதற்கு முக்கிய அடிப்படையே பறக்கும் தட்டுக்கள் தான். ஒரு வாகனத்தை உருவாக்கி அதற்குள் அமர்ந்து கொண்டு அந்த வாகனத்தைப் பறக்க வைக்க முடியும் என்று அறிவியலைக் கொடுத்தது இந்தப் பறக்கும் தட்டுக்கள் தான். இன்று விமானம் பறக்க வேண்டும் என்றால், ஓடுதளத்தில் வேகமாக ஓடவேண்டும் அவ்வாறு ஓடி தன் பாரத்திற்கு சமமான வளித்துணிக்கையின் அழுத்தத்தைப் உருவாக்கும் போது வானில் பறக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். அல்லாவிட்டால் உலங்கு வானூர்தி(Helicopter) தன்னுடைய இயங்கும் இறக்கைகளால் சுற்றியுள்ள வளித்துணிக்கைகளை இழுத்து கீழ்நோக்கு அழுத்தும் போது ஏற்படும் அழுத்தத்தால் தன்னுடைய பாரத்தை பூச்சியம் ஆக்கி வளிமண்டலத்தில் மிதக்கும் தன்மையை உருவாக்கி அதன் பின் இரண்டாவது இறக்கையைப் பயன்படுத்தி பயணிக்க ஆரம்பிக்கின்றது. இவையெல்லாம் மனிதன் கண்டுபிடித்த பறக்கும் சாதனங்களில் உள்ள விஞ்ஞானம் ஆனால் பறக்கும் தட்டில் இதெல்லாம் கிடையாது. பறக்கும்தட்டுக்கள் ஓடுதளத்தில் ஓடி எழுந்து பறப்பதில்லை, பறக்கும் தட்டில் மின்விசிறிகளும் இல்லை. அது ஒரு மூடிய கோளம் போன்றது. அதுவும் முழுமையான கோளம் அல்ல. இரண்டு சாப்பாட்டுக்கு கோப்பைகளை இணைத்தால் ஒரு உருவம் ஏற்படுமே அது போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு பறக்கும் சாதனமே பறக்கும் தட்டு.
இந்தப் பறக்கும் தட்டு எப்படிப் பறக்கின்றது என்ற ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தத் தொழில்நுட்பம் மட்டும் கைகூடினால், மனிதன் செலவில்லாமல் பயணத்தை மேற்க்கொள்ளும் தருணம் உருவாகும். அதற்க்கு பறக்கும் தட்டை யார் உருவாக்கினார்கள்? எங்கிருந்து வருகின்றது? என்ற அறிவியலைக் கண்டு பிடிக்க வேண்டும். பறக்கும் தட்டு என்றவுடனேயே அடுத்த நொடி நினைவிற்கு வருவது வேற்றுகிரக வாசிகள். ஸ்டீபன் ஹக்கிங்ஸ் (Stephen Hawking) உட்பட பல விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலின் படி பூமியில் உள்ள மனிதர்களை விட பல மடங்கி அறிவியலில் சிறந்த வேற்றுகிரக வாசிகள் அவ்வப்போது பூமி வந்து செல்கின்றார்கள் என்பது ஆங்காங்கே தகவலாகக் கசிந்தாலும். இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை.
1911 இல் காந்தவியல் மட்டும் கதிர்வீச்சுப் பற்றி ஆராய்ச்சி செய்த டெஸ்லா என்ற விஞ்ஞானி ஒரு பறக்கும் சாதனத்தை வடிவமைக்கின்றார் அது அச்சசல் பறக்கும் தட்டுப் போலவே இருக்கின்றது. அந்த அறிவியலை மேற்கொண்டு விரிவாக வடிவமைக்க அனுமதி மறுக்கப்பட்டு அவரின் கண்டு பிடிப்புக்களை முடக்கவும் செய்தாரகள் அக்காலத்தைச் சேர்ந்த அரசியல் ஞானிகள். இப்போது பறக்கும் தட்டு என்றால் என்ன அது எப்படி உருவாகி இருக்கும் என்று ஒரு விரிவான பார்வையை யோசிப்போம் வாருங்கள்.
எம் உலகம் எண்ணுக்கடங்காக கால வயதைக் கொண்டது அதில் மனிதர்கள் நாம் இப்போது அறிவுஞானம் பெற்று, சில ஆயிரம் வருடங்களைத் தான் ஊகித்துக் கண்டு பிடித்து வைத்துள்ளோம். ஆகவே இராட்சத உயிரினங்கள்(டைனோசர்) வாழ்ந்த காலத்தில் என்ன நடந்தது அதற்கு முன் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முடியாத சோக நிலையில் உள்ளோம். இவற்றை மனிதன் வாழ்ந்த குகை ஓவியங்கள் எஞ்சியுள்ள எச்சக் கூறுகளின் உதவியுடன் கற்பனை வடிவமாக கணித்து வருகின்றோம். உதாரணத்திற்கு இப்படி யோசித்துப் பாருங்கள் ஒரு 10 பேர் கொண்ட குழு விண்வெளிக்குச் செல்கின்றது சென்ற அனைவரும் மிகப் பெரும் அறிவியல் மேதைகள். அவர்கள் சென்ற அந்தக் கால கட்டத்தில் உலகில் மாபெரும் அழிவு ஏற்பட்டு உலகமே அழிந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம், ஒரு 10 வருட காலம் கழித்து கடின முயற்ச்சியின் பயனாக மீண்டும் பூமிக்கு வருகின்றார்கள் ஆனால் பூமியில் அனைவரும் அழிந்து விட்டார்கள். ஒரு சில காட்டுவாசிகள் தான் எஞ்சியுள்ளார்கள் என்றால், அவ்வாறு எஞ்சியுள்ள காட்டுவாசிகளுக்கு விண்ணில் இருந்து வந்தவர்களை பார்க்கும் பொது ஆச்சரியமாக இருக்கும் அவர்களை ஓவியமாகத் தீட்டி வைப்பார்கள். விண்வெளி ஆராய்ச்சி முடித்து மீண்டும் பூமி திரும்பிய அந்த விஞ்ஞானிகளுக்கு அறிவியல் ஞானம் இருந்தாலும் அதை செயல்படுத்த போதிய உலோகங்கள் மட்டும் சாதனைகள் இல்லாததால் தங்கள் விஞ்ஞானக் குறிப்புக்களை வாய்வழியாகவும் புத்தகங்களாகவும் எழுதி வைப்பார்கள். கால ஒட்டத்தில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்குப் பின் வரும் தலைமுறைகள் அதை ஆதாரமாக வைத்து கண்டு பிடிப்புக்களை செய்யும். இப்போது புரிகின்றதா எப்படி பறக்கும் தட்டுக்கள் உருவாகியிருக்கும் என்று? இவை அனைத்தும் எம் முன்னோரின் கண்டுபிடிப்புக்களாக இருப்பதற்கு பல வாய்ப்புக்கள் உண்டு ஆகவே எம்முடைய பழமையை நாம் மறக்காமல் மறைக்காமல் தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும்.